Tuesday, October 10, 2017

சசிகலாவைக் கண்டு யாருக்கு அச்சம்?

சசிகலாவைக் கண்டு யாருக்கு அச்சம்?
"தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை
 விட ஆபத்தானவர் அல்ல சசிகலா"
சசிகலா குற்றவாளியா இல்லையா
நல்லவரா கெட்டவரா
மறைந்த "ஜெ"வின் மரணத்திற்கும் அவருக்கும்
 உள்ள தொடர்பு என்ன?
இப்படி எழும் கேள்விகளுக்கு நடுவில் இன்னொரு
 மிக முக்கியமான கேள்வியை தமிழக ஊடகமோ 
மனித உரிமை குறித்து பேசுபவர்களோ
எழுப்பாமலிருப்பது எனக்கு வியப்பாக இருக்கிறது.
1993ல் மும்பையில் நடந்த தொடர் வெடிகுண்டு வழக்கில்
 கைதானவர் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் 
அவருடைய வீட்டில் துப்பாக்கிகள் இருந்தது
 என்று கண்டுபிடிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு
5 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது.
தற்போது கூட தன் மகளின் நாசி அறுவைச்சிகிச்சையை 
முன்னிட்டு சிறையிலிருந்து
காப்பு விடுப்பில் (பரோலில்) வெ ளியில் வந்துவிட்டார்.
 இப்படியாக கடந்த 2 ஆண்டுகளில் அவர் வெளியில் இருந்தது மட்டும்
 5 மாதங்களுக்கும் மேலிருக்கும்.
ஆனால் சஞ்சய் தத் போல ஒரு குற்றவாளி அல்ல சசிகலா.
சசிகலா வின் குற்றப்பின்னணி பொருளாதரம் ஊழல்
 சார்ந்த குற்றமும் அதற்கு உடந்தையாக இருந்ததும்.
 இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டும்
என்றால் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் 
சாட்டப்பட்டவரை விட ஆபத்தானவர் அல்ல சசிகலா. 
ஆனால் ஏன் சசிகலா வின் காப்பு விடுப்பில்
இத்துணை கட்டுப்பாடுகள்? 
சசிகலா வெளியில் வருவதும் வெளியில் இருப்பதும்
யாருக்கு ஆபத்து? 
எந்த அதிகாரத்தின் கோட்டைக்கு அவர் வெளியில் இருப்பது
ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது?. 
இந்த ஒற்றைப்புள்ளியில் சசிகலா வின்
பரோல் விடுப்பு பற்றியும் அதிலிருக்கும் அரசியல்,
 மாநில அரசியல், மாநில அரசியலைக்
காவு வாங்கும் மத்திய அரசும் அரசியலும் பேசப்பட்டிருக்க வேண்டும்.
 ஆனால்
அதைப் பற்றி பேசாமல் அதிலிருக்கும் மாநில மத்திய அரசியலைப் பேசாமல் என்னவெல்லாமோ பேசிக்கொண்டிருக்கிறோம்.
இப்பதிவு சசிகலா என்ற தனிப்பட்ட அரசியல்வாதிக்கான 
ஆதரவு பதிவு அல்ல, (அது என் நோக்கமும் அல்ல. ) 
அதையும் தாண்டி, நாம் பார்க்க வேண்டிய மாநில மத்திய
 அரசியல் சதுரங்கம் ஆட்டம். இந்திய இறையாண்மை, மாநில
இறையாண்மை. இந்தியக் கூட்டாட்சி, மாநில சுயாட்சி

10 comments:

  1. கேள்விக்கான விரிவுரை நன்று.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கில்லர்ஜீ

      Delete
  2. புரிந்தும் புரியாதது போலவும், தெரிந்தும் தெரியாதது போலவும், வினாக் கணையை தொடுத்து இருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்குப் புரிகிறது.. மற்றவர்களுக்கும் புரிந்தால் சரிதான். வரவுக்கு நன்றி

      Delete
  3. பணபலத்தால் இருவருமே வெளியே வருகிறார்கள் ,நாட்கள் முக்கியமல்ல ,இருவருக்கும் சலுகை காட்டக் கூடாது !

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன். மிக்க நன்றி

      Delete
  4. நல்ல விளக்கம் நன்று! த ம 3

    ReplyDelete
  5. நானும் அப்படிதான் நினைத்தேன் மேடம்...தனிப்பட்ட சசிகலா மேல் எனக்கு ஆதரவு இல்லை. ஆனால் நம் மாநிலத்தின் சுய மரியாதையும், சுதந்திர அரசியலும் பறி போவதை யாரும் பேசுவதே இல்லையே..

    Siva..

    ReplyDelete