BOOKSWAP
ஊடகங்கள் ஊடகங்கள் ஊடகங்கள்...
கையிலிருக்கும் ரிமோட்டில் எந்தப் பக்கம் பிடித்தாலும்
சில முகங்கள் அடிக்கடி எல்லா நிகழ்ச்சிகளிலும் வருவதும் போவதுமாய்
வருவதும் போவதுமாய்... இப்படி வந்துப்போவதாலேயெ பிரபலமாகிவிடலாம்
என்றும் பிரபலமாகிவிட்டால் அவர்களுக்கு தினமும் தீபாவளிதான்..
நிலைமை இப்படித்தான் இருக்கிறது. இது பெரிய குற்றமில்லை.
விளம்பரத்தில் தொலைந்து போனவர்களை விட நம் நாட்டில்
விளம்பரமில்லாமல் தொலைந்துப் போனவர்கள் நிறையபேர் உண்டு.
இம்மாதிரியான ஒரு சின்ன மனக்கலக்கத்தில் ... டாடா இலக்கியத் திருவிழா
கூடலில் மதிய உணவுக்குப் பின்
புத்தகப்பரிமாற்றம் என்ற BOOKSWAP பகுதிக்குள் நுழைந்தேன்.
அங்கே... சேட்டன் பகத், ஷோபா டி இத்தியாதி பல பிரபலங்கள் எழுதிய
புத்தகங்கள் கொட்டிக்கிடந்தன. ஒரு ராமச்சந்திர குகாவோ அருந்ததிராயோ
எழுதிய எந்தப் புத்தகமும் இல்லை ...இல்லை .. இல்லை.
அப்பாடா... வாசிப்பவர்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள்...
கடற்கரை காற்று சுகமாக இருந்தது.
வாசிப்பவர்கள் எப்பொழுதுமே தெளிவுதான் சகோதரியாரே
ReplyDeleteசரி தான் சகோதரி...
ReplyDeleteசிவப்பெழுத்தில் இருந்த கவித்துவமான வரிகள்
ReplyDeleteமனம் கவர்ந்தது