"காகிதப்பூ மணக்காது."
"நான் பூ அல்ல., விதை .
என்னை முகர்ந்து பார்க்காதீர்கள்,
விதைத்து பாருங்கள், வளர்ந்து வருவேன் "
"இது மரபணு மாற்றப்பட்ட விதை ! "
"தலைப்பு செய்தியாகலாம், தலைவராக முடியாது"
நாளை நமதே திராவிடஹாசன் திரைப்படத்தின்
துவக்க விழாவில் "பஞ்ச்ச் டயலாக்" தூள் கிளப்புது..
இனிமேலாவது நாம பொழைக்கிற வழியைப் பார்க்கனும்னு
என் தோழி வேறு அடிக்கடி போன் செய்து
என்னை உசுப்பேற்றுகிறாள்..
ஒரு கட்சினு ஆரம்பிச்சா
மகளிர் அணி/ இலக்கிய அணி/ மும்பை அணி/
புறநகர் அணி/ அவியல் அணி/, பொரியல் அணி/
சாம்பார் அணி/ இப்படியாக தானே உருவாகும்
எதாவது ஓர் அணியில் நமக்கு ஒரு சீட்டு
கிடைக்காமலா போய்டும்?
அவ காட்டற பரபரப்பை பார்த்தா நமக்கும்
உள்ளங்கை அரிக்கிறது!
இப்பவே டவுண் பஸ்சில் சீட்டைப் பிடிக்கிறமாதிரி
"நாளை நமதே திராவிடஹாசனுக்கு வாழ்த்துகள்" னு
சொல்லிவைப்போம்.
மண்டைக்காயற மாதிரி யோசிச்சி, தலையணை மாதிரி
புத்தகத்தை வாசிச்சு தலைவலி வந்து கண்ணாடி போட்டு..
அரசியல் எழுதி .. இதெல்லாம் வேஸ்ட்டுனு புரியுது.
எந்த இசமும் தேவையில்ல.
மக்களுக்கு என்ன தேவையோ
அதுதான் கட்சியின் கொள்கை... னு
திராவிடஹாசன் சொல்லியாச்சு..
ஒவ்வொருவரும் அவரவர் தேவையை
உடனே பட்டியல் போடுங்க
.. சீக்கிரம் .
முதலில் வருபவருக்கே முன்னுரிமை..
நீங்களும் அரசியல்வாதி போலவே பேசுறீங்களே..... பலே பலே....
ReplyDeleteஆகா
ReplyDeleteஅறம் மறந்த மனிதர்
ReplyDeleteஎம்ஜிஆர்,ஜெயலலிதா போன்ற மோசடிகாரர்களைவிட இவர் எவ்வளவோ தேவலை.
ReplyDeleteகவுதமி நடிகருக்கு வேலை செய்த பணம் மிகுதி கொடுக்காதது கமல்ஹாசன் தவறு.
Delete