Monday, April 10, 2017

இது டிரெய்லர் தான்

Image result for modi cartoon
"ரொம்ப டேஞ்சரானா ஆளுப்பா மோடிஜி."
ஆர் கே நகரில் தினகரன் வெற்றி பெற்றுவிட்டால்..
அவ்வளவுதான் ஓபிஎஸ் க்கு மட்டுமா அரோகரா.
எல்லோருக்கும் தான்.
எல்லோரும் மொட்டை அடிச்சி முக்காடு போட்டுக்க
வேண்டியதுதான்.
ஜெ தீபா வெற்றி பெற்றுவிட்டால்
புதுசா இன்னொரு கட்சி  முளைக்கும்..
அரசியல் விளையாட்டு ரொம்பவும் தமாஷா போயிடும். .
ஓபிஏஸ் அணி வெற்றி பெற்றுவிட்டால்
நாங்க தான்  அ அ திமுக - அதாவது
அசல் அதிமுகனு அழிச்சாட்டம்  பண்ணி
உண்டு இல்லைனு இரட்டை இலையை பிச்சி எடுத்திடுவாங்க
. ஸ்டாலின் தலைமையில் திமுக வெற்றி பெற்றுவிட்டால்..
அதிமுக வின் பெரும்பான்மையை தங்களின் இந்த
 ஒற்றை வெற்றியை வைத்து கேலிக்கூத்தாக்கி
இப்பவே ஆட்சியைக் கலைக்கவும் தேர்தல் நடத்தவும்
 என்னவெல்லாம் செய்யமுடியுமே
அதை எல்லாம் டில்லியில் ஷிப்ட் முறையில் போயி வந்து
வந்து போயி  மே மாத வெயிலில் அனைவரையும்
மண்டைக்காய வைத்திருப்பார்கள்.
 ஒருவேளை நம்ம கரகாட்டம் கங்கை அமரன் வெற்றி
பெற்றுவிட்டால் ... அய்யய்யோ
கற்பனை இப்படி எல்லாம் கொஞ்சம் ஓவரா போகக்கூடாதுனு
சொல்றீங்களா..
என்னவொ ... இவர்கள் அனைவருக்கும் வைத்தாரு பாருங்க
மோடிஜி ஒரு ஆப்பு.. பூ னு ஊதித்தள்ளின மாதிரி இருக்கே..
ரொம்ப டேஞ்சரானா ஆளுப்பா மோடிஜி.
இது சும்மா ஒரு டிரெய்லர்தான் !

2 comments:

  1. எல்லாவற்றிற்கும் மோடியை இழுப்பது ஏனோ? தினகரன் வந்துவிடக்கூடாது என்று அவர்களுடைய ஆசாமிகளே போட்டுக் கொடுத்திருக்கிறார்கள் என்று கேள்வி. தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சாதியினர் ஜெயலலிதா காலத்தில் ஆட்சி நடத்திக்கொண்டிருந்தார்கள். இப்போது வடமாவட்டத்ததைச் சேர்ந்த சாதியினரிடம் ஆட்சி வந்திருக்கிறது. இவர்கள் விட்டுவிடுவார்களா? இன்னும் நாலு வருடம் பொறுத்தால் மீண்டும் பெங்களூரில் இருந்து 'அவர்' வந்துவிடுவார். அப்புறம் இன்னொரு ஆட்டம் இருக்கிறது. பார்த்துவிடுவோமே!

    -இராய செல்லப்பா (இன்று) நியூ ஆர்லியன்ஸ்

    ReplyDelete
  2. நீங்கள் சொல்வது எல்லாம்
    சரியெனத்தான்படுகிறது
    கங்கைஅமரன் குறித்துச்
    சொன்னதை இரசித்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete