இந்தியப் பொருளாதர அடியாட்கள்
யார் இவர்கள்?
இவர்களை உங்களுக்கும் எனக்கும் தெரியும்.
இவர்கள் அதிகாரத்தின் உச்சத்தில்
இருப்பவர்கள் மட்டுமல்ல்
இவர்கள் இந்திய பொருளாதாரத்தை சீர்திருத்த
வந்தச் செம்மல்கள்
அப்படித்தான் அவர்களை எல்லாம் ஊடகங்கள் ஊதித்தள்ளிய போது
அந்தப் புள்ளிவிவரங்களில்
யார் தான் மயங்கவில்லை?
சொல்லுங்கள்!
இவர்களை உங்களுக்கும் தெரியும்
எனக்கும் தெரியும்.
Oriental Cerámics ல் வேலைப் பார்த்தவர் 1976 ல்
அந்த வேலையை உதறித்தள்ளிவிட்டு சொந்தமாக
ஒரு காப்பர் ஸ்க்ரேப்ஸ் பிசினஸ் தொடங்கியவர் தான்
இன்றைய வேதந்தாவின் உடமையாளர் அனில் அகர்வால்.
அது எப்படி
1993 ல் தன்னுடைய முதல் public issue
கொண்டுவந்த ஸ்டெர்லைட்
2003 ல் லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் பட்டியலில் இடம் பெற்ற
முதல் இந்திய கம்பேனியாக அதீத வளர்ச்சியை எப்படி எட்டிப் பிடித்தது?
இதற்காக மிகவும் கடுமையாக உழைத்த
மாபெரும் புத்திசாலிகள்
யார் யார்?
எத்தனை சின்ன மீன்களை விழுங்கி செரித்து
தன்னை அசுர பலத்துடன் காட்டிக்கொள்கிறது வேதந்தா!
வேதந்தா கட்ட வேண்டிய
வரி பாக்கி எவ்வளவு?
இந்திய அரசுக்கு இதனால் ஏற்பட்ட இழப்பு தொகை
எவ்வளவு? ஏன் ஆளும் கட்சியும் சரி எதிர்க்கட்சிகளும் சரி..
இதை எல்லாம்
பேசுவதே இல்லை? !!
இந்தியப் பொருளாதர அடியாட்களை
உங்களுக்குத் தெரியும்.
உங்களுக்குத் தெரியும் என்பது எனக்கும் தெரியும்.
அருமையாகச் சொன்னீர்கள்
ReplyDeleteநம்மாளுங்க உணருவாங்களா?
இந்த மக்கள் கழிவுநிலை வாழ்க்கையை தொடும்போதுதான் உணர்வார்கள்.
ReplyDeleteஅனில்அகர்வாலின் ஸ்டெர்லைட் இந்திய பொருளாதாரத்தை வளைத்து வளரந்த நிறுவனம். பொருளாதாரத்தின் அடியாட்கள் என்று இந்நிறுவனத்தை வகைப்படுத்திய விதம் மிக அருமை.
ReplyDelete