
உறைபனியில் மரத்துப் போயிருக்கும்
உணர்வுகளை
முகத்தில் அறைந்து எழுப்பிக் கொண்டிருக்கிறது
நீ விட்டுச் சென்ற மவுனம்.
இலைகளை உதிர்த்துவிட்ட கிளைகள்
இளைப்பாறுகின்றன.
பாறைகளுக்குள் தன்னைத் தேடி
பயணித்துக் கொண்டிருக்கிறது
நீ அறியாத வேர்கள்.
விடியலுக்கு முந்திய உடல்கள்
காமத்தைத் தின்று
பசியாற்றிக் கொள்கின்றன.
சாலையோரத்தில் செம்மொழி
கிழிந்தப் போர்வைக்குள்
உறங்கிக்கொண்டிருக்கிறது.
சக்கரங்களின் பல்லிடுக்குகளில்
நினைவுகள் தற்கொலை செய்துகொள்கின்றன.
மெல்ல களைகிறது வேஷம்.
மனம் கனக்கிறது வார்த்தைகளின் கோர்வைகள் கண்டு...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஒரு தற்கொலைக்கு பின்புதான் வேசம் களைவது தெரியுமோ.....?
Deleteநல்ல கவிதை.
Delete