Sunday, December 10, 2017

ONE MP ONE IDEA

ONE MP , ONE IDEA
Image result for திருச்சி சிவா
ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் அவர் தொகுதி வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் ரூ 5 கோடியிலிருந்து பல்வேறு நலத்திட்டங்களைச்
 செய்வதற்கு வழிமுறைகள் இருக்கின்றன. 
தொடர்ந்து பல ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும்
 தோழர் திருச்சி சிவா அவர்கள் அண்மையில் வெளியிட்டிருக்கும் 
இச்செய்தி என் கவனத்திற்கு வந்தது. 
பெரும்பாலும் இதை யாரும் அக்கறையுடன் வாசிப்பதில்லை என்று அவரே ஒத்துக்கொண்ட பிறகு அது குறித்த என் விமர்சனத்தை விலக்கி வைத்துவிட்டு தோழரின் 
வாட்ஸ் அப் செய்தியை மட்டும் பகிர்ந்திருக்கிறேன்.
தோழருக்கு என் அன்பும் வாழ்த்துகளும்.
இது குறித்த விவரங்கள் அறிய :
http://innovationcouncilarchive.nic.in/index.php…
இப்படியான நிதி ஒதுக்கீடுகள் இருக்கின்றன என்பதை 
அனைவருக்கும் அறியத்தருவதற்கும்
ஒவ்வொரு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும்
 இதைச் செய்ய முடியும், செய்ய வேண்டும்
என்ற கோரிக்கையை ! (உரிமையை) வைக்கவும்
 இப்பகிர்வு ஒரு தூண்டுதலாக இருக்கும்
என்ற நோக்கத்தில் ..
திருச்சி சிவா அனுப்பி இருக்கும் செய்தியிலிருந்து ...
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய தொகுதி வளர்ச்சி
 நிதியினை எந்தெந்த வகையில், என்னென்ன காரியங்களுக்காக
 ஒதுக்கீடு செய்யலாம் என்று வழிகாட்டும் நெறிமுறைகள்
 அடங்கிய கையேடு ஒன்றினை மத்திய அரசின்
 “ திட்டம் மற்றும் புள்ளிவிவரங்கள் “ அமைச்சகம் உருவாக்கி தந்துள்ளது.
பெரும்பாலும் இதனை யாரும் அவ்வளவு அக்கறையோடு 
முழுவதுமாகப் படித்து பார்ப்பதில்லை . ஒருநாள் இதில் எழுந்த
 ஐயம் காரணமாக படித்தபொழுது ஒரு நல்ல திட்டம் என்னை கவர்ந்தது.
 “ One MP-One idea” என்பது அதன் பெயர். இந்த திட்டத்தின் கீழ் 
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஐந்து இலட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யலாம்.
நாட்டில் தீராத பிரச்சனையாக , தீர்க்கப்படவேண்டியதாக
 எல்லோரும் கருதுகின்ற ஒரு பிரசனைக்கு, 
உதாரணமாக் குறைந்து வரும் நிலத்தடி நீர், மணல் பிரச்னை, 
புவி வெப்பமடைதல், பெருகிவரும் மக்கள்தொகை, 
பிளாஸ்டிக் கழிவுகளின் பாதகங்கள் , சுருங்கி வரும் விவசாயம்
, நீர் நிலைகள் , போக்குவரத்து நெரிசல், சாயப்பட்டறைக் கழிவுகள், 
சுற்றுச்சூழல் மாசு, எரிபொருள் மாற்று, கல்வி தரத்தில் மேம்பாடு,
 மாணவர்களின் மனநிலையில் மாற்றம் , வேலையில்லா திண்டாட்டம்
 எனும் இப்படிப்பட்ட பல்வேறு பின்னடைவுகளுக்கு காரணமானவைகளை களைவதற்கு, சீர்படுத்துவதற்கு ஆக்கபூர்வமான, ஏற்றுப்பின்பற்றத்தக்க, நடைமுறைப்படுத்தக்கூடிய தீர்வினை ஏதாவது ஒரு பிரச்சனைக்கு 
தமிழ்நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் வாழ்கின்ற இளைஞர்கள், 
மாணவர்கள் என யார் வேண்டுமென்றாலும் திட்ட வடிவில் தந்திடலாம்.
பெற இருக்கின்ற இந்த யோசனைகளை வல்லுனர் குழு ஒன்று 
பரிசீலித்து பரிசுகளும், சான்றிதழும் மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும்.
முதல் பரிசு: ரூபாய் இரண்டரை இலட்சம்
இரண்டாம் பரிசு: ஒன்றரை இலட்சம் ரூபாய்
மூன்றாம் பரிசு: ஒரு இலட்சம் ரூபாய்
இதற்கான நிதி என்னுடைய நாடாளுமன்ற தொகுதி 
வளர்ச்சி நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது.
 உங்கள் யோசனைகளை அனுப்ப வேண்டிய முகவரி:
திட்ட அலுவலர்,
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை,
ஆட்சித் தலைவரகம், திருச்சி,
மின்னஞ்சல்: drdatry@nic.in
குறிப்பு: இது என் கண்டுபிடிப்பு அல்ல,, இருந்ததைக் கண்டறிந்து 
நான் தொடங்கி வைத்திருக்கிறேன். கொலம்பஸ் மாதிரி
. அவ்வளவே. எனக்குத் தேவை சமுதாயத்தை அச்சுறுத்தும்
 பிரச்சனைகளுக்குத் தீர்வு.காத்திருக்கிறோம்
 உங்கள் அரிய ஆலோசனைகளை எதிர்நோக்கி!
அனுப்புவதற்கு கடைசி நாள்: : 31-12-2017
அன்புடன் திருச்சி சிவா.

2 comments: