Friday, December 15, 2017

வங்கி லாக்கரும் பாதுகாப்பும்

வங்கி லாக்கரும் பாதுகாப்பும்


வங்கி லாக்கரில் கொண்டு வைத்துவிட்டால் ரொம்பவும்
 பாதுகாப்பாக இருப்பதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
 வங்கி நமக்கு பாதுகாப்பு வழங்குவதாகவும் நினைக்கிறோம்.
 ஆனால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்
கீழ் அறியப்பட்ட உண்மைகளின் படி
> லாக்கரில் வைக்கும் எந்தப் பொருளும் திருடு போனாலோ இயற்கை பேரழிவு  ஏற்பட்டாலோ அதற்கு வங்கி பொறுப்பல்ல.
>வங்கிக்கும் லாக்கர் வாடிக்கையாளருக்கும் உள்ள உறவு
வீட்டு உரிமையாளருக்கும் வாடகைக்கு குடியிருப்பவருக்குமான
உறவு முறையில் செயல்படுகிறது.

அண்மையில்( 15/11/17) மும்பையில் ஓர் அதிர்ச்சியான வங்கிக் கொள்ளை.
 ஹாலிவுட் படத்தில் வருவது போல ஒரு வங்கித் திருடு .
நவிமும்பையில் உள்ள பேங்க் ஆஃப் பரோடா,
 சன்படா கிளையில் பக்கத்து கடையிலிருந்து சுரங்கம் போட்டு
லாக்கர் அறைக்கு வந்து சற்றொப்ப 30 லாக்கர்களை உடைத்து
 அதிலிருக்கும் விலை உயர்ந்த பொருட்களை திருடிக் கொண்டு
சென்றுவிட்டான் திருடன். !!
  வழக்கம்போல லாக்கர் அறையில் சிசிடிவி கேமிரா
வேலை செய்யலையாம்!
எனவே லாக்கரில் எதாவது வைத்திருக்கிறீர்களா..
பத்திரமான இடத்தில் வைத்திருக்கிறோம்
என்றி நிம்மதியாக இருந்துவிடாதீர்கள்.
அடிக்கடி லாக்கர் வைத்திருக்கும் வங்கிக்குப் போவதுடன்
அக்கம் பக்கத்தில் எவனாவது  மண்ணைத் தோண்டிக்
கொண்டிருக்கிறானா, பக்கத்திலிருக்கும்
கடைகளில் எதாவது ரிப்பேரிங் வேலைகள் நடக்கிறதா
 என்று கவனமாகப் பார்த்துவிட்டு வாருங்கள்...
ஏன்னா.. உங்க லாக்கருக்கு நீங்க தான்யா பொறுப்பு.
 பேங்கு பொறுப்பில்ல..
அவுங்க பாட்டுக்கு எனக்குத் தெரியாதுனு கையை விரிச்சிட்டு போயிடுவாங்க..
ரொம்ப பயமுறுத்துவதாக நினைக்காதீங்க ..
உண்மையிலேயே நவிமும்பையில்
இருக்கும் என் தோழி இதை எல்லாம் செய்து கொண்டிருப்பதாகச் சொல்லுகிறார்....


8 comments:

  1. நாளைக்கே பேங்க் போயி எல்லா லாக்கரில் இருக்கும் மொத்த நகையும் எடுத்துக்கிறேன்னு சொன்னால் விடுவார்களா ?

    ReplyDelete
    Replies
    1. சொல்லிட்டு செய்யறதெல்லாம் ஆகாது. சொல்லாம செய்தா விட்டுடுவாங்கனு நினைக்கேன்.

      Delete
  2. இதுக்குதான் சொல்லுறது பேசாமல் எங்கிட்ட வந்து கொடுத்து வையுங்க என்று...நான் சொன்னால் யாரு கேட்கிறா?

    ReplyDelete
    Replies
    1. ஒரு பேங்க் திறங்க சார். வச்சிடுவோம்.

      Delete
  3. //லாக்கரில் வைக்கும் எந்தப் பொருளும் திருடு போனாலோ இயற்கை பேரழிவு ஏற்பட்டாலோ அதற்கு வங்கி பொறுப்பல்ல.//
    இந்த விஷயம் பெரும்பாலும் பலருக்கு தெரியாது.
    வங்கி லாக்கரில் அல்லவா நான் வைத்திருக்கிறேன் என்று பெரும்நம்பிக்கையுடனும், தனது பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய பொருமிதத்துடனும் அல்லவா சொல்வார்கள்!

    ReplyDelete
    Replies
    1. பொதுஜன நம்பிக்கை நீங்கள் சொல்வது போலவே இருக்கிறது. ஆனால் சட்டப்படி அதுவல்ல உண்மை. பாரத ரிசர்வ் வங்கியும் அண்மையில் இது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

      Delete
  4. இங்கு பாதுகாப்புக்கே பாதுகாப்பு இல்லாத நிலை.

    ReplyDelete
  5. சிறந்த வழிகாட்டல்

    ReplyDelete