Thursday, April 11, 2019

ஜாலியன் வாலா பாக் - நூறாண்டு வடு 13-04-1919

jallianwala bagh க்கான பட முடிவு
ஜாலியன் வாலா பாக். – 13 -04- 1919
ஒரு நூற்றாண்டின் இரத்தக் கறை.
இந்திய வரலாற்றில் இந்தச் சம்பவம் நடந்து 100 ஆண்டுகள் 
முடியப் போகிறது..
இந்த நிலையில் நேற்று முன் தினம் பிரிட்டன் பிரதமர்
 தெரஸா மே அவர்கள் ஜாலியன் வாலா பாக்
பிரிட்டன் வரலாற்றில் வெட்கக் கேடான வடு. 
அன்றைய படுகொலைக்காக ஆழந்த வருத்தங்களைத் 
நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
 எதிர்க்கட்சித் தலைவர் ஜெர்மி கரியோன்
அவர்களும் முழுமனதுடன் தங்கள் வருத்தங்களைத்
 தெரிவித்துக் கொள்வதாக பேசி இருக்கிறார்கள்.

13 – 04 – 1919 ல் மாலை 5 மணிக்கு ரெளலட் சட்ட த்திற்கு 
எதிர்ப்பு தெரிவிக்க மக்கள் கூடுகிறார்கள். 
5.30 க்குப் பிறகு வெள்ளை அதிகாரி ஜெனரல் டையர் 
50 பேர்க் கொண்ட கூர்க் படையுடன் வருகிறான்.
அவர்கள் கூட்ட த்தை கலைந்துப் போகச் சொல்கிறார்கள்.
வாயில்கள் அடைத்திருக்கின்றன / குறுகலான வழி.
கொடுத்த நேரமோ சில நொடிகள் தான். 
கூட்டம் சிதறி ஓடுகிறது. 
10 நிமிடங்கள்தொடர்ந்து கூட்ட த்தை நோக்கிச் சுட்டார்கள்.
ஒன்றிரண்டு குண்டுகள் அல்ல.
1650 குண்டுகள் பாய்ந்தன.
அவர்களின் துப்பாக்கிகள்
 மவுனிக்கும் வரைச் சுட்டார்கள்.
 கூட் ட த்தில் இருந்தவர்கள் குறைந்த து
5000 முதல் 30,000 வரை இருக்கும் என்று சொல்கிறார்கள்.
குண்ட டிப் பட்டு இறந்தவர்கள், காயம்பட்டு சிகிச்சையின்றி
 இற ந்தவர்கள்.. துப்பாக்கிச் சூட்டிற்குப் பின் ஜாலியன் லாலாபாக்
மைதானம் எங்கும் மக்களின் பிணங்கள்.பிணங்கள்.
தண்ணீர் தண்ணீர் என்று முணங்கும் சப்தம்..
டையர் 8 மணிக்கெல்லாம் ஊரடங்கு சட்டம் பிறப்பித்துவிடுகிறான்.
மைதானத்திற்கு வந்து யாரும் யாருக்கும் உதவும் நிலை இல்லை.
அந்த இரவில் அங்குச் செத்துக் கொண்டிருந்த
மனிதர்களுக்கு ஒரு வாய்த் தண்ணீர் கொடுத்த 
உத்தம்சிங்க் என்ற இளைஞன் தான் ,
இருபது வருடங்கள் காத்திருந்து
1940, மார்ச் 14 ல் இலண்டனில் ஜாலியன் லாலாபாக் 
படுகொலைகளுக்கு
காரணமாக இருந்த அதிகாரி டையரைச் 
சுட்டுக் கொன்ற சம்பவமும் நடந்தேறியது.
.
ஜாலியன் வாலாபாக் துப்பாக்கிச் சூட்டில்
 இறந்தவர்கள் எத்தனை பேர்?
யார் யார்? அவர்கள் பெயரென்ன?
 இன்னும் தேடிக்கொண்டு தான் இருக்கிறோம்.
இதுவரை 502 பேரின் பெயர்கள் கிடைத்திருக்கின்றன. 
45 பேர் யார் என்றுதெரியவில்லை. 
இவர்களில் இளைஞர்கள் முதியொர்கள் பெண்கள் 
குழந்தைகளும் அடக்கம்.
 சீக்கியர்களும் இந்துக்களும் இசுலாமியர்களும் அடக்கம். 
இதைப் பற்றி ஆய்வுகள் செய்திருக்கும் கிஷ்வர் தேசாய் அவர்கள்
 7 மாதக் கைக்குழந்தை முதல் 80 வயது முதியவர் வரை
பர்தா அணிந்தப் பெண்களும் உண்டு என்று சொல்கிறார்.

இச்சம்பவத்தை நினைவு கூர்பவர்கள்
மறு நாள் ஏப்ரல் 14 ல் குவியல் குவியலாக
 மைதானத்தில் கிடந்தப் பிணங்களை 
மொத்தமாக எரித்தார்கள் என்று சொல்கிறார்கள்.
பிணங்களைக் கொண்டு இறந்தவர்களை அடையாளம் 
காட்டவோ எழுதி வைக்கவோ முறைப்படியான 
எதுவும் நடக்கவில்லை என்றே
தெரிகிறது.

(KISHWAR DESAI, THE AUTHOR OF JALLIANWALA BAGH , 1919- THE REAL STORY. 
She is also the chair
Of the partition museum trust)
இச்சம்பவத்திற்குப் பின் நூற்றுக்கணக்கானவர்கள்
 சிறையில் அடைக்கப்பட்டார்கள். 
அவர்களிலும் 18 பேர் தூக்கிலிடப்பட்டார்கள்.
பலர் அந்தமான் சிறைக்கு அனுப்ப பட்டார்கள். 

இச்சம்பவத்தை நேரில் கண்ட நானக் சிங்க் ,
 22 வயது பஞ்சாபி எழுத்தாளர்
Khooni Vaisakhi என்ற தலைப்பில் நீண்ட கவிதை எழுதினார். ஆனால்
1920ல் அக்கவிதையை அன்றைய ஆங்கிலேய அரசு தடை செய்த து.
கவிதையைக் காலம் மறந்துவிட்ட தோ 
அல்லது கவிதை தலை மறைவானதோ தெரியவில்ல!
100 ஆண்டுகள் கடந்துவிட்ட சூழலில் அக்கவிதை 
அவருடைய பேரனால் மீண்டும் கண்டுப்பிடிக்கப்பட்டு
 ஆங்கிலத்திலும் மொழியாக்கம் பெற்று புத்தகத்தில் 
வெளிவருகிறது.

இத்தனைக்கும் நடுவில் வெட்கித் தலைகுனியும் 
இன்னொரு சம்பவமும் நடந்திருக்கிறது. 
அமிர்தசர்ஸ் பொற்கோவில் சீக் மதக்குரு
இதே வெள்ளைக்கார அதிகாரி டையருக்கு பரிவட்டம்
கட்டிய செய்தியும் கிடைக்கிறது.
கொதித்துப் போன அமிர்தசர்ஸ்
கல்சா கல்லூரி மாணவர்கள் 
12 அக்டோபர் 1920 பொற்கோவில் நிர்வாகத்தை
 எதிர்த்துப் போராட்டம் செய்து வெற்றி பெறுகிறார்கள்.

ஒரு தலைமுறை பஞ்சாபி சீக்கியர்கள் திருமணம் ஆனவுடன்/
முதல் குழந்தைப் பிறந்தவுடன் கோவிலுக்குப் போவது போல 
ஜாலியன்வாலா பாக் நினைவிட த்திற்கு வந்து
 தங்களுக்காக உயிர் நீத்த தம் முன்னோரின் 
ஆசிகளைப் பெறுவதை வழக்கமாக
கொண்டிருந்தார்கள்.
இன்று.. 100 ஆண்டுகளுக்குப் பின்… 
வெள்ளை ஏகாதிபத்தியத்தின்
மன்னிப்பு பதிவாகி இருக்கிறது.
இந்த மன்னிப்புகள் எதையும்
மீட்டுத் தரப்போவதில்லை தான். ஆனால்
வரலாற்றில் அதிகாரத்தின்
அடுத்த தலைமுறையை அர்த்தமுள்ளதாக்கி

மனித த்தை ஒவ்வொரு தருணத்திலும் 
உயிர்ப்பித்துக் கொண்டே இருக்கிறது.

No comments:

Post a Comment