Monday, March 9, 2020

மோதியும் கனவு தொழிற்சாலையும்

Image result for modi $ 5 trillion 2024

2014 ல் மோதிஜியின் கனவு தொழிற்சாலையில்
“நல்ல காலம் பொறக்குது..நல்ல நாள் வருது ..
வருது..” என்ற கனவு விற்பனைக்கு வந் த து.
அந்தக் கனவுகள் எல்லாம் 2019ல் நிறைவேறிவிடும்
என்ற உறுதிமொழி கொடுக்கப்பட்டது..
இந்திய பொதுஜனம் தங்கள் வங்கி கணக்குகளில்
வரப்போகும் பணத்தை நினைச்சி குஷியா கடனை
வாங்கி செலவு செய்த தெல்லாம் தனிக்கதை!
வெளி நாட்டில் பதுக்கி வச்சிக்சிருக்கும் இந்தியப்
பணம் இந்தியாவுக்கு வந்திடுச்சா, வரலையா
ஏன் வரலை..? ம்ம்ம் .. யாருமே கேட்கலையே?
ஏன் சரவணா.. நீ என்ன சொல்றே..?
“கனவுகளைத் தப்பு தப்பா புரிஞ்சிக்கிட்டா
மோதியா அதற்கு பொறுப்பு!
அந்தக் கனவு பலிச்சிடுச்சி..
மோதிஜிக்கு நல்ல காலம் பொறந்திச்சா இல்லையா..
அவரு அவருக்குத்தான் நல்லகாலம் 
பொறக்கப்போவதுனு சொன்னாரு.. அதைப் போயி.. 
பொதுஜனத்திற்கெல்லாம் நல்லகாலம்னு தப்பு தப்பா
 புரிஞ்சிக்கிட்டா என்ன செய்யறதும்மா..”
அடேங்கப்பா..இனிமே
சரவணா மாதிரி யோசிக்கனும்.
சரவணா சொன்னா சரணம் தான்.
இது இப்படி இருக்க 2019 வருவதற்கு முன்பே
2017 ல் தடாலடியா இன்னொரு புது கனவு
வருது. நியு இண்டியா 2022 –( NEW INDIA 2022)
.. மோதிஜி புதிய இந்தியக் கனவைச் சொல்லும்
போதே எனக்கெல்லாம் புல்லரிச்சுப் போச்சு.
ச்சே.. மனுஷனைச் சும்மா சொல்லப்பிடாது..
இந்தக் கனவில் ஒன்றிரண்டு நிறைவேறினால்
கூட போதும்..மோதிஜி ஜிந்தாபாத் னு சொல்லிட்டு
நாமும் இருந்திடலாம்னு நினைச்சதுண்டு.
பெரிய திட்டங்களை நிறைவேற்ற 5 வருஷம் போதுமா..
போதாது தானே! இன்னொரு முறையும் மோதி
வந்த தும் சரிதான் என்று மனசுக்குள் ரகசியமா
நினைச்சிக்கிட்ட துண்டு..மனுஷன் இப்போ
அந்த நினைப்பில மண்ணை அள்ளிப்போட்டாரு
பாருங்க..அதுதான்யா. $.FIVE TRILLION 2024 புதுசா
ஒரு கனவு .. இது என்னய்யா.. இந்தியப் பொருளாதரத்தை 
பலூன் மாதிரி காற்றடிச்சா கூட FIVE TRILLION 
அமெரிக்க டாலரை எட்டுமா..
இந்தக் கணக்கை நானும் எத்தனையோ விதமா 
போட்டுப் பார்த்திட்டு இது என்னடா புதுக்கணக்கா 
இருக்குனு யோசிச்சி யோசிச்சி .. 
என்னைவிட கணக்குப் போடறதில்ல
 கெட்டிக்கார கணக்கப்பிள்ளைக்கிட்ட ஒரு போன்
போட்டு கேட்டா.. அவரு கோபத்தில என்னைக்
கண்ணாபின்னானு திட்ட ஆரம்பிச்சிட்டாரு..
சரவணா.. உனக்கு எதாச்சும் புரியுதா ..
புத்திசாலிகளுக்குப் புரியாத கணக்கு கூட
சில சமயங்களில் மரமண்டைக்குப் புரிஞ்சிடும்னு
சொல்லுவாங்க.,.. அதுதான் உங்கிட்ட கேட்கேன்..

இந்தக் கனவுகளுக்கு நடுவில் வரும் செய்தி
இந்தியப் பொருளாதரத்தின் சரிவை சரி கட்டுவதற்காக
 ரிசர்வ் பேங்க் தன் இருப்பு தங்கத்தை 30 ஆண்டுகளுக்குப்
 பின் முதல் முறையாக விற்றிருக்கிறது.

தனிமனிதர்கள் கனவு காணட்டும்.
ஆனா..
ஓர் அரசாங்கமே கனவு கண்டால்..
கனவுகள் தான் என்ன செய்யும்..????

தாங்கலடா சாமீ..

#Modi_Govt_dreams

No comments:

Post a Comment