Monday, December 25, 2017

மதச்சார்பற்றவனுக்கு அப்பன் பேர் கிடையாது..

secularism and bjp க்கான பட முடிவு


நீங்க உங்க சாதியைச் சொல்லுங்க
உங்க ப்ளட் குரூப்பைக் கண்டுபிடிச்சிடலாம்
அதோட உங்க மதத்தையும் சொன்னா
உங்க குரூப் பாசிட்டிவ்வா நெகட்டிவா னு
உடனே சொல்லிடலாம்..
..... கண்டுபிடிச்ச விஞ்ஞானி இன்னும் நிறைய சொல்றாரு..
மதச்சார்பற்றவர்களுக்கு அப்பன் பெயர் தெரியாது.
அதைவிட  பெரிய கண்டுபிடிப்பு அவனைப் பெத்துப்போட்ட ஆத்தா 
யாருனு தெரியாது. அப்புறம்...
 இசுலாமியர்கள் தான் ஒரு இசுலாமியர் என்றொ 
கிறிஸ்தவர் தான் ஒரு கிறிஸ்தவர் என்றோ 
லிங்காயத் தன்னை  லிங்காயத் என்றொ 
ஒரு பிராமணர் தன்னை ஒரு பிராமணர் என்றொ
பெருமையாக சொல்லிக்கனும். அப்போ தான்  அவர்களின் 
ரத்தம்  என்ன என்பது உடனே தெரியும் ... 
(அடப்பாவி.. 
பிராமணர் என்று சொல்லிக் கொள்ள வேண்டும்
 என்பதன் மூலம் அவனவன் அவனவன் சாதிப்பெயரைச்
 சொல்லிக்கொள்ள வேண்டும்
என்று நேரடியாக சொல்லேன்டா..! 
அதுக்கு எதுக்கு BLOOD TEST கண்டுபிடிக்கிறே.. )

இப்படி திருவாய் மலர்ந்திருக்கும் மத்திய மந்திரி 
அனந்தகுமார் ஹெக்டே
மதச்சார்ப்பற்ற என்ற இந்திய அரசியலமைப்பை
 திருத்துவதற்காகவே நாங்கள் ஆட்சி அதிகாரத்தில்
 இருக்கிறோம்" என்று வெளிப்படையாகவே
சொல்லி தன்னுடைய BLOOD GROUP ஐ நாற்றமடிக்க 
வைத்திருக்கிறது.

இந்தியக் குடியரசுத் தலைவர் இந்த ஆண்டு
 ராஷ்டிரபதி பவனில் கிறிஸ்துமஸ் பண்டிகையை
 ஒட்டி நடைபெறும்  பக்திப்பாடல் நிகழ்ச்சியை  
(CHRISTMAS CAROLS) தடை செய்திருக்கிறது. 
ஒவ்வொரு ஆண்டும் இதுவரை தொடர்ந்து நடைபெற்ற
கிறிஸ்துமஸ் நிகழ்வை தடை செய்ததற்கு 
ராஷ்டிரபதி பவன் சொன்ன காரணம்
"மதச்சார்பின்மை" . 
ஆனால் தீபாவளிக்கு ராஷ்டிரபதி பவன் 
வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படுவதையும்
 விழாக்கோலம் கொண்டு விருந்துகள் நடைபெறுவதையும்
எந்த மதச்சார்பின்மையும் தடை செய்யவில்லை! 

போங்கடா நீங்களும் உங்க விளக்கெண்ணெய் விளக்கமும்.

3 comments:

  1. முடிவில் சொன்னது "நச்"

    ReplyDelete
  2. இவ்வளவு காலமாக திராவிட கும்பல்கள் நோன்பு கஞ்சி குடிச்சுக்கொண்டும் , கிரிஸ் மஸ் கேக் தின்னுகிட்டும்
    இந்து பண்டிகைகளை கிண்டல் செய்து மதசார்பின்மை பேசிகிட்டு இருந்த போது எங்கே தலையை வைச்சுக்கிட்டு இருந்தீங்க

    ReplyDelete
  3. மனிதர்களால் உருவாக்கபட்ட மதவகைகளில்,ஜாதி வகையில் மனிதர்களை பிரித்து பார்ப்பதே இவர்களுக்கு ஒரு அற்பதனமான பெருமை.
    திராவிட கட்சிகளும் ,செக்குலரிசம் பேசுபவர்கள் பலரும் இவர்களில் அடக்கம்.

    ReplyDelete