பிஜேபி க்கு மகத்தான வெற்றி தான்.
ராகுல்காந்தியை சிவபக்தனாக அடையாளம் காட்ட வைத்து ...
கோவில் கோவிலாக போக வைத்து..
பிஜேபிக்கு இது மகத்தான வெற்றிதான்.
ராகுல்காந்தியை சிவபக்தனாக அடையாளம் காட்ட வைத்து ...
கோவில் கோவிலாக போக வைத்து..
பிஜேபிக்கு இது மகத்தான வெற்றிதான்.
தொடர்ந்து ஆறாவது முறையும் பிஜேபி குஜராத் மாநிலத்தில்
ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது, இது குறித்த பல்வேறு
ஆய்வுகள் புள்ளிவிவரங்கள் பேசப்படுகின்றன.
ஒவ்வொரு தொகுதியிலும் பிஜேபி சுறுசுறுப்பாக
சுழலவிட்ட paid BJP volunteers 1000 இளைஞர்கள்
தேர்தல் களத்தைச்சூடாக்கினார்கள்.
காங்கிரசுக்கும் இத்தேர்தல் வெற்றிதான் என்று சொல்வதும்
பிஜேபியின் அமோக வெற்றி என்று சொல்வதும்
ஒன்றுக்கொன்று மாறான கருத்துகள் என்றாலும்
இரண்டிலும் உண்மை இருக்கிறது !
இந்த உண்மையை இரு கட்சிகளும் அக்கட்சிகளின்
இந்த உண்மையை இரு கட்சிகளும் அக்கட்சிகளின்
தலைமைகளும் நன்கு அறிந்தே இருக்கிறார்கள்.
பிஜேபிக்கு இந்த வெற்றி ஓர் அச்சத்தை
தரும் வெற்றியாகவே அமைந்திருக்கிறது.
தரும் வெற்றியாகவே அமைந்திருக்கிறது.
இந்த அச்சம்தான் தற்போது
காங்கிரசுக்கு கிடைத்திருக்கும் வெற்றி.
ஆனால் இந்த அச்சத்தைக்
கொடுப்பதற்கு காங்கிரசு கொடுத்த விலை என்ன?
அதுதான் இந்திய தேசத்திற்கு ஆபத்தான ஓர் அரசியலை
கொடுப்பதற்கு காங்கிரசு கொடுத்த விலை என்ன?
அதுதான் இந்திய தேசத்திற்கு ஆபத்தான ஓர் அரசியலை
விதைத்திருக்கிறது.
சிறுபான்மையினர் சார்ந்த உரிமைகள் பிரச்சனைகளில்பி
சிறுபான்மையினர் சார்ந்த உரிமைகள் பிரச்சனைகளில்பி
ஜேபி காங்கிரசு இரு கட்சிகளின் நிலைப்பாட்டில்
மிகப்பெரிய வித்தியாசங்கள் இருப்பதில்லை
என்றாலும் ஒப்பீட்டளவில் காங்கிரசு சிறுபான்மையினருக்கு
என்றாலும் ஒப்பீட்டளவில் காங்கிரசு சிறுபான்மையினருக்கு
ஆதரவான கட்சி, சிறுபான்மையினரின் உரிமைகளைப்
பாதுகாக்கும் கட்சி, இன்னும் சொல்லப்போனால்
மதச்சார்பின்மையை தன் அடிப்படைக் கொள்கையாகக்
மதச்சார்பின்மையை தன் அடிப்படைக் கொள்கையாகக்
கொண்ட கட்சி, (செக்குலரிசம்) என்ற அபிப்பிராயங்கள்
இருக்கின்றன. மதச்சார்பின்மை என்ற கொள்கையை
எக்காலத்திலும் பிஜேபி தன் கையில் எடுத்துக்கொள்ளமுடியாது.
பல்வேறு இன மொழி சமயங்கள் வாழும் இந்திய மண்ணில்
பல்வேறு இன மொழி சமயங்கள் வாழும் இந்திய மண்ணில்
மதச்சார்பின்மை என்பது இந்திய இறையாண்மைக்கு
வலுசேர்க்கும் ஜீவன். அந்த உயிர்நிலையை இழக்க வைத்ததில்
பிஜேபி இன்று மிகப்பெரிய வெற்றியை ஈட்டி இருக்கிறது.
பிஜேபி இன்று மிகப்பெரிய வெற்றியை ஈட்டி இருக்கிறது.
காங்கிரசு தலைவர் ராகுல்காந்தியை
சிவபக்தர் என்று சொல்ல வைத்ததும்
சிவபக்தர் என்று சொல்ல வைத்ததும்
பல்வேறு கோவில்களுக்குள் போக வைத்ததும்
மிகச்சாதாரணமான விஷயமல்ல.
மிகச்சாதாரணமான விஷயமல்ல.
இந்தியா என்றால் இந்துக்கள், இந்தியா இந்துக்களின் தேசம்,
இந்துக்களின் பெரும்பான்மை ஆதரவு இல்லாவிட்டால்
இந்துக்களின் பெரும்பான்மை ஆதரவு இல்லாவிட்டால்
அரசியல் நடத்துவது இனி சாத்தியமில்லை என்ற அச்சத்தைக்
கொஞ்சம் கொஞ்சமாக பிஜேபி புகுத்திவிட்டது.
இதில் பிஜேபி மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது.
இதில் பிஜேபி மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது.
பிஜேபியின் இந்துமக்களின் பாதுகாவலன் என்ற
பிரச்சாரத்தை முறியடிக்க ராகுல்காந்திக்கும் சிவபக்தன் என்ற
அடையாளம் தேவைப்பட்டிருக்கிறது! இந்த நிலையை
அடையாளம் தேவைப்பட்டிருக்கிறது! இந்த நிலையை
உருவாக்கி இருப்பது பிஜேபிக்கு
கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றி.
கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றி.
கேரளாவுக்கு வந்திருந்தப்போது அன்றைய
பாரதப்பிரதமராக இருந்த பண்டிதர் ஜவஹர்லால் நேருவை
மேல்சட்டையைக் கழட்டிவிட்டு
கோவிலுக்கு வருமாறு கோவில் சட்டதிட்டங்கள்
கோவிலுக்கு வருமாறு கோவில் சட்டதிட்டங்கள்
சொன்ன போது அதை மறுத்து அக்கோவிலுக்குள்
நுழையாமல் சென்றவர் நேரு.
அதே நேருவின் பேரனுக்கு குஜராத்தில் கோவில் கோவிலாக
அதே நேருவின் பேரனுக்கு குஜராத்தில் கோவில் கோவிலாக
போகவைத்திருக்கிறது குஜராத் தேர்தல் களம்.
2014ல் காங்கிரசு தோல்வி அடைந்தவுடன் அதற்கான
2014ல் காங்கிரசு தோல்வி அடைந்தவுடன் அதற்கான
காரணங்களை ஆய்வு செய்து தன் அறிக்கையை
ஆகஸ்டு 14, 2014 ல் சோனியாகாந்தியிடம்
கொடுத்தார் ஏ கே அந்தோணி. அந்த அறிக்கையில்
Antony panel “blaming Congress’ minority appeasement”
as a reason for the party defeat!.
இந்த வரிகள் இப்போது நினைவுக்கு வருகிறது.
இத்தேர்தல் களம் உருவாக்கி இருக்கும் இச்சூழல்

இந்தியர்களின் எதிர்காலத்திற்கு நல்லதா ,
எம்மாதிரியான விளைவுகள் ஏற்படும்
என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஓம் நமசிவாய..
//இந்தியர்களின் எதிர்காலத்திற்கு நல்லதா// - என் கவலையும் அதுதான்... எங்கே செல்லும் இந்த பாதை???
ReplyDeleteநன்றி. ஆனால் இதை எதற்காக பெயரிலியாக வந்து பதிவிட வேண்டும்.
Deleteகாந்தி காலத்திலிருந்தே காங்கிரஸ் இஸ்லாமியர்களை மூர்க்கமாகக் காதலிப்பவர்கள் என்பது உலகம் அறிந்த உண்மை.இஸ்லாமியர்களுக்காக இந்துக்களை பலி கொடுக்கத் தயங்காதவர்கள் காந்திபத்தர்கள் என்பது யதார்த்தம் தானே.
ReplyDeleteபாவம் ராகுல். இதை எல்லாம் மாற்றியாக வேண்டிய இக்கட்டில் மாட்டியிருக்கிறாரோ !.. வருகைக்கு நன்றி
Deleteநேருவுக்கு ராகுல் கொள்ளுப்பேரன் அல்லவா!
ReplyDeleteநல்லதொரு அலசல்.
ReplyDeleteஇந்த செக்குலரிசம் மதச்சார்பின்மை பேசும் அரசியல் கட்சிகளில் பலர் சிறுபான்மையினரின் மதவாதங்களுக்கு செம்பு தூக்குபவர்களாகவே இருக்கிறார்கள்.
ராகுல்காந்திக்கு இலங்கையில் இருந்த எல்டிடிஈ தீவிரவா அமைப்பின் தலைவர் கொல்லபட்டது கவலையையும், குற்றஉணர்வையும் ஏற்படுத்தியதாம் என்று அவர் தெரிவிக்கும் அளவிற்கு நிலைமை கவலை தான்.