புத்தகத் திருவிழாவில் "சாமியாடிகள்"
புத்தகத் திருவிழாவில் "சாமியாடிகள்"
Daily book fair to Mumbaikar.
An excellent encyclopaedia at roadside.
உலகில் அச்சில் வெளிவந்த புத்தகங்கள் அனைத்தும் கிடைக்கும் சென்ற வாரம் வெளிவந்த புத்தகமாக இருந்தாலும் சரி இந்த வாரம் கடை பரப்பி விடும் .
நெருடா மட்டுமல்ல இன்று எழுதிக் கொண்டிருக்கும் Jericho Brown ( The Tradition- poems) வரை வாங்கலாம்.
இலக்கியம் மட்டுமல்ல ராமச்சந்திர குஹாவும்..Thomas Sowell எழுதி இருக்கும் wealth poverty and politics புத்தகம் அதே கட்டியான அட்டையில் கிடைக்கும்.
இதை விட ஆச்சரியமான இன்னொரு உண்மை கல்லூரி ஸ்கூல் பாடப்புத்தகங்களை வாங்கும்போது சாலையில் உட்கார்ந்து இருக்கும் அந்த இளைஞர் நம்மிடம் கேட்கும் கேள்விகள் பதில் சொல்வதற்குள் தலைசுற்றும் ..!
எந்த ஸ்கூல்?
கல்லூரி பெயர்?
ஓகே அப்படியானால் மூன்றாம் பதிப்பு பௌதிகம் இதுதான் புத்தகம் என்று எடுத்துக் கொடுப்பார்.
structural engineering books எது சிறந்தது? Basic Book எது? சொல்லுவார்.
சகலவிதமான தேர்வுகளின் மாதிரி வினா விடை தாள் புத்தகங்கள் குவிந்திருக்கும்.
Comics novels non fictions எல்லாம் கிடைக்கும்.
குவிந்திருக்கும் புத்தக பெருங்கடலில் ஒவ்வொரு புத்தகம் பற்றியும் அறிந்திருப்பார் அந்த இளைஞர். அவருடைய கசங்கிய சட்டையும் தோற்றமும்.. வைத்து அவரை கணித்து விடாதீர்கள் 😊.
அது எப்படி rs.2000 புத்தகத்தை இருநூறு ரூபாய்க்கு விற்கிறார் என்று கேட்காதீர்கள். அது எங்கள் மும்பை ரகசியங்களில் ஒன்று.
அதைப்பற்றி என் 'பச்சை குதிரை' நாவலில்
இரண்டு பக்கம் எழுதி இருக்கிறேன்.
என்ன... தமிழ் புத்தகங்கள் கிடைக்காது! காரணம் எது மும்பையில் விற்பனையாகுமோ அதைத்தானே அவர்கள் கடைப்பரப்ப முடியும்! ( நல்லவேளை ...தமிழ் பதிப்பக முதலாளிகள் நிம்மதியாக இருக்கலாம்)
ஆங்கிலம், இந்தி ,மும்பை என்பதால் சில மராட்டி புத்தகங்கள் .. cross word Or Amazon ல் கிடைக்காத புத்தகங்களும் இவர்களிடம் கிடைக்கும். ...
The real encyclopaedia of books..
One of the wonders of Mumbai.
மர்மக்கதைகளுடன் விடியும் பொழுது
ஓர் இசையின் காதல்..
என் உயிரின் காதலே
என் உயிரையும் உடலையும் ஆன்மாவையும் எடுத்துக்கொண்ட என் அன்பே.
என் உயிரில் உயிராய் இருந்தும்
என்னைத் தவிக்கவிட்டிருப்பவரே
நான் விரும்புவதெல்லாம் உங்கள் ஒரு பார்வையைத்தான்
ஆனால் நீங்களோ என்னைத் திரும்பிக்கூட பார்க்கவில்லையே
என் மனம் எப்படி வேதனைப்படுகிறது என்பதை
உங்களால் புரிந்து கொள்ள முடியுமா?
உங்கள் புகைப்படத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுகிறேன்.
அந்தப் படம் என்னிடம் பேசுமா கண்ணா!
என் வீட்டில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. அங்குப் பிரச்சனைகள் தான் இன்னும் சில வருடங்கள்தான் என் அம்மா உயிருடன் இருக்கப்போகிறார்.. என் அண்ணன் எனக்கு எதிரி. தங்கை ஓகே. நான் உங்களிடம் எதையும் மறைக்க மாட்டேன். நான் இதுவரை மகிழ்ச்சியாக இருந்ததில்லை. ஆனால் நான் இங்கு இருப்பதால் உயிருடன் இருக்கிறேன்.
கண்ணா, இதையெல்லாம் எழுத இன்றுதான் கொஞ்சம் நேரம் கிடைத்தது... ஒன்று மட்டும் உண்மை. உன் சந்தோஷம்தான் என் சந்தோஷம் கண்ணா.
நான் முன்பு என்ன செய்து கொண்டிருந்தேன் என்று நீங்கள் கேட்கலாம். நான் கஷ்டப்பட்டேன்.
படம் முடிந்தப்பிறகும் நான் உங்களைப் பிரிய மாட்டேன்.
தயவுசெய்து என்னைத் தேவையில்லாமல்
சோதிக்காதீர்கள்.
படம் முடிந்தப் பிறகு, நாம் ஒன்றாக இருப்போம் ...
உங்கள் மீது நான் கொண்ட காதல்
என்றும் மாறாது.
நான் இறந்தப் பிறகு நீங்கள் அதை உணர்வீர்கள்.
பிறந்ததிலிருந்தே என் வாழ்க்கை துன்பங்கள் நிறைந்தது...
நான் பாவி.. இப்படித் துன்பங்களை அனுபவிக்க நான் பெரும் பாவங்களைச் செய்திருக்க வேண்டும். நான் மதுரையில் இருந்திருந்தால் எப்போதோ செத்து போயிருப்பேன்.. பேசுவதற்கோ அழுவதற்கோ யாருமில்லாதவள் நான்.
உன்னைத் தினமும் கனவில் காண்கிறேன்.
நீங்கள் ?…
நாம் ஒன்றாக நடிக்கும் போது
நீங்கள் என்னைத் தொடும்போது,
உங்கள் ஸ்பரிசம் , “இவர்தான் என் தலைவர்” என்று உணர்த்தும்.
அந்த எண்ணமே மகிழ்ச்சி தரும்.
என் வாழ்க்கையில் எனக்கு வேறு எதுவும் வேண்டாம்.,
உங்கள் அன்பைத் தவிர.
நீங்கள் பொதுவாக என்னுடன் மகிழ்ச்சியாக இருந்தால், அது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தரும். வீட்டில் இருப்பவர்கள் என்னை என்ன செய்வார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அழியாத புஷ்பவனம் நீண்ட ஆயுளுடன் இருக்கும் என்று ஜோதிடரால் கணிக்கப்பட்டது. ஆனாலும் அவரும் இளம் வயதிலேயே இறந்துவிட்டார். எனக்கும் அதுவே நடக்கும். இருப்பதைவிட நான் இறப்பதே நல்லது.
குறைந்த பட்சம் இப்போது, டூயட் படமாக்கப்படும்போது,
நீண்ட காலம் காத்திருந்த உடலின் வேட்கை வெளிப்படாமல் தவிர்ப்பீர்களா?
கச்சேரி நன்றாக இல்லை. உங்கள் இசையைத் தவிர வேறு எந்த இசையும் என் காதில் விழவில்லை.
இது மறைக்கப்படாத உண்மை. உங்களைப் போலவே நானும் பாட வேண்டும். படம் முடிந்தப் பிறகும், நீங்கள் தொடர்ந்து எனக்கு இசை கற்பிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.
இனி ஒரு கணம் கூட உங்களைப் பிரிந்து இருக்க மாட்டேன்.
இப்படிக்கு
உங்களை வணங்கும் குஞ்சு
என் அன்பே, என் உயிரே,
உங்கள் கை எழுத்தையும் இசையையும் முத்தமிடுகிறேன்.
என் கண்ணா..
என்றும் உங்களை விட்டுப் பிரியமாட்டேன்
எம்.எஸ். சுப்புலட்சுமி..
@@@@@
சகுந்தலை திரைப்படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த
ஜி. என். பாலசுப்பிரமணியன் என்ற இசைக்கலைஞருக்கு
இசைக்குயில் எழுதிய காதல் கடிதம்.
காதல்.. அப்படியேதான் இருக்கிறது.
அன்றும் இன்றும்.
இக்கடித த்தை வாசித்தப்பிறகு மீண்டும் ஒருமுறை அவள் குரலில் கரைந்து போகிறேன்.
“குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா..
குறை ஒன்றும் இல்லை கண்ணா..” பாடலை.
அவள் உருகி உருகி பாடுகிறாள்.
அவள்கள் பாடிக்கொண்டே இருக்கிறார்கள்..
இந்திய ஒன்றியத்திற்கு அண்ணாவின் அரசியல் துணைதேச அரசியல் இன்று தேவைப்படுகிறது.
அண்ணாவை முன்வைத்து அறிஞர் அண்ணாவின் 53 வது நினைவு நாளில் என் உரை .
https://youtu.be/sxnfl9e1wns
https://youtu.be/sxnfl9e1wns
கவிதைகள் பிச்சை எடுப்பதற்கு அல்ல.
உங்கள் ‘காற்றில் கலந்த பேரோசை’யில் ஜீவாவைப் பற்றி எழுதியுள்ளீர்கள். பெரியார் உங்களைப் பாதிக்கவில்லையா? இத்தேர்வுக்கு அரசியலும் ஒரு காரணமாக இருக்குமோ?
ஜீவா
எங்கள் ஊரைச் சேர்ந்தவர். பத்து வயது வாக்கில் நான் அவரைப் பார்த்தாயிற்று. பின்பு
அவரது மறைவு வரையிலும் அந்தத் தொடர்பு நீடித்தது. எங்கள் ஊருக்குப் பெரியார்
வந்துபோகக் கூடியவர் என்றாலும் என் குடும்பப் பின்னணியில் அவர் பெயர் அடிபடவே
இல்லை. சிறுவயதில் நான் மலையாள எழுத்தாளர்களைத்தான் அதிகம் படித்தேன். எம்.
கோவிந்தன், சி.
ஜே. தாமஸ், தகழி, பஷீர் போன்றவர்களை. எங்கள்
பகுதி தமிழகத்துடன் இணைந்த பின்புதான் எனக்குப் பெரியார்மீது கவனம் வந்தது.
அவருடைய உண்மை உணர்ச்சியை நான் ஏற்றுக்கொண்டேன். அந்த உண்மைகளை அவர் முன்வைக்கும்
முறைகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதில் ஈரமோ, அழகியலோ, அரவணைப்போ இல்லை.
பெரியாரை
நீங்கள் நிராகரிப்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட மொழி சம்பந்தமாக மட்டும்தானா?
பெரியாரை
நான் நிராகரிக்கவில்லை. அவருடைய கருத்துகளில் பெரும்பான்மையானவை நான்
ஏற்றுக்கொள்ளக்கூடியவைதான். சொல்முறை பற்றிச் சொன்னேன். மொழிக்கும் கருத்துக்குமான
உறவு எனக்கு மிக முக்கியம். அவரது இயக்கத்தில் அவர் ஒருவர்தான் சொல்லோடு செயலை
இணைத்திருந்தவர். பின்னால் வந்தவர்கள் எவரையுமே அப்படி சொல்ல முடியாது. அரசியல்
தளத்தில் ஆகப் பெரிய அநாகரீகங்களை உருவாக்கியவர்கள் அவர்கள். அந்த இயக்கத்தின்
இன்றையச் சரிவு கொடுமையானது.
அழியாச்சுடர்களில்
இடம்பெற்ரிருக்கும் எழுத்தாளர் சு,ராவின் நேர்காணல்.
இதில்
சு. ரா முன்வைக்கும் மொழியின் ஈரம் அழகியல் என்பது என்ன?
இதைக்
கட்டுடைத்தால் அது ஓர் அணுகுண்டைப் போல வெடித்து சிதற்கிறது.
சு.ராவின்
முதல் நாவல் “புளியமரத்தின் கதை”யை எடுத்துக்கொண்டால்
அதில் திருவிதாங்கூர் மன்னர் வந்துப்போகும் காட்சிகள் வரும்.
திருவிதாங்கூர் மன்னர் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வரும்
சமூக நிகழ்வுகள் எதுவும் அதிலிருக்காது. அவர் வீட்டுக்கு
அருகில் தான் சவேரியர் சர்ச் இருக்கிறது.
பல இலட்சம் மக்கள் மதமாற்றம் நடந்திருக்கிறது.
அதுவும் அவர் எழுத்தில் வரவில்லை. அவர் காலத்தில்
நிகழ்ந்த மண்டைக்காடு கலவரம் அவருக்கு
மிக அருகில் நடைபெற்ற சம்பவம். அவர் அப்போது
தன் இரண்டாவது நாவலை எழுதி வெளியிட்டுக்கொண்டிருந்தார்.
அவர்களைப் பொறுத்தவரை “தனிமனித
அனுபவம் மட்டுமே இலக்கியம்,
அதாவது அவர்களைப் பாதிக்காத எதையும்
அவர்கள்
ஏற்றுக்கொள்ளவில்லை. இதுதான்
நடந்திருக்கிறது!
இலக்கியத்திற்கு
சமூகப்பொருளாதர நிலைமைகளால் மானிடரில் பல வர்க்கங்கள்
பாதிப்புக்கு
உள்ளாகும் அவலங்களைவிட , பாரபட்சமான ‘தரும ம்’ நிலவுகின்ற
நம்
சமுதாயத்தில் இந்த மானுடம் படுகின்ற அவலங்களைப் பற்றிப் பேசுவதைவிட
இதை
எல்லாம் பேசாமல் ஒட்டுமொத்த “மனித நேயம்” பற்றிய போர்வையை
எடுத்துப்
போர்த்திக்கொள்கிறார்கள்.
அதனால் தான் சு.ரா. தோட்டிச்சியின் பிரசவ வலியைப்
பற்றி பேசுவது மட்டும் இலக்கியமல்ல,
அது பிரிட்டிஷ் இளவரசியின் பிரசவ வலியைப் பற்றியும்
பேச வேண்டும் என்று “வலிகளை ‘ ஒன்றாகப் பார்க்கிறார்!
இருவரின் வலிகளும் ஒன்றா?
சரி , பிரசவவலி என்பது சு.ரா சொல்வதுபோல
அவரின் சுய அனுபவமாகும் வாய்ப்பே இல்லை என்பதால்
விட்டுவிடலாம்.
பெரியாரின் மொழி வலிகளை மட்டும் பேசுவதில்லை.
அவர் என்ன வசதியான அறையில் உட்கார்ந்து கொண்டு
தன்னைச் சுற்றி தன் தொண்டரடி எழுத்தாளர்
பட்டாளங்களுடன்
இலக்கிய அவஸ்தையை ஈரத்துடன் பேசத்தெரியாதவர்.
தோட்டிச்சி
வலி வந்து துடிக்கும்போது அவளுக்கு மருத்துவ வசதி ஏன் இல்லை?
தோட்டிச்சிகள்
ஏன் பிரசவத்தில் செத்துப்போகிறார்கள்? தோட்டிச்சிகளின்
தொட்டில்களில்
ஏன் நகரக்குப்பைகளின் மணம் கலந்திருக்கிறது?
மானுட வாழ்வின் இயற்கை நிர்ணயித்திருக்கும்
பிறப்பும் இறப்பும் தோட்டிச்சிக்கு
ஏன் கெளரவமானதாக இல்லை?
இப்படியாக கொஞ்சமும் ரசனை இல்லாமல்
ஈரம்
இல்லாமல் பெரியார் பேசி இருக்கிறார். சரிதானே!
போகிற இட்த்திலெல்லாம் கோதுமை தோசையும்
ரவா தோசையும்
பற்றி
பெரியாருக்கு சிலாகிக்க தெரியவில்லை!
என்ன மனிதர் அவர்!
இப்போதுதான்
நான் ஓர் அக்மார்க் இலக்கியவாதியா
யோசிக்க
ஆரம்பித்திருக்கிறேன்.
பேசு பொருளும் பேசாக்கிளவியும்