Tuesday, March 3, 2020

ஒரு பெண் எழுத்தாளரை ரெளடியாக்கிய மதுரை

ஒரு (பெண்) எழுத்தாளரை ரௌடியாக்கிய
மதுரை.
“ட்டேய்.. மீசை வெறும் மசிருதாண் டா”
சில காரணங்களால் நான் கிளம்பவேண்டிய
மதுரை விமானத்தின் டிக்கெட் பிற்பகல் 2 மணி
விமானத்திற்கு மாற்றப்பட்ட து. இதற்கான சில
டெக்னிகல் காரணங்கள் உண்டு. அது இருக்கட்டும்.
தோழர் மதிகண்ணனும் தோழர் அஷ்ரபுதீனும் என்னை விமான நிலையத்தில் விட்டுவிட்டு சென்றார்கள்.
அதன் பின் 2 மணி வரை விமான நிலையத்தில்
இருக்க வேண்டியதில்லை என்று முடிவு செய்து
ஏற்கனவே என்னிடம் இருந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ்
டிரெயினைப் பிடித்துவிடலாம் என்று எண்ணி
விமான நிலையத்தை விட்டு வெளியில் வந்தேன்…
அதன் பின் நடந்த ஒவ்வொரு காட்சியும் ஒரு
திகில் படம் போல..
வெளியில் வரும்போது செக்யூரிட்டி ஆபிஸரிடம்
விமான நிலையத்திலிருந்து கிளம்பும் பேருந்து பற்றி
விசாரித்தேன். எல்லோருமே சொன்ன பதில்..
“பேருந்து வருமாம். ஆனால் வராதாம்.
எப்போ வரும்னு யாருக்கும் தெரியாதாம்.
அதற்குனு ஒரு நேரகாலமே கிடையாதாம்!”
வெளியில் டாக்சி நிற்கிறது…பாருங்கள் என்றவுடன்
வெளியிலிருக்கும் டாக்ஸி நிலையத்திற்கு வந்தேன்.
வரிசையாக வெள்ளை நிற வண்டிகள்.. காத்திருந்தன.
விசாரிக்கும் போது முதலில் ரூ 500 கேட்டு என்னவோ
எனக்காக 450 ரூபாயில் வருவதற்கு ரெடி என்றும்
 25 கிலோ மீட்டர் தூரத்தில் மதுரை ரயில் நிலையம் 
இருப்பதாகவும் சொன்னார். 
அவர் சொன்ன இத்தகவல் எனக்கு எரிச்சல்
ஊட்டியது. கூகுள் வரைபடம் நெடுஞ்சாலை வழியாக
செல்லும் தூரம் 9 கி.மீ என்றுதான் சொல்கிறது. 
அவரிடம் அதைச் சொன்னவுடன் அவருக்கு கோபம்
 வந்ததைக் கண்டேன். ஆனால் அவர் 450க்கு குறைவாக 
வரமுடியாது என்று தன் குரலை உயர்த்திப் பேசினார்.
அப்படியானால் பரவாயில்லை, 
நான் ஆட்டோவில் போய்க் கொள்கிறேன் என்று
 விமான நிலையத்திற்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு 
வரும் ஆட்டோவை அணுகும் போது அவர் ஓடி வந்து
 என்னை அதில் ஏற்றக்கூடாது என்று சத்தம் போட்டார். 
ஏன் என்று கேட்டபோது இந்த எல்லைக்குள் ஆட்டோவுக்கு 
அனுமதி இல்லை என்றவுடன் நான் வாகன ங்களுக்கு
நுழைவு கட்டணம் வசூலிக்கும் இட த் தைத் தாண்டி 
ஆட்டோவைப் பிடிக்க முயற் சி செய்தேன்.
அவர்கள் ஆறேழு பேராக சேர்ந்து ஒவ்வொரு முறையும் 
ஓடி வந்து அதையும் தடுத்தார்கள்..
எனக்குள் அடங்கி இருந்த அவள் முழித்துக் கொண்டாள்.
எங்கள் காரில் நாங்கள் சொல்லும் தொகையைக்
கொடுத்துவிட்டு தான் நீ பயணிக்க முடியும் என்ற
அதிகாரத்தை மிரட்டலை என்னால் பொறுத்துக் கொள்ள 
முடியவில்லை. மீண்டும் விமான நிலையத்திற்கு அருகில் 
நின்று கொண்டிருந்த டிராபிக் போலீஸ் வாகனம் அருகில்
வந்தப்போது அதிலிருந்து இறங்கியவரிடம் டாக்சிக்கார ர்களின்
 மிரட்டலைச் சொன்னேன்.
அவர் சொன்ன பதில்.. “மேடம்.. பல வருஷமா இதுதான் நடக்குது மேடம்” என்றார்.
“அப்போ நீங்க எதுக்கு இங்க நின்னுட்டு இருக்கீங்க?”
என் கேள்விக்கு அவரிடம் பதிலில்லை.
இதற்கிடையில் என்னைச் சுற்றி எட்ட டி தூரத்தில்
அவர்கள் வட்டமிட்டு நிற்கிறார்கள்.
அப்போது அதில் தலைவன் போல தெரிந்த ஒருவர்
தன் மீசையை முறுக்கினார் .. என்னைப் பார்த்து தான்!
நல்ல வாட்டசாட்டமான உருவம்.. 
நெற்றியில் பட்டையும் குங்கும மும். வேறு..
 அவன் மீசையை முறுக்க முறுக்க 
என்னை மீறிக்கொண்டு அவள் திமிறி எழுந்தாள்.
ஆதவன் தீட்சண்யா எழுதிய “மீசை வெறும் மயிரு தாண்டா” 
நினைவுக்கு வந்த து. நான் அத்தருணத்தில் அதைச் சொன்னேனா என்று தெரியவில்லை. 
அப்படியே சொல்லியிருந்தாலும் தான்
என்ன?????!!!

“டேய்… உங்க அதிகாரத்தை எல்லாம் காட்டினா
அதுக்கெல்லாம் பயப்படற ஆளு நானில்லைடா..
இன்னிக்கு நீயா நானானு பார்த்திடுவோம்..!”
உன் கண் முன்னாலேயே நான் ஆட்டோவில் ஏறிப்
போகல.. நான் …. இல்லடா..!
அவர்களில் ஒருவன் ஓடி வருகிறான்.
அண்ணன் என்னாச்சு..
ட்டேய்.. இந்தப் பொம்பள ரொம்ப பேசுதுடா..
இத்தனையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த து 
டிராபிக் போலீஸ் வேன்.
மதுரை ரெயில்வே நிலையத்திற்குப் போய்
டிரெயினைப் பிடிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை..
இந்த அடவாடித்தனத்திற்கு பயப்படப்போவதில்லை
என்று முடிவு செய்துகொண்டேன்.
அத்தருணத்தில் லக்கேஜ் ஏற்றிக்கொண்டு பயணிகளுடன்
 வந்த ஆட்டோ அருகில் சென்று ஆட்டோவில் ஏறி உட்கார்ந்து
“அண்ணா வண்டியை எடுங்கண்ணா..
இவனுக ஓடி வந்து நிறுத்த முயற்சிப்பாங்க..
கத்துவானுக.. வண்டியை நிறுத்தாதீங்க..
எடுங்க.. நான் பார்த்துக்கிறேன்ன்ன்ன்ன்ன்”
என்று சொல்லவும் அவர் வண்டியை ஸ்டார்ட்
செய்தார். வண்டி முன்னால் வந்து மறித்தவுடன்
“எப்பா…. பெருங்குடி தான் போனுங்காறங்க..
அதுதான் ஏத்துனேன்” என்று சொல்லிக்கொண்டே
ஆட்டோவை பட்டென்று திருப்பி வேகம் கூட்டி
எடுத்தார். அவர்கள் என்னை நோக்கி கத்தினார்கள்.
நான் தலையை வெளியில் நீட்டி அந்த மீசையை
முறுக்கினவனை ஒரு பார்வை பார்த்தேன்”
அதன் பின் ஆட்டோ ஒட்டுனரிடம் “அண்ணா எனக்குப் பெருங்குடி போகவேண்டாம்.. அப்படி நான் சொல்லவே இல்லியே.. “ என்றேன்.
அவர் திரும்பிப் பார்த்து அப்படி சொல்லாட்டி
வண்டியை விட்டிருக்க மாட்டானுகம்மா என்றார்.
எனக்கு மதுரை ரெயில்வே ஸ்டேசன் போகனும்னா
என்று சொல்லிவிட்டு .. பையிலிருந்த தண்ணீர்
பாட்டிலைத் திறந்து தண்ணீர் குடித்தேன்….
இப்படியாக மதுரை மா நகரம் ஒரு
எழுத்தாளரை ரெளடியாக்கிய பெருமையை
சேர்த்துக் கொண்ட து..
( நாள் 02 மார்ச் 2020, காலை 9.45 முதல் 11 மணி வரை)

4 comments:

  1. பெருங்குடிதான் பெருங்குழி என ஆகிவிட்டதோ..கண்ணகியாய் மாதவி..வாழ்த்துகளுடன்..

    ReplyDelete
    Replies
    1. திருத்திவிட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றியுடன்.

      Delete
  2. இது என்ன, எனக்கு இன்னும் பிரமாதமா நடந்திருக்கு. 1500 ரூபாய் தான் வாங்க சார், அருப்பு கோட்டை தான....வந்து இறங்கின பிறகு அது 2500. நீங்க அருப்புகோட்டையில இருந்து 15கி.மீ தள்ளி யிருக்கீங்க... பாருங்க எங்க கம்பெனி ஆப்ல அப்படிதான் சொல்லுது...OLA விலிருந்து அனைவரும் ஏமாற்று பேர்வலிகள்....

    ReplyDelete
  3. நீங்க ரவுடி ஆயிட்டீங்க. பாவம் அந்த ஆட்டோ காரர் இனி அந்த ஏர்போர்ட்கு எப்படி போயி அவைங்க கிட்ட உதை வாங்குவாரோ?

    ReplyDelete