Thursday, December 14, 2017

MAY I HELP YOU, Press key 1

தொடர்புடைய படம்

ஆதார் கார்டை அக்கவுண்டுடன் இணைக்க நேரில் போயிருந்தேன்.
இன்டெர்நெட் பேங்கிங் டிவைஸ் பேட்டரி தீர்ந்துவிட்டதாக சொன்னது.
புதிதாக டிவைஸ் கவுண்டரில் எளிதாக உடனே கிடைத்தது.
வாங்கிக்கொண்டு வந்தாகிவிட்டது.
அக்கவுண்டில் டிவைஸ் லிங்க் ஆவதற்கு போன் பேங்கிங் தான் வழி
என்று சிரித்துக் கொண்டே எனக்குத் தெரிந்த அப்பெண் சொன்னாள்.
கவுண்டரில் இருந்தவள்  என் மீது பாவப்பட்டு அனுதாபத்துடன் சிரித்தாள்
என்பது இப்போது தான் புரிகிறது.
இரு நாட்களாக போன் பேங்கிங்குடன் அல்லாடிக் கொண்டிருக்கிறேன்.
ஆங்கிலத்தில் வேண்டுமா எண் 1 ஐ அமுக்கவும்
இந்திக்கு எண் 2
மராத்திக்கு எண் 3
கஸ்டமர் சர்வீஸ் ஆபரேட்டருக்கு எண் 0
ஒருவழியாக 0 வை அமுக்கி காத்திருந்து கொண்டே
தானே ஓடிக்கொண்டிருக்கும் டேப் வாய்ஸ் கேட்டு கேட்டு
சாம்பார் வைத்துமுடித்தேன்.. டேப் ஓடிக்கொண்டிருந்தது.
சாம்பார் முடியவும் "தேங்க் யூ ஃபார் ஹோல்டிங் தி லைன்" என்ற
பெண்குரல்.
சின்னதாக ஒரு பெருமூச்சுடன் அக்கவுண்ட் எண், விலாசம். பெயர்
PAN எண் எல்லாம் கொடுத்து முடித்தவுடன் அவள் என் போன் பேங்கிங்
எண் கேட்கிறாள்... இருந்தது இப்போது அந்த எண் இல்லை, இல்லை மறந்துவிட்டது
என்று சொல்லவும் அவள் வேறு ஒரு சர்வீஸ்க்கு என் தொலைபேசி தொடர்பை
மாற்றினாள். அங்கே மீண்டும் முதலில் இருந்து அதே கேள்வி பதில்...
இப்போது என் போன்பேங்கிங் எண் புதிதாக உருவாக்க வேண்டுமாம்.
இல்லை என்றால் என்னால் இண்டெர்நெட் பேங்கிங் நுழையவே முடியாது.
அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன்.
your call will be transfer to the phone banking pin service ..என்றாள்.
மீண்டும் டேப் ஓடியது.
காதுக்குள் இரைச்சல் கேட்க ஆரம்பித்தது.
இன்னொரு குரல்.. "may I help you"
மீண்டும் அதே கேள்வி அதே பதில்கள்...
என் அக்கவுண்டை அவர்கள் அவ்வளவு பாதுகாப்புடன் வைத்திருக்கிறார்களாம்..
எப்படியோ ஒருவழியாக அவள் புதிதாக போன் பேங்கிங் எண் வாங்க
என் கிரிடிட் அல்லது டெபிட் கார்ட் எண்ணை போன் கீ மூலமாக
போடச் சொன்னாள். ப்ளீஸ்.. ப்ளீஸ்... வெயிட் வெயிட்...
ஓடிப் போய் என் பீரோவைத் திறந்து அதிலிருக்கும் பெட்டிக்குள்
அடைத்து வைத்திருந்த கார்டை எடுத்து அதில் என் பேங்க் கார்டைத் தேடி
அந்த 12 இலக்க எண்ணைக் KEY IN  செய்தவுடன் டேப் ஒடியது.
press the hash key after the peep ...
ரொம்ப டென்ஷனாகிவிட்டேன்.. திடீரென hash key எதுவென சந்தேகம் வந்தது.
இதாகத்தான் இருக்கும் என்று துணிந்து hash key அமுக்கி காத்திருந்தேன்.
இப்போது உங்கள் புதிய போன் பேங்கிங் எண்ணைக் கொடுக்கச் சொல்லியது டேப்.
பட்டென்று நினைவில் நிற்கும் ஒரு எண்ணைக் கொடுத்துவிட்டேன்.
சிறிது நேரத்திற்குப் பின் ... மேடம் உங்கள் அக்கவுண்ட் அட்வான்ஸ் அக்கவுன்ட்..
இது பெர்சனல் அக்கவுண்டுக்கு மட்டும்.
iAM FORWARDING YOUR CALL TO ADVANCE BANKING SERVICE ,
PLEASE HOLD THE LINE ..
போனை இடது பக்கமிருந்து வலது பக்கம் மாற்றிக் கொண்டேன்.
மீண்டும் அதே கேள்வி அதே பதில்கள்...
இப்படியாக ....
எனக்கு இன்னும் புதிதாக டிவைஸ் வாங்கியும்..
இன்டெர்நெட் பேங்க்  அக்கவுண்ட் ..
தாங்க முடியலடா சாமீ..
இதே வங்கியில் தான் நான் 22 ஆண்டுகள் வேலைப் பார்த்திருக்கிறேன்.
மாடு மாதிரி...
குட்மார்னிங் காந்திஜி..
ஹொவ் ஆர் யு
மேடம் அக்கவுண்ட் ஓடியில் போயிடுச்சா..
யெஸ்.. ஆனால் உங்க அக்கவுண்டில் இன்று செக் கிரிடிட் ஆயிருக்கு.
ந்நோ ப்ராப்ளம்.. எதற்கும் மேனேஜரைப் பார்த்துவிட்டுப் போங்கள்..
ஹலோ சக்சேனா..
ஹவ் ஆர் யு..
ஹெய் மேடம்.. தேங்க் யு ,  எனக்கு இன்ட்ரஷ்ட் சர்டிபிகேட் வேணும்..
ந்நோ ப்ராப்ளம் சார். வில் யு ப்ளீஸ் இந்த பார்மை பூர்த்தி செய்து தருவீர்களா..
நாளை வந்து வாங்கிக்கொண்டு போங்கள்.
தேங்க் யு..
யு ஆர் வெல்கம் சார்..
மேடம்.. செக் க்ளியர் ஆகணும்.. ஸ்பெஷல் ரிமார்க் வருது..
ஒவர் ரைட் பண்ணட்டுமா..
இண்டர்காமில் கேஷியர் கேட்கிறார்.
கஸ்டமர் யார்..?
ஓ இன்னாரா.. பிரச்சனை இல்லை.
ஓவர் ரைட் பண்ணியாச்சு...
என்ன காரணம் என்று எனக்குத் தெரியும்..
லாக்கர் ஆபரேட் செய்ய அவர் காத்திருக்கிரார் மேடம்...
ஏன் பாபுஜி எங்கே..
பாபுஜிக்கு இது லஞ்ச் டைம் மேடம்.
ஒகே ந்நோ ப்ராப்ளம்
எழுந்துப்போய் வங்கியின் மாஸ்டர் கீ போட்டு லாக்கரைத் திறந்துவிட்டு'
வெளியில் வரும்போது... மேசையில் போன் .. அடித்துக் கொண்டே இருக்கிறது.
ஹெய்.. யெஸ் சார். நிச்சயம்.. இன்று 3 மணிக்குள்
நீங்கள் கேட்ட தகவலை அனுப்பி விடுகிறோம்..
இப்படி ஏன் மாடு மாதிரி எல்லா கவுண்டரிலும் வேலை பார்த்தோம்னு
நினைத்துக் கொள்கிறேன்.
ஆனால் இம்மாதிரி எல்லாம் எங்களால் தான் வேலைப் பார்க்க முடியும்
முடிந்திருக்கிறது என்ற பெருமிதம் ஏற்படுகிறது..
இனி.. இன்னொரு அட்டெம்ப்ட்..
போன் பேங்கிங் ...
press one, press hash key.. press your credit card number/
press your pin number/press ..
thank you for holding the line .. may I help you...


8 comments:

 1. வங்கியில் வேலை செய்த உங்களுக்கே இப்படி என்றால் என்னைப் போன்ற அப்பாவிகளுக்கு ???

  ReplyDelete
 2. நானும் வங்கியில் பணிபுரிந்தவன் தான். பணியில் இருக்கும் போதே, வாடிக்கையாளர்கள் படும் பாட்டைக் கண்டு, இந்த கிரிடிட் கார்டு, நெட்பேங்க்கிங் சமாச்சாரங்களே வேண்டாம் என்று ஒதுங்கி விட்டேன். இப்போது மொபைல் பேங்கிங் வந்து இருக்கிறது. இதனால் நிறையவே பாமர மக்கள் ஏமாற்றப் படுவார்கள். ( த.ம. வாக்களிப்பு பதிவானது; ஆனால், நான் முதலில் எழுதிய கருத்துரை, Blogger இல் ஏற்பட்ட தொழில் நுட்பக் கோளாறு காரணமாக பதிவாகவில்லை; எனவே மீண்டும் பதிந்துள்ளேன்)

  ReplyDelete
 3. மக்கள் தொகை அதிகம் இல்லாத ஊர்களில் / ஒரே ஒரு மொழி புழங்கும் ஊர்களில் இந்த Interactive Voice Response கொஞ்சம் சகிக்கும் படி இருக்கும். நம் ஊருக்கு இது ஒரு தேவை இல்லாத தொல்லை!

  ReplyDelete
 4. தங்களுக்குரிய பணியை கூட செய்ய விரும்பாத பொறுப்பற்ற பெரும்பான்மை இந்திய வங்கி ஊழியர்களினால் தங்களுக்கு நடந்த துன்பங்கள் பற்றி சிலர் சொல்லி வேதனைபட்டதை நானும் அறிந்துள்ளேன். வேதனை :(

  ReplyDelete