எங்கள் பூமியின்
ஒரே ஒரு சூரியன்.எம் பயணத்தின் தேரோட்டி.
இந்தப் புழுதியில் ஒட்டிக் கொண்டிருக்கிறது
உன் சுவாசத்தின் பெருமூச்சு.
எல்லோரும் உன்னைப் பேசுகிறார்கள்..
நீ தலித்துகளின் தலைவன்! என்று.
அந்தக் குப்பைகளை கோணியில் பொறுக்கி எரித்துக் கொண்டிருக்கிறேன்.
இந்து மகா சமுத்திரம் இவ்வளவுதான்.!
மன்னித்து விடு.
சித்திரை விடியலில்
உன் அறிவுச் சிமிழின்
வாசனைத் திரவியத்தில்
ஒரு துளியை எடுத்து
எம் வாசலில் தெளித்துவிட்டுப் போ.
அறிவே ஆயுதம்.
நீ எங்கள் அறிவாயுதம்.
ஜெய்பீம்.
#புதியமாதவி_20240414
#ஜெய்பீம்
#Ambedkar_Jaibhim
No comments:
Post a Comment