Saturday, January 27, 2018

உங்கள் ஜாதகத்தை எழுதும் சமூக வலைத்தளங்கள்

சமூக வலைத்தளங்களில் உங்கள் ஜாதகம்
--------------------------------------------------------
Image result for negative effects of facebook

ஜன்ம நட்சத்திர ஜாதக கணிப்புகள் செய்யமுடியாத 
வித்தைகளையும் சேர்த்தே செய்துவிடுகிறது
உங்கள் கணினி தரவுகள். 
உங்களுக்குப் பிடித்தமானவற்றை
எப்போதும் காட்டிக்கொண்டே இருக்கிறது.
உங்கள் பயணங்கள், டிக்கெட் விவரங்கள்,
சாப்பிட்ட ஹோட்டல், சுற்றிப்பார்த்த நாடுகள்
என்று உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள்
டைரியிய போல முகநூல் போன்ற சமூக வலைத்தளங்கள் பாதுகாத்துவைத்திருக்கின்றன.
இதெல்லாம் கணினியின் பயன்பாடுகள் தானே என்று
சொல்ல வருகிறீர்களா..?
இதில் அவர்களுக்கு என்ன இலாபம்? என்று யோசித்துப் பாருங்கள்.
இத்தகவல்களைக் கொண்டு நம்மை எளிதில்
விற்பனை பண்டமாக்கி கோடிக்கணக்கில்
முதலீடே இல்லாமல் அவர்கள் வியாபாரம்
செய்கிறார்கள்!
கட்டணமே இல்லாமல் முகநூல் போன்ற 

இணைய தளங்கள் இலாபகரமாக இயங்கிக் கொ ண்டிருப்பதன்
 காரணம் இதுதான்.
இதை நமக்கான பயனிலையாக எடுத்துக்கொண்டு

 போக முடியாதா என்றால் அங்கேயும் 
ஏற்படும் சிக்கல்கள் உளவியல் சார்ந்ததாக
 இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
லைக்ஸ் கள் , பின்னூட்டங்கள், மொள்ளமாரித்தனம்,
மொண்ணையான எழுத்துகள், மவுன யுத்தங்கள்,
இனம் புரியாத குழப்பங்கள்,
இப்படியாக எல்லோரையும்
டென்சனாக்கி தன்னைச் சுற்றி ஓட வைத்து
அதன் மூலம் தன் வியாபரத்தளத்தை உறுதியாக

 நிலைநிறுத்திக் கொள்கிறது சமூக வலைத்தளங்கள்.
பொய்யான தகவல்கள் மற்றும் செய்திகளை

 உருவாக்குவதிலும் சமுக வலைத்தளங்கள்
 முன்னணியில் நிற்கின்றன.
சமூக வலைத்தளங்களுக்கு யார் அதிகம் 

தீனிப் போடுகிறார்களோ அவர்களை அணுகி
 தங்கள் முகவர்களாக்கி கொள்கிறது இன்னும்
ஆபத்தாக இருக்கிறது.
அண்மையில் கிளம்பிய ஆண்டாள் சர்ச்சை
கூட இப்படியான ஒரு பரபரப்பு வியாதிக்குப் போட்ட

 தீனியோ என்ற சந்தேகம் எழுகிறது.
விளக்கு வெளிச்சத்தில்
சுற்றி சுற்றி வந்து செத்துமடியும்

 விட்டில்பூச்சிகளாகிவிட்டோமோ?
உணர்ச்சிகளைக் கிளப்பிவிட்டு
அதிலும் வியாபாரம் செய்த அரசியல் கட்சிகளின் 

அதே ஃபார்மூலவை இன்று உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகள் 
சமூக வலைத்தளங்கள் மூலம் மிகவும் எளிதாக செய்துவிடுகிறார்கள்.
விருப்பமானதை மட்டும் எழுது என்பதில் இருந்த
சுயம் காயடிக்கப்பட்டு
மற்றவர்களுக்கு விருப்பமானதை மட்டும் எழுது
 

என்று எந்த ஓரு வெளிப்படையான அடக்குமுறையும் இல்லாமல்
 தன் வசப்படுத்தி இருக்கிறது சமூக வலைத்தளங்கள்.
இதிலிருந்து கொண்டே தான் 

இதைப் பற்றி எழுதியாக வேண்டும்
 என்பது என் போன்றவர்களின் நிலையும்
 சமூகவலைத் தளங்களின் வெற்றியும்!
வேறு என்ன சொல்ல!

4 comments:

  1. அருமையாக சொன்னீர்கள் உண்மையான வார்த்தை.

    ReplyDelete
  2. ///விருப்பமானதை மட்டும் எழுது என்பதில் இருந்த
    சுயம் காயடிக்கப்பட்டு
    மற்றவர்களுக்கு விருப்பமானதை மட்டும் எழுது ///

    கசக்கும் உண்மை

    ReplyDelete
  3. நாளுக்குநாள் சமூகவலைத்தளங்கள் தன் எல்லைகளை விஸ்தரித்து பல்கிப் பெருகுகின்றன. முதலீடே இல்லாமல் கோடிக்கணக்கில் வணிகம் செய்கிறார்கள். நல்ல கருத்துக்கள். யோசிக்க வைத்துள்ளமைக்கு நன்றி.

    ReplyDelete