Friday, March 6, 2020

மார்ச் 06.. 1967 தமிழக அரசியலை மாற்றிய நாள்

Image result for c.n.annadurai ministry

மார்ச் 06, 1967…
தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான நாள்.

1967..
அண்ணாவின் புகழ்மிக்க பேச்சுகளில் ஒன்று 
1967 என்ற தலைப்பில் பேசியது.
இந்த தலைப்பு அவராக எடுத்துக்கொண்ட தலைப்பல்ல.
வழக்கம் போல.. சட்டசபையில் அண்ணாவின் 
தம்பியரைப் பார்த்து அன்றைய நிதியமைச்சர்
 இன்னும் 10 ஆண்டுகள்
நீங்கள் எல்லாம் “சும்மா” இருங்கள் என்று சொல்ல
அதை நினைவில் வைத்துக்கொண்டு
மதுரையில் 11. 08-1957 ல்
1967 என்ற தலைப்பில் அண்ணாவைப் பேச சொல்கிறார்கள்.
அந்த உரையில் தான் அண்ணா சொல்கிறார்..
1967 ல் திட்டவட்டமாக
எதிர்காலம் எங்கள் கையில் இருக்கும்” என்று.

1957 ல் அண்ணா சொன்னபடியே 
1967 ல் தமிழகத்தின் எதிர்காலமானது
திமுக..!

மார்ச் 06, 1967 அண்ணா தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.
அந்தப் பதவியேற்பு விழாவில் அண்ணாவின்
 குடும்பத்தினருக்கு எந்த சிறப்பு
அனுமதி சீட்டும் வழங்க அனுமதிக்கப்படவில்லை..
அவரது மனைவி ராணி அண்ணாதுரையைத் தவிர
 மற்ற அனைவரும் பொதுமக்களோடு சேர்ந்து நின்றுதான்
 பதவியேற்பு விழாவைக் கண்டனர்.
இதை எழுதும் போது.. 
இன்றைய பதவி ஏற்பு விழாக்களும் 
செம்மொழி மா நாடுகளும் அதில் கலந்து கொள்ளும்
 தலைவர்களின் குடும்ப உறுப்ப்பினர்கள் அவர்களுக்கு என்று
ஒதுக்கப்படும் சிறப்பு இருக்கைகள்.. இத்தியாதி எல்லாம்
 நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல!

ம்ம்ம்.. 1967..
ஒரு தலைமுறையின் கனாக்காலமாய்..

No comments:

Post a Comment