Saturday, February 17, 2018

நவீன இந்தியாவில் நவீன திருடர்கள்

Image result for nirav modi cartoon
யாருக்கும் தெரியாமல் ஓடுகின்ற டிரெயினில்
பேருந்தில் பிக்பாக்கெட் அடிக்கிறவர்களை எல்லாம்
திருடன் டன்  என்று அழைக்கிறோம்.
கையில் அகப்பட்டால் மொத்து மொத்துனு
மொத்தி நம்ம சமூகக்கடமையை நிறைவேற்றிவிடுகிறோம்.
ஆனா ஹெலிகாப்டரில் வந்து இறங்கி
நட்சத்திர ஹோட்டல்களில் பார்ட்டி கொடுத்து
கோர்ட்டும் சூட்டுமாய் வெள்ளையும் சொள்ளையுமாய்
வந்து ஆறேழு வருஷங்களாய் வேண்டியதை
மாமன் மச்சான் என்று குடும்பத்துடன் சேர்ந்து
கொள்ளை அடிச்சிட்டு நிம்மதியா பெல்ஜியம் லண்டன்
என்று பாதுகாப்பாக அனுப்பி வைத்துவிட்டு..
அது என்னடா..
வைரவியாபாரிகள் திருடறதுக்குனு தனிரேட்டா..
14 செப்டம்பர் 2013 நியுடெல்லி ஐந்து நட்சத்திர ஹோட்டலில்
அலகாபத் வங்க்கியின் போர்ட் மீட்டிங்கில் அஜண்டா 4/6
கீதாஞ்சலி ஜுவல்லர்ஸ்க்கு அவர்கள் பெயரில் இருக்கும்
ரூ 1500 + 50 கோடி கடனை வசூலிக்காமல் மேற்கொண்டு
கடன் கொடுக்க கூடாது, " என்று அன்றைய வங்கி டைரக்டர்
துபே சொன்னதை ஏன் அரசும் ரிசர்வ் வங்கியும் நிதித்துறை
மந்திரியும் பிற வங்கி அதிகாரிகளும் நிராகரித்தார்கள்?
I also wrote to the Reserve Bank of India and secretary,
 financial services in the Ministry of Finance in my effort to warn
 them of a massive scam looming large. My request was to take
immediate preventive action and keep a watch on all the companies
 linked to Choksi's firm, as they were accumulating loans
 without making payments to the bank," Dubey said.
11,700 கோடியை சுருட்டிக்கிட்டு பத்திரமா ஒரு குடும்பம்
இந்தியாவை விட்டு போகும் வரை அமைதியா இருந்திட்டு
அவன் போனப்பிறகு ஏன் டா வாயிலும் வயித்திலு அடிச்சிக்கிட்டு
கத்தறீங்க.. மல்லையா ஓடிப்போனாரு.. லலித் மோடி ஓடிப்போனாரு
இப்போ நிரவ் மோடி ஓடிப்போயிட்டாரு..
இப்போ பாஸ்போர்ட்டை முடக்கவும் வங்கி கணக்குகளை
முடக்கவும் அவர்கள் அலுவலகங்களை சீல் வைக்கவும்..
அது எப்படிடா எல்லா முடிஞ்சப்பறம் கடைசியில வர்ற
போலீஸ்காரன் சினிமா காட்சி மாதிரி ..
இந்த லட்சணத்தில வங்கிகளுக்கு இண்டெர்னல் ஆடிட்டிங்க்
ரிசர்வ் வங்கி ஆடிட்டிங்க்னு ஏகப்பட்ட சோதனைகள்
ஆண்டுதோறும் நடக்கும். அத்தனைப் புத்திசாலிகளுமா
இத்தனைக் கடனுக்கும் வரவு இல்லியேனு கவனிக்கல..

போதுமடா சாமி..
ஏற்கனவே காதுகுத்தி கடுக்கண் போட்டிருக்கு
நீங்க எவனும் வந்து  காதில பூ சுத்தாதீங்க..
Image result for farmers suicide in india

வாங்கிய கடனைக் கொடுக்க முடியலையே
வானம் பொய்த்து பயிர்க்கருகி
வாழ்க்கை போயிடுச்சே..
கொடுத்த வாக்கை காப்பத்த முடியலையே
கடன் கொடுத்தவனின் சுடுசொல் தாங்காமல்
தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளும்
இதே மண்ணில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அடியே .. பராசக்தி..
பாரதமாதக்கி ஜெ. ஜே.

3 comments:

  1. தங்களது ஆதங்கம் புரிகிறது மக்கள் மாக்களாக இருக்கும்வரை இதில் மாற்றமில்லை.

    ReplyDelete
  2. அரசியல்வாதிகள்/அதிகாரிகள்/மக்கள் என அனைவருமே குறுக்கு வழியில் சம்பாதிக்கத்தான் பார்க்கிறார்கள். சில வெளியே வருகின்றன, பல வருவதில்லை. ஆதங்கம் மட்டுமே பலருக்கும்.

    ReplyDelete
  3. நவீன இந்தியாவில் நவீன திருடர்கள் மிகச்சிறப்பான தலைப்பு. வங்கிகள் அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில் போய் வெகுநாட்கள் ஆகிவிட்டது. இப்போது எல்லாம் நவீன திருடர்களின் காட்டில் மழையோ மழை!

    ReplyDelete