Monday, December 11, 2017

FINANCIAL RESOLUTION AND DEPOSIT INSURANCE BILL 2017

Image may contain: text
நிதி தீர்வு மற்றும் சேமிப்பு காப்பீடு மசோதா
FINANCIAL RESOLUTION & DEPOSIT INSURANCE BILLS 2017
யாருக்காக இந்த மசோதா,,?
மாண்புமிகு கனவான் ஜெட்லி அவர்களுக்கு...
நீங்கள் எங்கள் வங்கி சேமிப்புக்கு பாதகம் வராது 
என்று உறுதியளிக்கிறீர்கள். நாங்களும் நம்பத் தயாராக இருக்கிறோம்.
இப்போ.. சின்னதா ஒரே ஒரு டவுட்..ப்ளீஸ் ஜெட்லி..
இப்போ இந்த மசோதாவுக்கான அவசியம் என்ன?
நீங்க உங்க கட்சிகளுக்கு பணத்தை அள்ளிக்கொடுக்கும் 
கார்ப்பரேட்களுக்கு கடனாக எங்கள் பணத்தை அள்ளிக் 
கொடுப்பீர்கள். அப்புறம் பேங்க் திவாலாவாகப்
போகிறது என்று பயமுறுத்துவீர்கள், 
அதற்காகத்தான் UK, USA நாடுகளைப் போல
இந்தியாவிலும் சட்டம் கொண்டுவரப் போவதாக சொல்லுவீர்கள்.

ஏன்யா.. மல்லையாவை இந்திய நீதிமன்றத்தில்
 கொண்டு நிறுத்தமுடியாத நீங்கள்.. 
யாருக்காக இந்த மசோதாவைக் கொண்டு வருகிறீர்கள்?
வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு அதைத் திருப்பிக் 
கொடுக்காத அத்தனைப் பேரின் பெயர், நிறுவனம், 
சொத்து மதிப்பை இன்றுவரை வெளியிட முடியாமல்
 எது உங்களைத் தடுத்து வைத்திருக்கிறது?
deposit holders do not have any superior claims 
என்று சொல்லும் உங்கள் மசோதாவின் வரிகளுக்கு 
என்ன அர்த்தம்? வங்கிகள் சேமிப்புதாரர்களின்
பணத்தைக் திருப்பி கொடுத்துதான் ஆகவேண்டும்
 என்று கட்டாயப்படுத்தமுடியாதுனு
சொன்னா அதை எப்படி எங்கள் சேமிப்புகளுக்கான
 உங்கள் பாதுகாப்பு திட்டம்னு ஏற்றுக்கொள்ளமுடியும்! 
இப்படி ஒரு மசோதா நிறைவேற்றி இச்சட்டத்தில்
 தலையிட உச்சநீதிமன்றத்திற்கோ
அல்லது ரிசர்வ் வங்கிக்கோ கூட அதிகாரமில்லை
 என்று நீங்கள் வரையறுக்கும் போது.....
ஜெட்லி.. 
ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் 
ஐந்தும் பத்துமாக வங்கியில் சேமித்திருக்கும் எங்களுக்கும் 
இந்திய திருநாட்டில்
ஓட்டு போடும் உரிமை இருக்கிறது
 என்பதை மறந்துவிடாதீர்கள்.!

2 comments:

  1. சபாஷ் சரியான கேள்வி

    ReplyDelete
  2. நாட்டில் பெரும்பான்மை ஏமாற்று நோக்கம் கொண்டவர்களாக இருப்பதற்காக, அப்பாவி சேமிப்பாளர்களை பாதிப்புக்குள்ளாக்குவது அநீதி.
    //அதற்காகத்தான் UK, USA நாடுகளைப் போல
    இந்தியாவிலும் சட்டம் கொண்டுவரப் போவதாக சொல்லுவீர்கள்.//
    பிரித்தானியாவில் உள்ள நண்பர்கள் மூலம் தெரிய வந்த தகவல்கள்படி, அங்கே வாழும் சாதாரண சேமிப்பாளர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாதவாறு அந்த நாட்டில் அவர்கள் சேமிப்புக்கு பாதுகாப்பு உறுதி செய்யபட்டுள்ளது.
    அவர்களது சேமிப்புகளை வட்டியுடன் சேர்ந்து 85000 ஸ்ரேலிங் பவுண்ட் வரை Financial Services Compensation Scheme பாதுகாக்கும்.
    அமெரிக்கா பற்றி தெரிந்தது தானே

    ReplyDelete