#rajini_politics
# ரஜினிகாந்த்_அரசியல்
ரஜினியின் அரசியல் அடைமழையா தூறலா
தமிழகத்தில் கொளுத்தும் வெயிலுக்கு
ரஜினியின் அரசியல் பிரவேசம் என்ன செய்துவிடமுடியும்?
ஊடகங்களுக்கு ரஜினி பெரும்தீனி.
ரஜினி ரசிகர்களுக்கு நீண்ட நாளைய கனவு.
ஆனல்.. ரஜினியின் பிம்பம் .. தமிழக அரசியலில்
என்னசெய்ய முடியும்?!!!
தமிழக வாக்காளர்களில் நகர்ப்புற வாக்காளர்களையும்
நகரங்களில் வாழும் சினிமா ரசிகர்களையும் கொண்டு
தீர்மானித்துவிட முடியாது. இன்றும் கிராமப்புற
வாக்காளர்களுக்கு ரஜினி சூப்பர் ஸ்டாரும் அல்ல.
ஓட்டு வங்கியும் அல்ல. இந்த கிராமப்புற வாக்காளர்களின்
உளவியலை மிகச் சரியாக கையில் எடுத்துக்கொண்டு
தன் ஆட்சியை தக்க வைத்துக்கொண்டவர்
அதிமுகவின் ஜெ. அதிலும் குறிப்பாக பெண்களின் ஓட்டுகளை!
இப்போது அம்மாதிரி பெண்களின் ஓட்டுகளைக் கவரும்
ஒரு காந்தம் அரசியலில் இல்லை.
ஆனால் அந்த இட த்தில் கமல ஹாசனோ ரஜினிகாந்தோ
வந்தமர்ந்துவிடவும் இல்லை. அது என்னவோ அப்படித்தான்.!
நடிப்பு என்று வந்துவிட்டால் அதில் பல்வேறு பாத்திரங்களை
திரையில் கொண்டுவரும் நடிகனின் பாத்திரத்தை
இருவருமே சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
அதுவே அவர்களின் பலமும் பலகீனமும்.
நடிப்பு துறையில் அது பலம். அரசியலில் அது பலகீனம்.
எம்ஜிஆர் என்றுமே இவர்கள் இருவரையும் போல
ரிஸ்க் எடுத்ததே இல்லை! திரையில் NO NEGATIVE ROLES.
தேர்தல் நேரத்தில் 16 வயதினிலே திரைப்பட த்தில் வரும்
“பரட்டை “ டிவியில் ஓடினால்..அவ்வளவுதான்.
ரஜினிக்கு கிராமப்புற பெண்களின் ஓட்டு கிடைக்குமா?
மேலும் கமலஹாசன் இன்றும்
சீமான் சீமாட்டிகளின் செல்லப்பிள்ளை தான். !
அதிமுக ஓட்டுவங்கி என்பது பிரியும். ச சிகலா வெளியில்
வரும்போது சசிகலாவுக்கு பெரிய ஓட்டுவங்கி இல்லை
என்றாலும் அதிமுக ஓட்டு வங்கியை தினகரனும் சசிகலாவும்
தங்கள் கரன்சி வலிமையால் உடைப்பார்கள்.
திமுகவின் ஓட்டுவங்கி என்பது எப்போதுமே
மிக அதிகமான ஏற்ற இறக்கம் கொண்ட தல்ல.
உதய சூரியனுக்கு ஓட்டுப்போட்டவர்கள் சாகும்வரை
உதயசூரியனில் தான் குத்துவேன் என்று குத்தும்
வாக்காளப் பெருமக்கள்!
இதை மட்டும் காப்பாற்றி கொள்வதில் இன்றைய
திமுக கவனம் செலுத்துகிறதா என்பது
திமுகவின் பிரச்சனை. பொதுஜன பிரச்சனை அல்ல!
மேலும் கணிசமான வாக்குகள் கொண்ட விஜயகாந்த்
இன்று உடல் நலக்குறைவும் அவர் மனைவியின்
அரசியல் தொண்டர்களுக்கு ஏற்படுத்தி இருக்கும்
ஒவ்வாமையும் ரஜினியின் ஓட்டாக மாறுவதற்கு
வாய்ப்பிருக்கிறது.
இத்துடன் கம்யுனிஸ்டுகள் மற்றும் பாட்டாளி மக்கள்
கட்சி இத்தியாதி கட்சிகளுக்கு எப்போதும் கிடைக்கும்
வர்க்க சாதி ஓட்டுகளில் பெரிதாக மாற்றம் இருக்காது.
அப்படியானால்…. தமிழகத்தின் அரசியலில் கமல் ரஜினி யார்?
கமல் என்னைப் பொறுத்தவரையில் க்ளீன் அவுட்.
ரஜினி மட்டும் தான் கவனிக்கப்பட வேண்டியவர்.
ஆன்மீக அரசியல் என்றால் எங்க ஊரு வாக்காளர்கள்
அப்படின்னா என்னக்கா? என்ன தருவாங்க? என்று கேட்பார்கள்.
இதை ஊடகங்களும் அறிவிஜீவிகளும் அறிவார்கள் தானே!
புதிதாக ஓட்டுப்போட வரும் இளைஞர்களின் ஓட்டு சதவீதம்
ஒவ்வொரு தொகுதியிலும் எவ்வளவு? இதை கணக்கில்
எடுத்து ஒரு கூட்டல் கழித்தல் போட்டால் போதும்.
பிஜேபி க்கும் இந்தக் கணக்கு உதவும்!
ஆனாலும் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்பதே
என் விருப்பமும்.
ரஜினி தரும் அரசியல் பாடம்.. எதிர்காலத்தில்
நம் திரை நாயகர்களுக்கு நல்லதொரு பாடமாக அமையும்
என்பதால் ரஜினி கட்டாயம் அரசியலுக்கு வரவேண்டும். !
அதாவது ரஜினி வந்து அவமானப்பட்டு போவது அடுத்த திரைப்பட கூத்தாடிகளுக்கு ஒரு பாடமாக அமையும் என்ற தங்களது கூற்று அருமை.
ReplyDeleteஅதே அதே அதேதான் கில்லர்ஜி. இவுங்க பஞ்ச் டயலாக்கை எல்லாம் எம்புட்டு நாளைக்குத்தான் கேட்டுட்டு இருக்கது,?!
ReplyDeleteரஜினிக்கு ரொம்ப முக்கியமான வேலை ..... இரண்டு படத்தை முடித்து கொடுப்பது தான்.....அவர் கட்சி ஆரம்பிக்கும் எண்ணத்தை சொல்லும் போது இதையும் கூறிவிட்டார்....
ReplyDeleteஅதனால் அவரின் சிந்தனை முழுதும் படத்தில் தான் மக்களை பற்றி இல்லை..... அதனால் மக்களே... உங்கள் ஓட்டை வீணாக்காமல் சிந்தித்து செயல்பட்டால்.... பெரியார் பிறந்த மண்ணில் அவர்கள் கால் ஊன்ற முடியாது..
மாலா ஆரியசங்காரன் சென்னை
ReplyDelete