அருணா ...
நீ இன்று விடைபெறுகிறாய்..
நியாயங்களை எந்தப்பெண்ணும்
பேசக்கூடாது என்று சொல்லும் நம் சமூகத்தில்
வாழ்வது கூட ஒவ்வொரு நாட்களும்
பெரிய தண்டனைதான்.
அந்த தண்டனையிலிருந்து
உன்னை விடுவிக்கும்
உன் மரணம் அழகானது.
போய் விடு அருணா..
போய்விடு..
உன் கடைசிப்பயணத்தில்
இந்த நாள் வரை
காயப்பட்ட உன் பெண்ணுடலில்
தன்னைக் கண்டு
ஒரு நாள் அல்ல... ஒரு மாதம் அல்ல..
ஓராண்டும் அல்ல.. 42 வருடங்கள்
படுக்கையில் இருந்த அந்தப்பெண்ணுடலை
தன்னுடலாக கவனித்த
மருத்துவமனை செவிலியர் அனைவரையும்..
அவள் சார்பாக..
உங்கள் கைகளைப் ப்டித்து முத்தமிட்டு
நன்றி சொல்லுகிறேன்..
நம் தோழி.., அருணா ..
தன் கடைசிப்பயணத்தில் கேட்கிறாள்..
முகம் தெரியாத அருணாக்களுக்காக
நம்மைப் போராட சொல்லி..
..
தெரியாமல் எத்தனையோ அருணாக்கள் ஓர்மையின் அடர்ந்த பனிமலையில் மயங்கி கிடக்கிறார்களோ...? என்ற என் தோழி மீரா நிறம் அவர்களின் வரிகளுடன்..
அருணா குறித்த என் பதிவுகள்:
http://puthiyamaadhavi.blogspot.in/2011/03/blog-post_03.html
http://puthiyamaadhavi.blogspot.in/2010/08/blog-post_05.html
No comments:
Post a Comment