என் இனிய நண்பர் நாஞ்சில் நாடன் அவர்கள் இலக்கிய நம்பிக்கை
நட்சத்திரங்கள் என்று பட்டியல் போட ஏற்கனவே அம்மாதிரி
பட்டியல் போடுவதில் முனைவர் பட்டம் பெற்ற எழுத்தாளர்
ஜெயமோகன் அதற்கு வக்காலத்து வாங்கி இம்மாதிரி பட்டியல்
போடுவது தமிழ் இலக்கிய வரிசையில் சிலம்பு காலம் முதல்
தொடர்வதாக புதிதாக ஒரு வரலாற்றை எழுதியிருக்கிறார்.
ஜெயமோகனின் கண்டுபிடிப்பு இதோ:
"இலக்கியம் தோன்றியநாள் முதல் இப்படிப்பட்ட பட்டியல்கள் வழியாகவே அது தரம் காணப்பட்டு தொகுக்கப்பட்டு முன்வைக்கப்படுகிறது என்பதையும் கோயிந்துக்களுக்கு கொட்டை எழுத்தில்தான் சொல்லவேண்டியிருக்கிறது. சங்ககால நூல்களெல்லாம் அப்படிப்பட்ட பட்டியல்களே. ஐம்பெருங்காப்பியங்கள் ஐஞ்சிறு காப்ப்பியங்கள் பன்னிரு திருமுறைகள் என்பவை எல்லாம் பட்டியல்களே "
அய்யா ஜெயமோகன் அவர்களே, நீங்கள் குறிப்பிட்டிருக்கும்
இந்தப் பட்டியல் எல்லாம் தரவரிசைக்காக பட்டியல் போடப்பட்டதா
அல்லது பாடுபொருள் , பாடல் வகை, காலவரலாறு கொண்டு
பட்டியலிடப்பட்டதா? எப்படியோ இருக்கட்டும், நீங்கள் சொன்னால்
சரியாகத்தான் இருக்கும்,
நாங்கள் கற்றதும் கற்பிக்கப்பட்டதும் தவறாக இருக்கும்! வாழ்க
உங்கள் கண்டுபிடிப்பு!!!
சரி இந்தப் பட்டியல் போடும் நவீன இலக்கியத்தின் பிதாமகன்களைப்
பார்த்து ...
பட்டியல் போடுவதற்கு இவர்கள் யார்? என்று சில தோழர்கள்
முகநூலில் கேள்வி கேட்க பட்டியலில் இடம் பெற்ற தோழி
குட்டிரேவதி " என்னை உங்கள் பட்டியலில் சேர்க்கும் தகுதி
உங்களுக்கு இருக்கிறதா ?" என்று நாஞ்சில் நாடனைப் பார்த்து
சுடச்சுட கேட்டு வைக்க...மும்பையில் அடிக்கும் வெயிலில்
இவ்வளவு சூடு தாங்காமல் எங்களைப் போன்றவர்கள் ரொம்பவும்
அவதிப்பட்டுவிட்டோம்.
இந்த அதிரடி நகைச்சுவைக் கலாட்டாவில் இனியும் நம் நேரத்தை
வீணடிக்க வேண்டாம் என்று நினைக்கிறேன்.
உங்கள் அனைவருக்காகவும் நாம் போற்றும் கவிஞர் நாம்தியோ தாசல்
எழுதிய வரிகளை நினைவூட்ட விரும்புகிறேன்.
My poetry was as free as I was. It was Life.
I wrote what I felt like writing and how I felt like writing.
I had found my weapons and I sharpened then.
Nothing was going to stop me now.
I went on writing unshackled and liberated.
I never compared myself with anyone else.
I never consulted anyone else on
whether what I was writing was right or wrong.
I wrote as I felt all the way.
I do not differentiate between political poetry
and non-political poetry.
I have been criticised by many. whenever i find the time
I read what my critics write.
HOWEVER , IT DOES NOT AFFECT ME.
I understand from the criticism that the
literary establishment , such as it is, finds unacceptable
any poetry that deals with political and
social processes our life goes through.
Our times are such that we have to move
on, leaving the establishment in its own fix.
No comments:
Post a Comment