Friday, May 29, 2015

உடைந்தக் கனவுகள்

அனுப்புநர்:
புதியமாதவி (மல்லிகா சங்கரநயினார்)
505/5 ஹேமா பார்க் அடுக்குமாடி குடியிருப்பு,
பாண்டூப் - கிழக்கு
மும்பை 400 042.

பெறுநர்:
செயலாளர்,
மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம்,
மும்பை.

அன்புடையீர்,
வணக்கம்.  

மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றத்தை 
ஒரு எழுத்தாளருக்குரிய கனவுகளுடன் நானும் 
மறைந்த சீரிவரிசை சண்முகராசன் அவர்களும் 
 திரு குமணன், கருண், செந்தில் நாகராஜன் மற்றும் சமீராமீரான் ஆகியோருடன் சேர்ந்து ஆரம்பித்தோம்.
2000 வருடத்தில் ஆரம்பித்த எழுத்தாளர் மன்றத்தின்
 ஓவ்வொரு செயல்பாடுகளிலும் என் உழைப்பையும்
 பங்களிப்பையும் தொடர்ந்து வழங்கி இருக்கிறேன்.
2000 ல் வெளியான "ஹேராம் "கவிதை முதல் 201
5 வெளியான என் 14வது புத்தகம் "கதவுகள்  திறக்கும் வானம் " வரை
 என் நன்றியை உங்களுக்கு சொல்ல நான் மறந்ததில்லை.

எழுத்தாளர் மன்றத்திலிருந்து ஒவ்வொருவராக வெளியேறிய காலக்கட்டத்திலும் இந்த மன்றம் என் கனவு என்ற 
பிடிவாதத்துடன் மன்றத்தின் சார்பாகவே  நின்று என் கடமையை செய்திருக்கிறேன்.

விமர்சனங்கள் எனக்குப் புதிதல்ல.
 காத்திரமான விமர்சனங்களை எப்போதும் வரவேற்பதில்
 எனக்கு சிரமம் ஏற்பட்டதில்லை.
 முரண்பாடுகள் பகை முரண்கள் அல்ல
 என்ற தெளிவு எனக்கு எப்போதும் உண்டு.
 அதனால் தான் என் கருத்து முரண்பாடுகளுக்கு நடுவில்
 உங்களுடன் இணைந்து செயலாற்ற முடியும் என்று நம்பினேன். ஆனால் அதற்கான எல்லா கதவுகளையும் நீங்கள் 
அடைத்துவிட்டீர்கள்.
  என்னைக் காயப்படுத்துவதாக நினைத்து  நான் கட்டி எழுப்பி
இருந்த உங்கள் பிம்பங்களை உடைத்து விட்டீர்கள். 

எனவே எழுத்தாளர் மன்றத்தின் அடிப்படை உறுப்பினர் மற்றும்
பொறுப்புகள் (அப்படி எதாவது கொடுக்கப்பட்டிருந்தால்) அனைத்திலும்
இருந்து இன்றுமுதல் விலகிக் கொள்கிறேன்.

மேலும் தென்னரசு இதழை எனக்கு அனுப்பும் சிரமத்தையும்
 தவிர்க்கவும் என்று  பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..

மும்பை பெருநகரமல்ல. சிறு நகரம்தான்.
 எங்காவது, எப்போதாவது நாம் சந்திக்க நேர்ந்தால் 
கண்ணியத்துடன் ஒரு புன்னகையை மட்டுமாவது 
நாம்  பரிமாறிக்கொள்வதற்காகவே நான் உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். 

உடைந்தக் கனவுகளுடன் விடைபெறும் இத்தருணத்தில்
 உங்கள் அனைவருக்கும் என் நன்றி.


- புதியமாதவி,
மும்பை.
2015, மே 29. 




4 comments:

  1. ஏன்? என்னாச்சு? சரிசெய்யக்கூடிய வழிகளையும் முன்வைத்திருக்கலாமே? சரிசெய்ய இயலாத அளவிற்குப் போய்விட்டதாக நினைத்தால் அதையும் எழுதியிருக்கலாமே?

    ReplyDelete
    Replies
    1. அவர்கள் எழுத்தாளர் மன்றத்தை அரசியல்கட்சியின் அங்கமாக பார்க்கிறார்கள். நான் எழுத்தாளருக்கு அரசியல் இருக்கலாம்,எழுத்தாளர் மன்றம் அரசியல் கட்சியின் அங்கமல்ல என்கிறேன். முரண்பாடுகள் முற்றும்போது என்னால் அரசியல்வாதி போல செயல்பட முடியாது என்பதால் விலகிக்கொள்கிறேன்.

      Delete
  2. தங்களின் வேதனை புரிகிறது சகோதரியாரே
    பிரச்சினை என்று ஒன்று இருந்தால்
    தீர்வு என்று ஒன்றும் இருக்கத்தானே செய்யும்
    விலகுவது கூட ஒரு தீர்வுதான்

    ReplyDelete
    Replies
    1. விலகுவது என்பதே கடைசித் தீர்வாக் இருந்தது/. அந்தப் புள்ளியில் என்னை அவர்கள் தள்ளிவிட்டார்கள். இப்போது தெளிவாக இருக்கிறேன். நன்றி கரந்தை ஜெயக்குமார்.

      Delete