what is democracy?
the word democracy is two words of Greek - demo + kratein
demo means the people.
kratein means to rule.
Democracy - மக்களாட்சி.
one man one vote இந்தியாவின் மிகச்சிறந்த மனித உரிமையாக மதிக்கப்படுகிறது.
உலக நாடுகளில் மிகச்சிறந்த, மிகப்பெரிய மக்களாட்சி அடையாளத்தை
எப்போதும் பெருமையுடன் கீரிடமாக அணிந்து வலம் வருகிறது இந்தியா.
அதிக வாக்குகள் பெற்றவரே வெற்றி பெற்று நாடாளுமன்றம்
செல்வது சரிதானே என்று மேம்போக்காக வெற்றி/தோல்வி குறித்த
கருத்துகளைப் புரிந்து கொண்டவர்களுக்கு இந்தியாவின் மக்களாட்சி
மகத்துவமானதாகத் தெரியும். தெரிகிறது! ஆனால் இந்த வெற்றி/தோல்வியின்
உள்ளீடுகளைப் பார்த்தால் இந்திய மக்களாட்சியின் சாயம் வெளுத்துப் போகும்.
உதாரணமாக ஒரு தொகுதியில் ஒரு இலட்சம் வாக்களர்கள் இருப்பதாக
வைத்துக் கொள்வோம்.ன் அதிகமாக வாக்குப்பதிவு பெற்ற தொகுதியாக
கற்பனைச் செய்து கொண்டு 70% ஓட்டுப் பதிவு என்று கணக்கில் வைத்துக்
கொண்டாலும்
காங்கிரசு + திமுக கூட்டணி - 20,000
பி.ஜே.பி கூட்டணி - 15,000
அதிமுக கூட்டணி - 18,000
தேதிமுக +இதரக்கட்சி - 12,000
சுயேட்சை +
செல்லாத ஓட்டுகள் - 5,000
மொத்தம் பதிவான ஓட்டுகள் - 70,000
ஒரு இலட்சம் வாக்குகள் உள்ள தொகுதியில் ஓட்டுப்போடாத 30,000
தவிர்த்து ஓட்டுப் போட்டவர்களில் வெறும் 20,000 பேர் தேர்ந்தெடுத்த
வேட்பாளர் மீதி 50,000 வாக்காளர்களின் ஒப்புதலின்றி அந்தத் தொகுதியின்
வேட்பாளராக நாடாளுமன்றமோ/சட்டசபையோ செல்லுகிறார்.
இந்த 50000 வாக்காளர்களும் இந்த வெற்றி பெற்றவரை ஏற்றுக்கொள்ளவில்லை
அல்லது அவர் தகுதியானவரல்ல என்று தீர்மானித்தார்கள்.
பெரும்பான்மையால் தகுதியற்றவராக தீர்மானிக்கப்பட்ட ஒருவர்
வெற்றி பெற்று தகுதியானவராக ஆக்கப்படுகிறார் என்றால்
இந்த தேர்தல் முறை எப்படி மக்களாட்சியாக இருக்க முடியும்?
இவரும் இவரைப் போலவே தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களும்தான்
இந்தியாவை ஆளும் மக்களாட்சி.
இந்திய மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் ஆட்சியாளர்கள்.
இது எவ்வளவு கேலிக்கூத்து?
இது மக்களாட்சிதானா?
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு ! என்றெல்லாம் நாம் அடிக்கடி சொல்லிக்கொள்கிறோமே..
இதெல்லாம் எவ்வளவு கடைந்தெடுத்தக் காலித்தனமான
ஏமாற்று வித்தை..
மேலே சொல்லியிருக்கும் எடுத்துக்காட்டு ஒரு கற்பனை அல்ல.,
இதோ சில உண்மையான புள்ளிவிவரங்கள்:
*இன்றைக்கு ஆளும் காங்கிரசு பெற்ற மொத்த வாக்குகள் 28.6% .
இது 2004ல் காங்கிரசு பெற்ற வாக்குகளை விட 2% அதிகம்.
அவ்வளவுதான்.
* பீகாரில் நாவ்டா பார்லிமெண்ட் தொகுதியில் வெற்றி பெற்ற
பி.ஜே.பி வேட்பாளார் போலாசிங் பெற்ற வாக்குகள் வெறும் 10% தான்.
*முரளி மனோகர் ஜோஷி, லால்ஜி தாண்டன், குக்கும்தேவ் நாராயண்
சல்மான் குர்ஷித், பரூக் அப்துல்லா ஆகியோர் வெற்றி பெற்றது 1/8 வாக்குகள் மூலம்தான்.
* மீராகுமார் பெற்ற வாக்குகள் 1/8
* 50% வாக்குகள் பெற்று நாடளுமன்றம் வந்திருப்பவர்கள் மொத்தமே 5 பேர்தான்
நாகாலந்து, சிக்கிம், வங்காளம் தாலா ஒருவரும் திரிபுராவிலிருந்து 2 பேரும்.
* 145/573 பாராளுமன்ற உறுப்பினர்கள் 20%க்கும் குறைவாக ஓட்டுகள் பெற்று
நாடாளுமன்றம் வந்தவர்கள்.
அப்படியானால் 20 அல்லது 30 விழுக்காடு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்
மீதி 80 அல்லது 70 விழுக்காடு மக்களையும் சேர்த்தே ஆட்சி செய்கிறார்கள்
மக்களாட்சி என்ற பெயரால்!.
*
அடிக்கடி தேர்தலில் தோல்வியைச் சந்திக்கும் போதெல்லாம் நம் அரசியல்
தலைவர்கள் சில உண்மைகளை உதிர்ப்பார்கள்...
"நாங்கள் தோல்வி அடைந்துவிட்டோம் என்று நினைக்காதீர்கள்.
கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் நாங்கள் பெற்ற வாக்குகள் அதிகம்
என்ற உண்மை மக்களிடம் எங்களுக்கிருக்கும் செல்வாக்கை உறுதி செய்கிறது"
இத்தியாதி வசனங்கள் எழுதப்படும்.
நம் அரசியல் தலைவர்கள் சொல்வதில் எதில் உண்மையிருக்கிறதோ இல்லையோ
இது மட்டும் உண்மைதான்!!
- 2001ல் தமிழ்நாட்டில் அதிமுகவும் திமுகாவும் பெற்ற வாக்குகள் 31%.
ஆனால் திமுக வெற்றி பெற்ற இடங்கள் 31, அதிமுக பெற்ற இடங்கள் 132.
எனவே அதிமுக ஆட்சி.
- 2006ல் திமுக பெற்ற வாக்குகள் 26.5%, - வெற்றி பெற்றது 96 இடங்கள்
ஆனால் அதிமுக பெற்ற வாக்குகள் 32.6% -வெற்றி பெற்றது 61 இடங்கள்.
மக்களாட்சி என்ற பெயரால் -
யாரை நாம் ஏமாற்றுகிறோம்?
நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோமா?
நம் தேர்தல் முறையை நாம் உண்மையாகவே மக்களாட்சிக்கு மிகவும்
நெருக்கமான முடிவுகளைத் தரும் தேர்தல் முறையாக மாற்ற வேண்டிய
தருணம் வந்துவிட்டது.
(தகவல்கள்: M C RAJ, CERI)
http://www.youtube.com/watch?v=raP1kbQ5uZA
மக்களாட்சியின் தொடக்கமே கேள்விக்குறியதாக உள்ளது. சிறந்த பதிவு.
ReplyDeleteதனிப் பெரும்பான்மை கட்சிகள் ஊழல் செய்து செல்வாக்கு இழந்ததால், தற்பொழுது உதிரிக்கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கிறார்கள். ஜனநாயக ஆட்சி முறை சலித்துப் போகும் காலம் வரும்வரை இந்தக் கேலிக்கூத்துகளை சகித்துக் கொள்ள வேண்டித்தான் இருக்கிறது. நடிகர்கள் நிறுவனம் துவங்குவதைவிட கட்சித்துவங்கினால் நல்ல லாபம். ஓட்டுகளை பிரிப்பதற்காகவே பெரிய கட்சிகளால் உதிரிகட்சிகள் நிறுத்தப்படுகின்றன
ReplyDeleteஇலங்கையில் 1977 ம் ஆண்டு தொடக்கம் பாராளுமன்றத்துக்கு விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையிலேயே உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர்.
ReplyDeletewhat is an alternate for this lost-sense democracy? there is no way to accept two party system in our nation because of its size and population..... criticisms and the statistical reports will just alarm the people(that too educated..).. the only remedy for this crisis is to educate everybody in order to choose the best to rule and to become the best to rule.....
ReplyDeletemore and more countries of the world are further giving up the majoritarian electoral system and are taking up the proportionate electral system.In Europe, 21 out 28 countries use proportional representation. the study and research works carried out by
ReplyDeleteCERI team. state wise CERI team formed and state wise conference >
district wise conference+workshops
going on. our target period is 10 years. hope the CHANGE WILL COME.
anbudan,
puthiyamaadhavi,
CERI-MUMBAI
chumma oru petchukkuk kooda bjp kku ivvalavu ottu kodukkak koodaathu magale!
ReplyDelete