நவீன கோட்பாட்டுருவாக்கத்தில் புதிய மாதவியின் கட்டுரைகள்
>> எழுத்தாளர் கனவு சுப்ரபாரதிமணியன்
புதிய மாதவியின் நான்கு கட்டுரைத் தொகுப்புகளில்
மிக முக்கியமானது ஊடக அரசியல் பற்றிப் பேசும்
" செய்திகளின் அதிர்வலைகள் " என்ற தொகுப்பாகும்.
எந்த மாதிரி சமூகத்தில் நாம வாழ இருக்கிறோம்,
எந்த மாதிரி அரசியல் அமைப்பில் நாம் வாழ விரும்புகிறோம்
என்பதை பல் விதங்களில் ஊடகங்கள் தீர்மானிப்பதை அவர்
துல்லியமாகக் கணித்திருக்கிறார். ஊடக வலைப்பின்னல்கள்
இருண்ட ஆண் பெண் மன்தை எப்படி ஊடுருவி அடிப்படை
ஊடக தர்மங்களை அவையே கட்டமைத்துக் கொள்கின்றன
என்பதும் முக்கியமானது.
மும்பை போன்ற பெரு நகர வாசிகளின் தினசரி நடவடிக்கைகள்
கூட் உள்ளூர் தொலைக்காட்சி வரிசைகள், எப்பெம் வானொலிகள்,
குறுஞ்செய்திகள் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது
என்று சொல்லலாம்.
அவர்களின் சிந்தனையை பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள்
தரும் பெய்டு நியூஸ், கிரியேட்ட நியூஸ்கள் கடடமைக்கின்றன.
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா கேலிக்குறியாகி
உள்ள அவலம் இதில் தெரிகிறது.
மும்பை நக்ரம் ஒரு பெரிய ராட்சத மிருகம் போல்
என்னை எப்போதும் பயமுறுத்தியிருக்கிறது.
அந்த நக்ரத்தின் மூலைமுடுக்குகள், ஒவ்வொரு திசை
நடவடிக்கைகளையும் துல்லியமாக கணிக்கும் புதிய மாதவியின்
வாசகங்கள் அவரின் தினசரி வாழ்க்கை தரும்
நெருக்கடியில் இருந்து நிச்சயம் பெறப்பட்டவையாக இருக்கும்.
அரசியல் தாதாக்கள், மும்பைத் தமிழர்கள், மத வாத ,
இன வாத நடவடிக்கைகள் பற்றிய அடையாளம் காட்டும்
கருத்துக்கள் இடதுசாரி சிந்தனைகள் சார்ந்த
ஒருவரின் எண்ணங்களாக வெளிப்படிருக்கின்றன.
சமீப்த்தில் அருந்ததி ராய் எழுதிய அன்டில்லா
என்ற கட்டுரையில் 27 தளங்களைக் கொண்ட அந்த மாளிகை
பிரகாச விளக்குகளுடன் பிற பகுதி மக்களின் வெளிச்சைத் திருடி
அவர்களை இருட்டில் தள்ளி மிளிர்வதை சுட்டிக்காடியிருந்தார்.
" அது ஒரு வீடா அல்லது இருப்பிடமா.
இந்தியாவிற்கு ஒரு புதிய கோவிலா. பேய்களின் உறைவிடமா "
என்று கேட்கிறார். அது முகேஷ் அம்பானி வசிக்கும்
மாளிகை பற்றியதாகும். அன்டில்லா மும்பையின்
குறியீடாக விளங்குகுறது.முமபையின் 27 தொலைக்காட்சி
வரிசைகளின் கூட்டமைப்பான இன்போடைலின்
90 சதவீதம் பங்குகள் முகேஷ் அம்பானியுடையது.
இன்போடைல் கட்டமைக்கும் ஊடகச் செய்திகளின் தரம்,
நோக்கம் என்பதை சுலபமாக விளங்கிக் கொள்ளலாம்.
பெரும்பாலும் புதிய மாதவியின் படைப்புகளின் மூலம்
அவரை ஒரு படைப்பிலக்கிய எழுத்தாளராகவே அறிந்திருக்கிறேன்.
ஆனால் அவரின் விரிந்த கட்டுரைகள் மூலம் அவரை
ஒரு பத்திரிக்கையாளராக தெரிந்து கொள்ள முடிகிறது.
காப்ரியேல் கார்சியா மார்க்குவெஸ்சிற்கு பத்த்ரிரிக்கையாளர்
பணி என்பது இலக்கிய ஆர்வத்தையும் எழுத்துக்கான
தொழில் நுட்பத்தையும் தருகிறது. விசயங்களை அணுகும் விதம்,
பார்வை புதிதாய் கிடைக்கிறது. பத்திரிக்கைச் செய்திகளுக்கு
உணர்ச்சி இல்லையென்றாலும், அதன் பின்னணியில்
இருக்கும் அரசியல் நுடப்மானது. இதை உள்வாங்கிக்
கொண்ட மார்க்குவெஸ் தன் பல படைப்புகளை பத்திரிக்கைச்
செய்திகளின் அடிப்படையில் வடிவமைத்திருக்கிறார்.
அவர் நடத்திய காம்பொ பத்திரிக்கை ஸ்கூப் அடிக்கும்
பழக்கத்தில் இருந்துவிலகி பத்திரிக்கை எழுத்தை ஒரு
இலக்கிய வகையாகப் பாவிக்க வைத்திருக்கிறது.
புதிய மாதவிக்கு பத்திரிக்கை செய்தி அனுபவம்
பல படைப்புகளுக்கு அடித்தளம் இட்டிருப்பதை அவரின்
பல சிறுகதைகளில் கண்டு கொள்ள முடியும்.
படைப்பிலக்கியவாதி இன்று வலைத்தள எழுத்தாளனாக,
பத்தி எழுதுகிறவனாக மாறி வாழநிர்பந்திக்கப்படுகிற
சூழலில் இக்கட்டுரைகள் முற்போக்கான ஒருவரின் பார்வையாக
இக்கட்டுரைகளில் வெளிப்படுகிறது.
அரசியல், மத முகமூடிகளை விலக்கிக் காட்டுகிறது.
இது அவரின் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற
சுதந்திர உணர்வு தந்தக் கொடையாகும்.
புதிய மாதவியின் படைப்புகளில் கட்டுரைப்பிரிவில்
இடம் பெற்ற மற்றவை :
சிறகசைக்கும் கிளிக்கூண்டுகள், ஊமைத் தசும்புகள்,
மழைக்கால மின்னலாய் ஆகியவை.
இவற்றில் சக் எழுத்தாளர்களின் படைப்புகளை அறிமுகப்படுத்தும்
கட்டுரைகளை வெகுவான பரந்த நோக்கில் எவ்வித
பொறாமை உணர்வும் இன்றி ஜனநாயக்த் தன்மையுடன்
பல் நூல்களை அணுகியிருக்கிறார். பல் மொழிபெயர்ப்பு நூல்கள்,
பிற நாட்டில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர்கள் நூல்கள்
என்று வித்யாசம் காட்டுகிறார். பல்வேறு விசயங்களில்
விமர்சன நோக்கில் படைப்பாளிகளை இனம் கண்டு
சொல்பவர் அரசியல் நிலைப்படுகளைப் புறந்தள்ளி விட்டு
ஜெயமோகனின் நாவலை சிலாகிப்பதில் இருக்கும்
இலக்கிய நேர்மையை பல கட்டுரைக்ளில் காண முடிகிறது..
பெண்கள் மீதான் வன்முறை மற்றும் உலகமயமாக்கலில்
பெண்களின் நிலை பற்றியும் உள்ள கட்டுரைகள்
நுட்பமானவை. நுகர்வு தன்மையின் கோட்பாடுகளை
பெரிதும் கேள்விக்குறியாக்குபவை. தமிழ் தேசியம்,
சாதி மறுப்பும் சாதியொழிப்பும் குறிதத பார்வையும்
முக்கிய்மானவை.அவற்றை நிறுவதற்கான கட்டுடைக்கிற
பாணியை முக்கியமானதாகக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் தலித் விடுதலை பற்றிய
கோட்பாட்டுருவாக்கங்களை இவரின் அவ்வகைக்
கட்டுரைகளில் கண்டு கொள்ள முடிகிறது.
தலித்தியத்தின் நவீன கோட்பாடுகளை இவரின் கட்டுரை
அம்சங்களிலிருந்து உருவாக்கிக் கொள்ள முடியும்.
எல்லா பண்பாட்டு அம்சங்களும் மனிதர்களால்
உற்பத்திச் செய்யப்பட்டவை . உற்பத்தி செய்த மனிதனால்
இவற்றை மாற்றவும் முடியும். அதற்கான இயங்கியல்
தன்மையிலான அவசியமும் கட்டாயமும் இருக்கிறது என்கிறார்.
எதிர்ப்பின் வரலாறு கட்டமைக்கும் கேள்விகள்,
நுகர்வு கலாச்சார எதிர்ப்பு அம்சங்களை கோடிட்டுக் காட்டுகிறார்.
அவை மாற்றுப் பண்பாட்டு அம்சங்களை உருவாக்குவதை
இவரின் கட்டுரைக்ள் காட்டுகின்றன. இன்றைய் கலாச்சார
அபாயச் சூழலில் புதிய மாதவியின் மாற்றுப் பண்பாடு
குறித்த அக்கறை வெகுவாக கவன்த்தில்
கொள்ளப்பட வேண்டியதாகும்
( கோவை இலக்கியச் சந்திப்பு நடத்திய
" புதிய மாதவியின் படைப்புகள் " பற்றிய கருத்தங்கில்
சுப்ரபாரதிமணியனின் வாசித்தக் கட்டுரை)
No comments:
Post a Comment