Wednesday, August 14, 2019

சுதந்திர இந்தியாவின் இரத்தக் கறைகள்



சுதந்திர நாளின் இரத்தக் கறைகளுடன்
“At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom,” announced Nehru, India’s first prime minister. (1947)
இந்த விடுதலையின் இன்னொரு பக்கத்தில்
ரத்தக் கறைகள்.
அழுகிய பிண நாற்றம்.
மரண இரயிலின் பயணம்.
Image result for india partition
கடந்த நூற்றாண்டின் மிக முக்கியமான வரலாற்று நிகழ்வு இந்தியப் பிரிவினை..
மிக அதிகமான எண்ணிக்கையில் மக்கள் தங்கள் வாழ்விடம் விட்டு நகர்ந்த / துரத்தப்பட்ட ரத்தக்கறைகளுடன் தான் இந்திய சுதந்திரத்தின்
வரலாறு எழுதப்பட்டிருக்கிறது.
பிரிட்டிஷ் இந்தியா பிரிக்கப்பட்ட போது மதச்சார்பற்ற இந்தியா ‘யூனியன் ஆஃப் இந்தியா’ என்றும்; முஸ்லிம்களின் பாகிஸ்தான் ‘டொமினியன் ஆஃப் பாகிஸ்தான்’ என்றும் பிரிந்தன. இந்த இரண்டையும் பிரிக்கும் எல்லைக்கோடுதான் ராட்கிளிப் கோடு. அதை உருவாக்கிய ராட்கிளிப்பின் பெயரால் அது அழைக்கப்பட்டது.
இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டபடி பிரிக்கப்பட்ட பகுதிகளில் பஞ்சாப்,வங்காளம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட சோகம் அந்த மக்களின் வாழ்க்கையில் சொல்லொணா துயரத்தை எழுதி இருக்கிறது.
இந்தியா பக்கம் இருக்கும் முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தான் பகுதியில் இருக்கும் இஸ்லாமியர் அல்லாதவர்கள் இந்தியாவுக்கும் இடம் பெயர வேண்டும்.மொத்தம் ஒரு கோடியே 45 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்தார்கள்.1951ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி சுமார் 72 லட்சத்து 27 ஆயிரம் முஸ்லிம்கள் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குக் குடி பெயர்ந்தார்கள் என்று பாகிஸ்தான் தெரிவித்தது. அதே போல 1951 ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி இந்துக்களையும், சீக்கியர்களையும் சேர்த்து பார்க்கும்போது சுமார் 72 லட்சத்து 96 ஆயிரம் பேர் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குக் குடிபெயர்ந்தார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் விரும்பி இந்த இடப்பெயர்ச்சியை ஏற்றுக்கொள்ளவில்லை. உண்மையைச் சொன்னால் அவர்கள் துரத்தியடிக்கப்பட்டார்கள். பலர் உயிருக்குப் பயந்து ஓடி வந்தார்கள். இது இரு தரப்பு மக்களுக்கும் பொருந்தும்.
இந்தியப் பிரிவினையில் இறந்தவர்கள் 4 லட்சம் பேர் என்று வைத்துக்கொண்டால், அவர்களுள் 2 லட்சம் பேர் முஸ்லிம்கள்; சற்றொப்ப இறந்தவர்களில் சரிபாதிக்கு மேலானவர்கள் இசுலாமியர்கள்.. சுமார் 75 ஆயிரம் பெண்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டார்கள்.
பிரிவினை பூகம்பம் பஞ்சாபை மிக மோசமாகப் பாதித்து உலுக்கியெடுத்தது. இடம் பெயர்ந்த ஒரு கோடியே 45 லட்சம் பேரில் சுமார் ஒரு கோடி பேர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள்.பிரிவினை வன்முறைகளின் போது உயிர் இழந்தவர்களில் மிகுதியானவர்களும் அவர்கள்தாம்.
இந்தியப் பிரிவினைக்கு யார் பொறுப்பு?
ஜின்னா மட்டும் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று கற்பிக்கப்படுவது வரலாற்றின் ஒரு பக்கத்தை இருட்ட டிப்பு செய்துவிடும். 
ஜின்னா, நேரு, நேஷனல் காங்கிரசு , இந்துத்துவ அமைப்புகள் , பிரிட்டிஷ் அரசாங்கம் எல்லோரும் தான் காரணம். 
இது நடந்த து சரியா என்பதற்கு அப்பால்…
இது நடந்த விதம் மிகவும் அதிர்ச்சிக்குரியதாகவும்
சமூக அரசியலையும் பொதுஜன உளவியலையும்
புறம் தள்ளிய அதிகாரத்தின் முகமாகவும் இருக்கிறது.
பிரிவினையைத் தவிர்த்திருக்க முடியாது. பிரிவினைக்குப் பிறகு இரு பிரதேச மக்களும் இடம் பெயர்வதற்கான கால அவகாசத்தை ஒரு உடன்படிக்கை வாயிலாக சாத்தியப்படுத்தி இருக்கலாம். இடப்பெயர்வு கலவரமின்றி
அமைதியாக நடைபெற இரண்டு நாடுகளும் ஒத்துழைத்திருந்தால் இன்றைய விரோத மனப்பான்மை ஆரம்பத்திலேயே முறியடிக்கப்
பட்டிருக்கும். 
இப்படியான ஒரு திட்ட த்தை அன்று இராஜாஜி அவர்கள் முன்வைத்திருக்கிறார். 
C R FORMULA என்று தேடினால் அதைப் பற்றிய விவரங்கள் கிடைக்கின்றன.
சி.ஆர் ஃபார்முலாவில் முதல் திட்டமே இடைக்கால அரசு தான். 
அப்படி ஒரு திட்டமிடலுடன் பிரிவினை நடந்திருந்தால்…
இந்திய சுதந்திரத்தின் ரத்தக்கறைகளாவது இல்லாமல் இருந்திருக்கும்.
எது நடந்ததோ அதை இனி ஒன்றும் செய்துவிட முடியாது.
ஆனால் அது இவ்வளவு கொடூரமாக நடந்திருக்க வேண்டாம். அதற்கான விலையை நாம் இன்றுவரை
கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
அந்த மரண இரயிலில் உறங்கிப்போன
கனவுகளுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

2 comments:

  1. உலகு அறியாத சில கறுப்பு பக்கங்கள் இவை ...

    எனினும் இனியாவது மக்களின் நலம் கொண்டு அனைத்தும் நடக்கட்டும் ....

    ReplyDelete