"என்னைப் பின்பற்றுகிறவர்களும்
நேர்மையாளர்களாக இருக்க வேண்டும் "
அறிஞர் அண்ணா.
**
உங்களை நாத்திகர் என்கிறார்கள், நீங்கள் நிஜமாகவே
நாத்திகர்தானா?
அறிஞர் அண்ணாவின் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி நேர்காணல்
மிகவும் முக்கியமானது. பத்திரிகையாளர் ஏ. எஸ். ராமன் அவர்களுடன், அண்ணாவின் இல்லத்தில் வைத்து நடைபெற்ற
இந்த நேர்காணல் அண்ணாவின் மறைவுக்குப் பின்
13/04/1969 இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியில் வெளியாகிறது.
இந்திய தேசத்தின் அறிவுஜீவிகள் வாசித்த,
கொண்டாடிய பத்திரிகை இ.வீ.
ஏ. எஸ். ராமனின் இக்கேள்விக்கு அறிஞர் அண்ணாவின்
தெளிவான பதில் நம்மை சிந்திக்க வைக்கிறது.
"மதத்தைப் பற்றிய கேள்விக்கு வருவோம், உங்களை
நாத்திகர் என்கிறார்கள். நீங்கள் நிஜமாகவே நாத்திகர்தானா?
"இல்லை.
நிறுவனமயமாகும் மதங்களின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை
. மதம் இல்லாமல் மனிதனால் வாழவே முடியாது என்பது
என்னுடைய முடிவு. நான் உருவ வழிபாட்டுக்கு எதிரானவன்
. விக்கிரகங்களை வழிபடவும் மாட்டேன்.
விக்கிரகங்களை உடைப்பதை ஆதரிக்கவும் மாட்டேன்."
மும்பையிலிருந்து, அதாவது அன்றைய பம்பாயிலிருந்து
வெளிவந்த "சங்கர்ஸ் வீக்லி' இதழில் இந்த வார ஆளுமை
என்ற தலைப்பில் தமிழகத்தின் முதல்வராக இருந்த
அறிஞர் அண்ணாவின் பேட்டி 5/3/1967
தேசிய இதழில் வெளிவந்திருக்கிறது.
அதிலும் இதே கேள்வி வேறொரு விதமாக.
"உங்களை நாத்திகர் என்கிறார்கள்.
இதற்கு உங்கள் பதில் என்ன?"
அப்படியில்லை. எனக்கு 'உண்மையான நம்பிக்கை' உண்டு.
எனது சேவையையும் பணிகளையுமே வழிபாடாகக் கருதுகிறேன்.
எம் மக்கள் நம்பிக்கையை இழந்துவிடக் கூடாது என்பதே
\ எனது நோக்கம். அதே சமயம், அவர்கள் ஆத்திகர்கள்
என்ற போர்வையில் போலி வேடதாரிகளாகிவிடக் கூடாது
என்ற கவலையும் உண்டு.
அடுத்தக் கேள்வியில் தன் கருத்தை தெளிவாக
தன் "சொர்க்கவாசல்' திரைப்படத்தில் முன்வைத்திருப்பதாக
அண்ணா விளக்கம் அளிக்கிறார்.
அறிஞர் அண்ணா தன்னைக் கவர்ந்த எழுத்தாளர்களாக
இப்பேட்டியில் சொல்வது ,
சாமர்செட் மாம், பெர்னாட்ஷா, பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்,
ஹெச். சி. வேல்ஸ், ஆல்பிரட் மார்ஷல்.
அண்ணாவின் வேண்டுகோள் இதுதான்.
"என்னைப் பின்பற்றுகிறவர்களும்
நேர்மையாளர்களாக இருக்க வேண்டும் "
அறிஞர் அண்ணாவைப் போற்றுகிறேன்.
ஒரு தலைமுறை அவரைப் பின்பற்றியது.
ஒரு தலைமுறை அவர் பெயரை மட்டும்
பிடித்துக் கொண்டது.
இன்று அவர் சிலையாகவும்
அரசியலில் பெயராகவும் மட்டுமே
இருக்கிறார்.
. ****
எனக்கும் என் அரசியலுக்கும்
என்றும் அவரே என் வழிகாட்டி.
என் ஆசான்.
அதனால்தான்
அண்ணாவைப் போற்றுகிறேன்,
அண்ணா வாழ்க🌺
ReplyDeleteஅண்ணாவோடு அரசியலில் நேர்மை முடிந்தது.
ReplyDeleteஅறிஞர் அண்ணா என்றவுடன் சட்டென நினைவுக்கு வருவது அவருடைய தேர்தல் பிரச்சார யுக்தி எப்போதும் மக்களை தன்வயப் படுத்திக் கொள்ளும் தனித் திறமையும் தான். மாதமோ சித்திரை மணியோ பத்தரை உங்களை தழுவுவதோ நித்திரை மறக்காமல் எமக்கிடுவீர் முத்திரை...என்ற கவிதை ஆங்கிலப் புலமை.... Because , nothing என்று இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.... நான் அவரை புரிந்து கொண்டது... அண்ணா நாத்தீகரும் இல்லை ஆத்தீகரும் இல்லை இரண்டிலும் ஒட்டியும் ஒட்டாமலும் ஒரு புதிய கோணத்தில் அவருடைய அரசியல் என்னைக் கவர்ந்ததவைகள்.
ReplyDeleteஅண்ணா என்றென்றும் போற்றுதலுக்கு உரியவர்
ReplyDelete