15 ஆகஸ்டு 1947.. அந்த நள்ளிரவு சுதந்திரத்தில்
இந்திய சுதந்திர வரலாற்றின் பிதாமகன் மகாத்மா காந்தி
எங்கே இருந்தார்?
காந்தி தலை நகர் டில்லியில் நேருவுடன் இல்லை.
காந்தி சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் இல்லை.
காந்தி அன்று கல்கத்தாவுக்கு அருகிலுள்ள பெலிகட் பகுதியில்
இருந்தார்.. அதுவும் ஆபத்தான சூழல் நிறைந்த களத்தில்
இந்து முஸ்லீம்களின் கலவரப்பகுதியில் நின்றார்.
கிழக்கு வங்கத்தில் இந்துக்களை முஸ்லீம்கள் பாதுகாக்க வேண்டும்.
மேற்கு வங்கத்தில் முஸ்லீம்களை இந்துக்கள் பாதுகாக்க வேண்டும்
என்பதே காந்தி சுதந்திர நாளில் வைத்த கோரிக்கையாக
இருந்தது.
பீகாரிலிருந்து அவர் கல்கத்தா புறப்படும் போது
பதட்டமிகுந்த அப்பகுதிக்கு அவர் செல்வதை காங்கிரசுக்காரர்கள்
எதிர்த்தனர். அப்பயணம் காந்திக்கு ஆபத்தானது என்பதற்காக
எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் காந்தி தான் எடுத்த முடிவை
மாற்றிக் கொள்ளவில்லை.
காந்தியை that old fraud என்று
மிகவும் கடுமையாக விமர்சித்த சாகித் சுஹரவர்டி யின் பாதுகாப்பில்
தங்கப் போவதாக அறிவித்தார். அதற்கான ஏற்பாடுகளையும் காந்தி
செய்திருந்தார்.
அவரை அழைத்துக்கொண்டு பாதிக்கப்பட்ட முஸ்லீம்களின் இல்லத்திற்கு
இந்துக்களையும் பாதிக்கப்பட்ட இந்துக்களின் இல்லத்திற்கு முஸ்லீம்களையும்
அழைத்துச் சென்றார்.
அப்போது காந்தியுடன் சாகித் சுஹரவர்டி தங்கி இருப்பதை அறிந்த
இந்து இளைஞர்கள் அவரை வெளியில் அறையிலிருந்து வெளியில்
வரச் சொல்லி குரல் எழுப்பினார்கள். காந்தி அவர்களை சமாதானப்
படுத்தினார். சாகித் வெளியில் வந்தார். சாகித் தின் தோள் மீது\
கைப் போட்டுக்கோண்டு காந்தி அவருடம் வெளியில் வரவும்
கூட்டத்தினர் சாகித்தை நோக்கி “ கடந்த ஆண்டு (1946) நடந்த
படுகொலைகளுக்கு என்ன பதில் சொல்கிறாய் ? “ என்று கேட்டார்கள்.
நான் வெட்கப்படுகிறேன் என்று தலைகுனிந்தார் சாகித் சுஹரவர்டி.
Gandhi brought Suhrawardy forward,
and stood with one hand over his shoulder
and the other resting on his granddaughter’s shoulder.
The critical moment came when a young man
shouted at Suhrawardy :
“Do you accept the blame for the great
Calcutta killing of last year?”
“Yes”, replied Suhrawardy.
” I do accept that responsibility. I am ashamed of it”.
ஆத்திரம். கோபம், ஆவேசத்துடன் தாக்க வந்தவர்களிடம்
அவர் மெல்லிய குரலில் அமைதியாகப் பேசினார்.
அந்த நாளில் ஆகஸ்டு 15 1947 ல் எந்த ஒரு கலவரமோ
அசாம்பாவிதமோ நடக்கவில்லை. அது மட்டுமல்ல
அதன் பிறகு வந்த ஈத் பெரு நாளில் முஸ்லீம்கள் இல்லத்திற்கு
இந்துக்கள் விருந்துண்ண சென்றார்கள்.
இந்த அதிசயத்தைக் கேள்விப்பட்ட மவுண்ட்பேட்டன்
“one man boundary the importance
of Suharwardy’s contribution,
and called it the “two-men boundary force”.
சுதந்திரதினம் என்றால் கொடி ஏற்றுவதும்
குண்டு துளைக்காத கண்ணாடிக்குள் நின்று கொண்டு
காகித திட்டங்களை அறிவிப்பதும் மட்டுமல்ல.
சாகித் சுஹர்வர்டி போன்றவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
ஒருவரை ஒருவர் கடுமையாகச் சாடியவர்கள்
மக்கள் நலன் என்ற ஒரே காரணத்திற்காக
கை கோர்த்திருக்கிறார்கள். அடி தடி சண்டை
கொலை கொள்ளை தீ வைப்பு என்று கலவர பூமியாக
காட்சி அளித்த இடத்திலும் சகோதரத்துவத்தை
விதைக்க முடியும் என்பதை இவர்கள்
உறுதி செய்திருக்கிறார்கள்.
No comments:
Post a Comment