கவிதையாவது கழுதையாவது!
இதுதான் கவிஞர் ராசை. கண்மணிராசாவின் கவிதை தொகுப்பின்
தலைப்பு. யார் இந்தக் கண்மணிராசா ? எப்படி இக்கவிதை நூல்
என்னிடம் வந்தது? தெரியவில்லை. ஆனால் இக்கவிதை நூலின்
தலைப்பும் இந்நூலில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு கவிதைகளும்
என் முதல் வாசிப்பிலேயே என்னிடம் நிரந்தரமாகத் தங்கி எப்போதும்
உரையாடிக் கொண்டிருக்கின்றன. மழைக்காலத்திற்கு முன்
பால்கனி ஓரமாக இருக்கும் புத்தக அலமாரியை துடைத்து
புத்தகங்களை அடுக்கி வைத்து நீர்க்கசிவிலிருந்து புத்தகங்களைப்
பாதுகாக்கும் வழக்கமான வேலையில் ஈடுபட்டிருக்கும் போது
கிடைத்துவிட்டது "கவிதையாவது கழுதையாவது".
மீண்டும் ஒரு முறை வாசித்துவிட்டேன்.
சாணிப்பால் முற்றத்தில்
நிலாக்காயும் இரவொளியில்
உன்னோடு கவிதை பேச ஆசை.
ஆனால்,
பகலெல்லாம் பாரவண்டி
இழுத்த களைப்பில் நானும்
தீப்பெட்டி ஆபிசில்
தீயாய் பறந்த களைப்பில் நீயும்
கண்ணயர்ந்து உறங்குகையில்
கவிதையாவது?
கழுதையாவது!
கவிஞர் கண்மணிராசா கலைஇலக்கியப்பெருமன்ற விருதுநகர் மாவட்டச்செயலாளர்.பாட்டாளியாக இருப்பதால் பாட்டெல்லாம் எதார்த்தமான எதிரொலிப்புகளே.
ReplyDeleteவறுமையை எழுதி தங்களை வளமாக்கிக் கொள்ள முயலும் பலரில் ஒருவரா? இல்லை கவிதை கிறுக்குவதை நிறுத்தி மனிதம் தழைக்க செயல்படும் ஒருவாரா?
ReplyDelete