எனக்கு இன்னொரு
ஏசு வேண்டும்.
அவர் கருப்பாக
இருப்பது அவசியம்
வெள்ளை ஏசு பழுத்த
இலை மாதிரி
திராட்சை தோட்ட
த்தில் மங்கிப் போகிறார்.
கருப்பு ஏசுவே
பச்சையமாய் ..
கருப்பு ஏசுவுக்கு
கட்டாயம்
மீசை இருக்க வேண்டும்.
மீசை என்பது வெறும்
மயிரல்ல.
மீசை நரைச்சாலும்
ஆசை நரைக்காத மர்ம்ம்
மீசை மயிரின் முத்தங்களின்
துளியில்
ஒட்டிக் கொண்டிருக்கிறது.
.முத்தங்களில்
சமரசம் செய்து கொள்ள
முடியாது என்பதால்
என் ஏசுவுக்கு
மீசை இருந்தாக வேண்டும்.
கருப்பு ஏசு அங்கியுடன்
அலைந்தால்
பொருத்தமாகவா இருக்கும்?
அவருக்கு வேட்டி
கட்டிவிடலாமா
அல்லது கோவணமே
போதுமா..
இதில் மட்டும்
குழப்பமாக இருக்கிறது.
அவருக்கு எது வசதியோ
விருப்பமோ
அதுவே என் விருப்பமும்.
சிலுவையில் தொங்கும்
ஏசுவைப் பார்த்தால்
எனக்கு அழுகை அழுகையாய்
வருகிறது.
தோற்றுப்போவோமோ
என்று அச்சமாக இருக்கிறது.
சிலுவையை ஆயுதமாக்கி
ஏசுவை குதிரையிலோ
ஆனையிலோ
ஏற்றிவிட்டால்
என்ன ?
கருப்பு ஏசுவுக்கு
அதுவே பொருத்தமாக
இருக்கும்.
ஆஹா கருப்பு
ஏசுவை
எங்கள் தெருவில்
குடியேற்றிவிட
முடிவு செய்தாகிவிட்ட
து.
ஏசுவுக்கு குடியுரிமை
இந்தியக் குடியுரிமை
இந்தியாவின் பெருமை..
செங்கோட்டை முரசுகள்
அதிர்கின்றன.
ஒருவழியாக கருப்பு
ஏசுவின் ஊர்வலம்
ஆரம்பித்துவிட்ட
து..
ஏசுவின் நாமமே
திருநாமம்
பாடலொலி விண்ணைப்
பிளக்கிறது.
தெருக்கோடியில்
ஏசு திரும்பும்போது
அது நடக்கிறது.
சாதிக்கலவரம்..
துப்பாக்கிகள்
வெடிக்கின்றன.
கருப்பு ஏசுவின்
திறந்த மார்பிலிருந்து
சாதி இரத்தம் சிவப்பாக..
144 தடையுத்தரவு..
சரி..போதும் களைந்து
செல்லுங்கள்.
கருப்பு ஏசு இப்போதெல்லாம் என்
கனவில் கூட வருவதில்லை.
புதிய பார்வை...
ReplyDeleteநன்றி தங்கள் வருகைக்கு.
ReplyDelete