காந்தி ஆன்மீகத்தை அரசியல் மயப்படுத்தியும் அரசியலை
ஆன்மீக வழிப்படுத்தியும் இணைப்புநிலை மதிப்பீடு
ஒன்றை உருவாக்கினார் என்றும் காந்தியைப் பொறுத்தவரை
ஆன்மீகமும் அரசியலும் பிரிக்க முடியாத இணைப்புகள்
என்றும் காந்தியைக் கடந்த காந்தியம் - ஒரு பின் நவீனத்துவப்பார்வை
கட்டுரைகளில் பிரேம் அவர்கள் காந்தியின் அரசியலை ஆன்மீக
அரசியலாக அடையாளப்படுத்துகிறார்.
காந்தியின் ஆன்மீக அரசியல் காந்தியை மட்டுமே மகாத்மாவாக
அடையாளம் காட்டியதை தவிர வேறு என்ன செய்தது ? . அந்த ஆன்மீக அரசியல் வளர்த்தெடுக்கப் பட்டதாகவோ அல்லது காந்தியின் ஆன்மீக அரசியல் குறித்து அவருக்கு அடுத்த நிலையில் இருந்த வல்லபாய் படேல், ஜவஹர்லால் நேரு போன்றவர்கள் என்ன கருத்து கொண்டிருந்தார்கள் என்பதோ ஒரு ஒப்பீட்டளவில் கூட பேசப்படவில்லை.
புனா ஒப்பந்தம் குறித்து பேச வரும்போது பிரேம் அவர்கள்
"காந்தி அப்போது இந்து-சாதி ஆதிக்கத்தின் அரசியல் சதிக்கு
தன்னையறியாமல் துணை புரியும் நிலைப்பாட்டினை எடுத்தார்"
(பக் 213) (கவனிக்க.. தன்னையறியாமல் என்ற சொல்வழி புலப்படும்
காந்தியின் உளவியல் ...)
என்று அடையாளம் காட்டுகிறார்.
இந்த ஒற்றை அடையாளத்தில்
காந்தியின் ஆன்மீக அரசியல்
சட சடவென சரிந்து விழுகிறது...
நன்றி பிரேம்.
No comments:
Post a Comment