தலைநகரம் டில்லி முற்றுகை இடப்பட்டிருப்பது ஏன்?
96000 டிராக்டர்கள்
22000 லாரிகள்
6 மாத த்திற்கான உணவு
டில்லி குளிரைத்தாங்கும் ஸ்வெட்டர்கள் போர்வைகள்
செல்போன் ரீசார்ஜ்ர்கள்
பெண்கள் லாரிகளில் உட்கார்ந்து சப்பாத்தி போடுகிறார்கள்.
ஆண்கள் காய்கறி வெட்டிக்கொடுத்து
சமைத்த உணவைப் பரிமாறுகிறார்கள்.
1கோடியே 40 இலட்சம் விவசாயிகளின் முன்னெடுத்திருக்கும்
போராட்டம் இது. இன்னும் சொல்லப்போனால்
ஓரிட த்தில் இத்துனை பேர் கூடி முன்னெடுத்திருக்கும்
போராட்டமாக வெடித்திருக்கிறது.
ஆனாலும் ஊடகங்கள் .. முட்டைவிலை ஏற்ற இறக்கத்தையும்
ப்ரேக் நியூஸ் தரும் நம் ஊடகங்கள்
இவற்றை வெளிக்கொணர தயக்கம் காட்டுகின்றன.
3 வேளாண் மசோதாக்கள்:
1. அத்தியாவசியப் பொருள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து விலைகள் கட்டுப்பாட்டைத் தளர்த்தி சில பொருட்கள் அளவில் அதிகமாக விற்கப்படுவது அத்தியாவசியப் பொருளாகக் கொள்ளப்படும்.
2. ஒப்பந்த வேளாண்மைக்கு அனுமதி மற்றும் வசதி செய்து கொடுத்தல்
3. ஏபிஎம்சி என்று அழைக்கப்படும் வேளாண் விளைபொருள் சந்தை கமிட்டிக்களின் எல்லைக்கு வெளியே தனியார் சந்தைகளை நிறுவுவது.
இந்தியாவில் வேளாண் சந்தை மிகப்பெரியது.
சற்றொப்ப 16,58,700 கோடி ரூபாய் புரளும் துறை.
இன்றும் இந்திய மக்களில் 55% வேளாண்துறையை
நேரடியாகவும் மறைமுகமாகவும் சார்ந்திருக்கும் வாழ்க்கை.
வேளாண்மை என்பது தனிமனித தேவைக்கு அப்பால்
சந்தை வணிக்கத்தை நோக்கி நகர்ந்தப் பிறகு
வேளாண் உற்பத்தியும் சந்தையும் ஒன்றை ஒன்று
சார்ந்திருக்கும் நிலை ஏற்பட்ட து.
குறிப்பாக பசுமைப்புரட்சிக்குப் பின்.
இதை முறைப்படுத்த வேளாண் கொள்முதல் மையங்கள்
– அதாவது மண்டி முறை ஏற்படுத்தப்பட்ட து.
இதில் அரசியல் கட்சிகள் ஆளும் கட்சிகளின்
தலையீடு காரணமாக மண்டிகள் விவசாயிகளுக்கு
எதிர்ப்பார்த்த அளவுக்கு கைகொடுக்கவில்லை.
இதையே காரணமாக்கி இன்று மண்டி கொள்முதலை
சரித்துவிட தனியாருக்கு இடமளிக்கிறது
இன்றைய வேளாண் மசோதா (மசோதா 3. )
ஏன் எதிர்க்கிறார்கள்?
ஏற்கனவே கேரளா மற்றும் பீகாரில் திறக்கப்பட்ட
தனியார் மண்டிகளால் / கொள்முதலால்
என்ன நடந்திருக்கிறது என்பதை விவசாயிகள் அறிவார்கள்.
எனவே தான் தங்களின் உழைப்பும் மண்ணின்
விளைச்சலும் தனியாருக்கு அதிலும் குறிப்பாக
கார்ப்பரேட்டுகளின் கைகளில் போய்விடக்கூடாது
என்பதிலும் இந்தியாவில் இருக்கும் 100 கார்ப்பரேட்டுகள்
தங்கள் வேளாண்மையை தீர்மானிக்கும்
ஆக்டோபஸ்களாக மாறிவிட அனுமதிக்க மாட்டோம் என்று கிளர்ந்தெழுந்திருக்கிறார்கள்.
இன்றைக்கு பீகாரிகள் தமிழக ஹோட்டலில்
மேசைத்துடைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை
ஒரு செய்தியாக வாசித்து கடந்துவிட்டோம்.
இவர்கள் ஏன் பீகார் மண்ணைவிட்டு மொழி தெரியாத
இன்னொரு மா நிலத்திற்கு பிழைப்புத்தேடி
வந்திருக்கிறார்கள் என்பதை எவரும் யோசித்துப்
பார்க்கவே இல்லை.
இவ்வாறு 2006க்குப் பின் புலம்பெயர்ந்தவர்களில்
பெரும்பான்மையானவர்கள் விவசாயக்குடும்பத்தைச்
சேர்ந்தவர்கள் என்பதையும் சேர்த்து வாசிக்க வேண்டும்.
தனியார் வரும்போது போட்டி அதிகமாகும்.
அதனால் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும்.
ஆனால் நடைமுறையில் அப்படி எதுவும் நடந்துவிடவில்லை.
இதை வேளாண் பொருளாதர அறிஞர் தேவிந்தர் சர்மாவும்
உறுதி செய்திருக்கிறார்.
நினைத்துப் பாருங்கள்..
தொலைத் தொடர்பு நிறுவனத்தில் போட்டி
உருவானால் கட்டணம் குறையும் என்றார்கள்.
நாமும் நம்பினோம்.
ஆனால் ஜியோ வந்து எல்லோரையும் தின்று செரித்து
சந்தையில் எச்சிலாக துப்பியது.
BSNL கதையில் இனி மறைப்பதற்கு எதுவுமில்லை.
தனியாருக்கு மண்டிகளை திறந்துவிடுவதன் மூலம்
வெளி நாட்டு தனியார் நிறுவன ங்களும்
இந்திய வேளாண் துறையில் தன் ஆதிக்கத்தைக்
காட்டுவதற்கான இடமிருக்கிறது.
கொரொனா பொருளாதாரம்:
எல்லாவற்றையும் ஆன்லைனில் வாங்கு என்று
ஒரு புதிய சந்தையை கொரொனா பொருளாதர சந்தை
உருவாக்கி இருக்கிறது. பொதுவாக கொரோனாவுக்கு
முன்புவரை காய்கறிகள் அரிசி தானியங்களை
ஆன்லைனில் வாங்கதவர்களும் இப்போது
வாங்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இந்த ஆன்லைன் சந்தைக்கு கையிருப்பு அதிகம்
வேண்டும். புதிய வேளாண் சட்ட வரைவு தனியார்
எவ்வளவு வேண்டுமானாலும் கையிருப்பு வைத்துக்
கொள்ளலாம் என்று பதுக்கலுக்கு பச்சைக்கொடி
காட்டி இருக்கிறது.!
இந்த ஆபத்தை சமூகம் உணர வேண்டும்.
இறுதியாக…
இந்திய அரசியல் சட்டப்படி வேளாண்மை
மாநில அரசியலில் தானே உள்ளது.
அதை மத்திய அரசு மீறுவது ஏன்?
சரியான நேரத்தில் எழுதப்பட்ட அருமையான கட்டுரை. கார்ப்பரேட்டுகளின் விளம்பரத்துக்காக இதை மறைக்கும் மூடு தங்களை மீறி நாம் உண்மையை மக்களிடம்கொண்டு செல்ல வேண்டும்
ReplyDeleteஊடகங்களை மீறி
ReplyDeleteThanks Naa.Mu. sir...for your visit and comments.
ReplyDelete