Wednesday, July 19, 2017

தேனருவி தொகுத்து வழங்கும் கமலஹாசன்

மும்பைவாசி கேட்கிறார்  ,
 எப்படிங்க பிக்பாஸ் கூட அரசியல் களமா மாறியிருக்குனு!
அமிதாப்பச்சன், சஞ்சீவ் தத், சல்மான்கான் போன்ற பாலிவுட்
 சூப்பர் ஸ்டார்கள் கூடத்தான் பிக்பாஸ் ஹோஸ்டாக
இருந்திருக்கிறார்கள். ஏன் கன்னடத்தில் சந்தீப்பும் தெலுங்கில்
ஜூனியர் என் டி ஆரும் ஒலிபரப்பில் இருக்கும் பிக்பாஸ் ஹோஸ்ட்.. அங்கெல்லாம் இத்துணை பரபரப்பு, ஆர்ப்பாட்டம், அரசியல் இல்லை
. உங்க தமிழ்நாட்டில் மட்டும் எப்படி , இப்படி னு கேட்கிறாக.
..அவுகளுக்கு என்னத்த சொல்லிப் புரிய வைக்கிறதுனு
தெரியல.
எங்க ஊரில தேனருவி பாடல்களை கமலஹாசன் 
தொகுத்து வழங்கினால் கூட
இப்படி எல்லாம் ஆகத்தான் செய்யும்னு!

ஓட்டப்பந்தயத்தில் இப்போ என்னவோ
 ரஜினியை முந்திக்கிட்டு உலகநாயகன் ஓடற
மாதிரி இருக்கு..
ரஜினிக்கு அடித்தட்டு மக்களின் ஆதரவு இருப்பதாகவும்
கமலுக்கு இன்டலெக்சுவல் ஆதரவு இருப்பதாகவும்
 சிலர் சொல்கிறார்கள்.
அப்போ அடித்தட்டு மக்கள் இன்டலெக்சுவல் இல்லையானு
 கேட்கப்பிடாது.
எனக்கு இந்தப் பகுப்பாய்வு தெரியல.
ஆனால் இதன் பின்னால் இருக்கும்
இன்னொரு அரசியல் தெரிகிறது.
கமலு எப்படி பார்த்தாலும் பார்க்க சிவப்பா அழகாதான்  இருக்காரு.
ஊறுகாய் மாதிரி நாயக்கரைத் தொட்டுப்பாரு. நாத்திகம் கூட பேசுவாரு.
அப்படியே ஆப்கானிஸ்தான் போயி தீவிரவாதிகளைச்
 சுட்டுத்தள்ளுவாரு.
நல்லா பரதநாட்டியம் வேறு ஆடுவாரு.
வெளிநாட்டு பல்கலை கழகத்திற்கெல்லாம் போயி
பேசிட்டு வந்திருக்கார்னா
அவரு பெரிய்யா ஆளா தானே இருக்கனும்!

பாவம் ரஜினி.. மொட்டையும் சொட்டையுமா.. !
வரப்போறேன் வரப்போறேன்னு சொல்லிக்கிட்டே நாளையும் பொழுதையும்
கடத்திட்டா இப்படித்தான் ஆகிடும்..
சரி .. சரி.. போகிற  போக்கில் வெளியில் இருந்து கமலுக்கு ஆதரவுனு சொல்வாரோ என்னவோ.!!

வடிவேலு மைண்ட் வாய்ஸ் இப்போ பார்த்து ..
சிவப்பா அழகா இருக்கிறவங்க என்ன சொன்னாலும்
எது செய்தாலும்
அது அறிவாளித்தனமாத்தான் இருக்கும்..

சிவ சிவா.. தாங்க முடியலடா சாமீ..


8 comments:

 1. என்னாலயும் முடியலே......

  ReplyDelete
 2. எங்களது கிராமப்புற சகோதர சகோதரிகளுக்கு இனி எஸ்எம்எஸ் படித்தல் கடினமாக இருக்காது. தயவு செய்து பகிரவும். 5 star rated app.
  https://play.google.com/store/apps/details?id=com.translatesms.tamil

  ReplyDelete
 3. சகாயம் மாதிரி நேர்மையாளர்களை முன்னிறுத்தி அரசியல் செய்தால் கமல் ஜெயிப்பது நிச்சயம் :)

  ReplyDelete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. ***சிவ சிவா.. தாங்க முடியலடா சாமீ.*** உங்களுக்கே அந்த "வெள்ளை மோக வியாதி" இருக்க மாதிரித்தான் தெரியுது. அதான் தாங்க முடியலை! "சிவா அங்கிளை" அழைக்கிறேள்! "அதெல்லாம் இல்லை! நான் ஒரு மே(தாவி)தைனு நீங்களே அடிச்சு சொல்ல்லிக்குவீங்களே? இல்லையா? வியாதியஸ்தியே மருத்துவர் வேடமும் போட்டுக்கொள்வதால் உங்களுக்கு அந்த (எம் சி ஆர், செயா, கமலு மோக) வியாதி இருக்கது தெரியாமலே போய்விட்டது பாவம்! Ignorance is bliss! :) BTW, Who is Siva anyway? Your uncle or your Shrink?! Whoever "He" is, he cant help you to get rid of your "ignorance". Because, to treat any disease, you need to admit that you have that "disease". I know you never will! Keep calling "siva uncle" for help. It sounds hilarious when you do that!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி. என் மீது பாவப்பட்டு .. ரொம்ப ரொம்ப நன்றி
   வருண் .

   Delete
 6. BTW, It is me, who gave you -1, for your TRASHY POST! YOU EARNED it! :)

  ReplyDelete