Wednesday, April 12, 2017

இன்று அதிமுக ; நாளை திமுக.



இன்று அதிமுக நாளை திமுக
திராவிட அரசியலுக்கு ஓரு சோதனைக்காலம்
மாநில சுயாட்சி என்ற கூட்டாட்சி அரசியலை இந்திய மண்ணில்
டில்லியின் செங்கோட்டை நிமிர்ந்து பார்க்கும் அளவுக்கு
பேசியவர்கள் நாம். திராவிட அரசியலின் மாநிலசுயாட்சி  கொள்கை
இந்திய மண்ணின் மாநில கட்சிகளுக்கான அடிப்படை உரிமை.
இந்திய கூட்டாட்சி முறையின் இன்னொரு விரிவாக்கம்.
ஒரே கட்சி  ஒரே தேசம் ஒற்றை ஆட்சி என்பது இந்திய மண்ணையும்
மனிதர்களையும் வரலாற்று ரீதியாகவும் பூகோள ரீதியாகவும்
அறியாத அரசியல் கட்சிகளின் அதிகார வெறி.
இந்த அதிகார வெறிக்கு இன்று தமிழகம் பலியாடு ஆகிவிட்டது.
ஜெ வின் மரணமும் கலைஞரின் செயல்படா நிலையும்
இன்றைய தமிழகத்தில் ஏற்படுத்தி இருக்கும் வெற்றிடத்தை
 காற்றாக வந்து நிரப்பிவிட துடிக்கிறது பிஜேபி.
அதற்கு சாதகமாக இருக்கும் எவரையும் தன் வசப்படுத்திக்கொள்ள
துணிகிறது. எப்படியும் பெரும்பான்மை எம் எல் ஏக்கள் ஆதரவுடன் தமிழகத்தில் நடக்கும் அதிமுக ஆட்சியைக் கவிழ்த்துவிட்டால் போதும் , அடுத்து தங்கள் கட்சிதான் ஆட்சியைப் பிடிக்கும்
 (ஆட்சியைப் பிடிக்குமா?) என்ற அபரிதமான நம்பிக்கையில்
ஆட்சிக் கவிழ்ப்புக்கு துணை போகிறது திமுகவும்.
இன்றைக்கு ஒரு பெரும்பான்மையான கட்சியின் ஆட்சியை
ஊழல் என்றும் வருமானவரி என்றும் காரணம்காட்டி
கவிழ்த்துவிட்டால் நாளை இதே ஆட்சி கவிழ்ப்புக்கு
 திமுக மட்டும் விதிவிலக்காக இருக்க முடியுமா என்பதையும்
சேர்த்தே யோசிக்க வேண்டும்.
 இப்படியான ஜனநாயகப் படுகொலையைச்
செய்துவிட்டு ஆட்சிக்கு வருவதை விட
மக்கள் மன்றத்தில் பயணித்து முறையாக
தேர்தலைச் சந்தித்து தங்களால் மீண்டும்
ஆட்சியை அமைக்க முடியும் என்ற
திமுக காட்ட முடியும். திமுக வால் அது முடியும்.
அதற்கான தொண்டர் படையும்
உழைப்பும் ஆள்பலமும் பணபலமும் சகலமும்
திமுகவிடம் இன்னும் குறையாமல் இருக்கிறது.
அதிமுக ஆட்சியை இன்று கவிழ்த்துவிட்டு ஆட்சிக்கு வந்துவிடலாம்.
ஆனால் அதே ஊழல் வருமானவரியை காரணம் காட்டி திமுகவின் அரசியலையும் பிஜேபி ஒழித்துக்கட்டும்.
அதற்கு வழிவிடப்போகிறார்களா
அல்லது தலைநிமிர்ந்து பிஜேபிக்கு அரசியல் பாடம் நடத்தும்
துணிவுடன்  நிகழ்கால வெற்றிடத்தை அர்த்தமுள்ளதாக
 மாற்றப் போகிறார்களா..?
இன்று அதிமுக. நாளை திமுக.

பிகு: துரைமுருகன் அண்ணாச்சி மற்றும் தமிழிசை அக்கா இருவரும்
உளறுவது போல இருந்தாலும் அவை உளறல்கள் மட்டுமல்ல.
உடையும் ரகசியக் கசிவுகள்.

3 comments:

  1. மிகச்சரியான கணிப்பு

    ReplyDelete
  2. தமிழ்நாட்டிற்கு வெளியில் இருந்து பார்க்கும் உங்களுக்குச் சரியாகக் கணிக்கமுடிகிறது. எடப்பாடியைக் கவிழ்த்துவிட்டு எளிதாக திமுக ஆட்சிக்கு வரமுடியும். அதற்குத்தேவையான பணம் 2ஜி தயவில் அவர்களிடம் உண்டு. ஆனால் மத்திய அரசை எதிர்த்து நிற்க முடியுமா? எனவே தான் ஸ்டாலின் பொறுமையாக இருக்கிறார். ஆனாலும், திமுக, அதிமுக இரண்டுமே மக்கள் விரோதக் கட்சிகள் என்று நிரூபணம் ஆகிவிட்ட பிறகு, மூன்ன்றாவதாக ஒரு கட்சிதான் இனிமேல் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

    - இறைய செல்லப்பா (சுற்றுப்பயணத்தில்) நியூ ஆர்லியன்ஸ்

    ReplyDelete
    Replies
    1. வெற்றிடம் ஏற்படும்போது தலைமை உருவாகும் என்பது சமூகவியல் பாடம். ஆனால் அதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை.

      Delete