Monday, April 29, 2024

இந்திய அரசியலில் தலித் கட்சிகள்

 



ஃதலித் தலைவன் இந்திய பொதுச் சமூகத்தின் தலைவனாக முடியாது 🙏


ஃ தலித் அரசியல் என்பது நிவாரணங்களுக்கான கோரிக்கையாக மட்டுமே எவ்வளவு காலம் இருக்கும்? 🙏


சமூக அமைப்பு அரசமைப்பின் செயல்பாட்டை மாற்றலாம்; அதைச் செல்லுபடியற்றதாக்கலாம்; கேலிக்குரியதாகவும் ஆக்கலாம். இந்தியாவைப் பொறுத்தவரை, சமூக அமைப்பு சாதி முறையின் மீதே நிர்மாணிக்கப்பட்டுள்ளது.” (அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 1, பக்: 167)


ஒரு தலித் தலைவன் பொதுச்சமூகத்தின் தலைவனாக முடியாது. ஆனால் தலித் அல்லாத பிற்படுத்தப்பட்டோர் தலைவன் பொதுச் சமூக தலைவராகிவிடுவது பாத்தியப்பட்டிருக்கிறது.

தலித் தலைவர்களின் கட்சிகள் " தலித் கட்சிகளாக" மட்டுமே இருக்கும். அது எப்போதுமே பொதுஜன அரசியல் கட்சியாக முடியாது.

இதுதான் இந்திய பண்பாட்டு அரசியலும் தேர்தல் அரசியலும்.


எனவே, பண்பாட்டு அரசியலில் நியாய தர்மங்களை கூறுகளை அப்படியே தேர்தல் அரசியலுக்கு எந்தக் கொம்பனாலும் எடுத்துச் செல்ல முடியாது,!

இரண்டும் வேறு வேறாக இருக்கின்றன!


அரசியல் அதிகாரம் என்பதை தேர்தல் அரசியல் அதிகாரப் பங்கீடு வழியாகபெற்றுவிடலாம் என்பது லாஜிக்காக சரியாக இருந்தாலும் ஓட்டு அரசியலில் அதை செயல்படுத்துவதில் 

தலித் பண்பாட்டு அரசியல் மீது மட்டும் நியாய தர்மங்களை சுமத்துவது அர்த்தமற்றது. 

எந்த ஒரு தொகுதியிலும் தலித் ஓட்டுகளை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு தலித் தேர்ந்தெடுக்கப்படுவது சாத்தியம் இல்லை. 

தலித் தேர்தல்  அரசியல் என்பது எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக இதுவே இருக்கிறது. 

யாரோடு சேர்ந்து நிற்பது? எல்லோரும் தலித்துக்கு எதிராக வன்கொடுமையை நடத்தியவர்கள் தான். 

எந்த ஒரு ஆட்சியும் இதற்கு  விதிவிலக்காக இருந்ததாக சரித்திரம் இல்லை. 


இந்திய தேர்தல் அரசியலில் பண்பாட்டு அரசியலைப் பேசிய தலித் மட்டுமே எப்போதும்..

" பண்பாடு, கொள்கை, நியாய தர்மங்களின் பலிபீடத்தில் நிறுத்தப்படுகிறான்.


இதே பண்பாடு இதே நியாய தர்மங்களை வேறு எவருக்குமானதாக

பார்க்க விடாமல்

எது தடுக்கிறது.??

அதைக் கண்டடையுங்கள்!

அதுவரை..

அரசியல் பூங்காவில் நமக்கான மலர்கள் மலரவில்லை. 

எவ்வளவு காலம் தான் நிவாரணங்களுக்கான அரசியலே

தலித் அரசியலாக இருக்க முடியும்?🙏

#தலித்அரசியல்

#dalithpolitics


No comments:

Post a Comment