Friday, April 5, 2019

வய நாடு திரைப்படத்தில் ராகுலின் கதை வசனம்



I am not going to say a word against 
the CPI (M). ...>>>>>>>>>>>>>>>>>>
சமபலம் பெற்ற தலைவர்கள் பொதுவாக
ஒருவரை ஒருவர் நேரடியாக எதிர்த்து
தேர்தல் களத்தில் நிற்பதில்லை.
தேர்தல் களம் என்பது குத்துச்சண்டை
நடக்கும் இடமல்ல. ஜன நாயக அரசியலுக்கு
எதிரணியும் ஆளுமைமிக்க எதிரணி தலைவர்களும்
கூட மிகவும் முக்கியம். இந்த அடிப்படையைப் புரிந்து
கொண்டுதான் அன்றைய தேர்தல் களமும்
வேட்பாளர்களும் அரசியல் செய்தார்கள்.
காமராஜரை எதிர்த்து அரசியல் செய்தவர் தான்
திமுக தலைவர் அண்ணா அவர்கள். 
ஆனால் 1967 தேர்தலில் காமராஜரை
எதிர்த்து நின்ற திமுக வேட்பாளர் விருது நகர்
சீனிவாசன். 
Image may contain: 1 person, smiling, text

தேர்தலின் முடிவு காமராஜரின்
தோல்வி மட்டுமல்ல, தமிழகத்தின் அரசியல்
வரலாற்றில் மறக்க முடியாத ஒரு தோல்வியின்
சரித்திரமாக எஞ்சி நிற்கிறது!
காமராஜரை வெற்றிக்கொண்ட சீனிவாசன் என்ற
பெயர் ஒரு பெயராக மட்டுமே இன்று நம்
நினைவில் நிற்கிறது. காமராஜரின் பொற்காலம்
மலரட்டும் என்று இதே தமிழ் மண்ணில் தான்
பேசிக்கொண்டிருக்கிறோம்.
இந்த தேர்தலில் காமராஜரை எதிர்த்து நின்ற
மாணவருக்காக ஓட்டு சேகரிக்கவோ ஆதரவு
கேட்டோ திமுக தலைவர் அறிஞர் அண்ணா
நேரடியாக களம் இறங்கவில்லை என்ற 
செய்தியும் இதே வரலாற்றின் ஊடாக
வெளிச்சம் காட்டிக்கொண்டிருக்கிறது.
இது அன்றைய தேர்தல் களத்தின் ஒரு செய்தி;
இதை வெறும் செய்தியாக மட்டுமே வாசித்துவிட்டு
நகர்ந்துவிட முடிவதில்லை. இச்செய்திக்குள் பல
எண்ண ஓட்டங்களும் கருத்தியல் நிலைப்பாடும்
ஜன நாயக அரசியல் களமும் மக்கள் நலமாக
விரிகின்றன.
இப்போது இன்றைய அரசியல் களம்
வய நாடு நோக்கி திரும்பி இருக்கும்
சூழலில்.. காங்கிரசு வேட்பாளர் திரு ராகுல்காந்தி
சொல்கிறார்…
I understand that the CPI (M) has to fight me. 
But I am not going to say a word against 
the CPI (M). I am here to send a message of unity,” 
இந்தக் கதையிலும் டயலாக் சரியாகத்தான்
இருக்கு. ஆனா .. ஆனா.. ஆவனா

No comments:

Post a Comment