
ஜெயமோகனின்
கலாச்சார இந்து
விஷ்ணுபுரம்
இலக்கிய நிகழ்வுக்கு
சென்றிருந்தப்
போது வாங்கிவந்தப்
புத்தகங்களில்
ஒன்று ஜெ.மோவின்
கலாச்சார
இந்து. ஜெ.மோ என்ன சொல்லியிருப்பார்
என்பதை
புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டுவதற்கு
முன்பே
நம்மால் ஊகிக்க முடிகிறது.
ஜெ.மோ வின் இந்துமதம் குறித்தப்
புரிதல்களும்
கோர்வையாக
அதன் மாற்றங்களை அல்லது
கலவைகளை
தொகுத்திருக்கும் விதமும்
பாராட்டுதலுக்குரியது.
வாசகரின் இந்துமதம்
சார்ந்தக்
கேள்விகளுக்கான அவருடைய
விளக்க
உரை தான் இக்கட்டுரைகள்.
தனக்குத்
தோதான இந்துமதக் கருத்துகளைச்
சொல்ல
அதற்கேற்ற வினாக்களை முன்வைத்து
எழுதப்பட்டிருக்கிறது. அந்த வினாக்கள் பொதுஜனப்
புத்தியிலிருந்து
எழுகின்றன.
கலாச்சார இந்து பற்றிய கட்டுரைகளில் ஜெ.மோ
சிலாகிக்கும் சில விடயங்கள்..
*இங்குள்ள எந்த வழிபாடும் இந்து மத த்துடன்
உரையாடிக்
காலப்போக்கில் அதனுடன் இணைந்து
கொண்டே
இருக்கும். இப்படி இணைவதன் மூலமே
இந்துமதம்
உருவாகி முன் செல்கிறது.
(பக்18)
*எந்த சிறுதெய்வமும் இந்துப் பொதுமரபில்
எங்கோதான்
இருந்து கொண்டிருக்கும்.
கண்டிப்பாக
முற்றிலும்
வெளியே இருக்காது. தலித்துகளின்
தெய்வங்கள், பழங்குடிகளின் தெய்வங்கள்
கூட இதுவே
உண்மை. (பக் 21)
*பிரம்ம ம் என்ற பிரமாண்டமான தரிசனத்திலிருந்து
கைக்குச்
சிக்கும்படி அள்ளப்பட்ட சிறிய தரிசன ங்களே
சிவன்
விஷ்ணு முருகன் போன்ற நம் தெய்வ உருவகங்கள்.
ஞ்சானிகள்
தேடுவது கடவுள் என்ற நம்பிக்கையை
அல்ல, கடவுள் என்ற சுய அறிதலை,
சுய அனுபவத்தை.
(பக் 68)
*கோயில்களை சடங்குகளை விழாக்களை மதங்களை
இலக்கியங்களை
த த்துவங்களை கலைகளை
இசையை
குழந்தைகளுக்கு அளியுங்கள்.
அவற்றின்
மீது
உங்களுக்கிருக்கும் நம்பிக்கைகள் மறுப்புகள்
ஐயங்களுடனேயே
அளியுங்கள். அவர்களை மரபின்
வளமான
மண்ணில் ஊன்றி வையுங்கள்.
அவர்கள்
எப்படி வேண்டுமானாலும் வளரட்டும்.
(பக்90)
*எந்தப் பழங்குடி தெய்வத்தின் கதையும் இயல்பாகவே
சைவத்தில்
வந்து முட்டும். இந்து மதம் என்பதே இத்தகைய
பல
ஆயிரம் வழிபாடுகளின் தொகை என்பதே
இதற்கு
காரணம். (பக்112)
*இந்து மத த்தின் அமைப்பே மூன்றடுக்கு முறைதான்.
கீழே
நாட்டார் தெய்வங்களும் குல தெயவங்களும் அடங்கிய
வழிபாடு. மேலே பெரிந்தெய்வ வழிபாடு.
அதற்குமேல்
த
த்துவ தெய்வ உருவகம்.
இம்மூன்றும் ஒன்றுடன் ஒன்று
பிரிக்கமுடியாத
படி கலந்திருக்கும். த த்துவம் பழங்குடி
வழிபாட்டை
நோக்கி வரும். பழங்குடி வழிபாடு த த்துவம்
நோக்கிச்
செல்லும். பழங்குடி தெய்வ பிரதிஷ்டை இல்லாத
எந்தப்
பெருங்கோவிலும் தமிழ் நாட்டில் கிடையாது.
(பக் 113)
ஜெ.மோ வின் இக்கருத்துகளின்
தொகுப்பு
அவ்வப்போது
வாசித்த கருத்துகளாக இருந்தாலும்
அவற்றை
ஒரு புள்ளியில் தொகுத்து வழங்கி இருக்கும்
போது
மரபு சார்ந்த ஒரு புரிதலும் கூடவே
பயணிக்கிறது. ஜெ.மோ கட்டுரைகளின் ஒரு
பக்கத்தில்
இந்தப் பீடங்கள் தானே எழும்பி
நிற்கின்றன.
அடுத்த நொடியில் ஜெ.மோ
எந்த
இட த்திலிருந்து இதை எல்லாம் எழுதுகிறார் என்ற
எண்ணம்
எழுகிறது. திரும்பிப் பார்க்கிறேன்.
ஜெ.மோ மிகச் சிறப்பாக பெருமித
உணர்வுகளுடன்
சொல்லும்
இந்து மத மரபில்
ஜெ.மோ உட்கார்ந்திருக்கும்
இடம்
வசதியான இருக்கை. அவருடைய இடம்
அவருக்கு
அவர் வாசிப்பிலோ எழுத்திலோ கிடைத்த
இடமல்ல. அது அவருக்கு அவர்
பிறப்பின் வழி
வாய்க்கப்பெற்ற
பெரும்பேறு.
வசதியாக
அமர்ந்திருக்கிறார்.
அவருடைய
இடம் இருக்கை காற்றோட்டமாக
இருக்கிறது. வாசிப்புகளும் தேடலும்
கூடுதல்
அனுபவமாகி
கலாச்சார இந்துவாக அவர்
எம்முடன்
உரையாடுகிறார்.
வாழ்க்கை… பயணம்..
இரயில்
ஓடும் தண்டவாளத்தில் கூட மாற்றமில்லை.
ஆனால்
அவர் முதல் வகுப்பிலும்
எம்மைப்
போன்றவர்கள் மூன்றாம் வகுப்பிலும்
பயணிக்கிறோம்.
இந்த
இரயில் பயணம் அருமையானது,
அழகானது , என்று அவர் சொல்வதை
அப்படியே
சொல்ல வேண்டும் என்றுதான்
நானும்
விரும்புகிறேன். மூன்றாம் வகுப்பில்
மூச்சு
முட்டுகிறது.
என் கைகளையும் கால்களையும் நீட்ட முடியாது.
என்
பிள்ளைகளுக்கும் அதே அதே.
இப்படித்தான்
இருக்கும் இரயில் பயணம்
என்று
சொல்லுகிறேன்.
அவரும்
சொல்லுகிறார்..
இது
நம் தொன்ம ம், இது நம் பெருமை,
இது
மூன்றடுக்கு , இதுவே பிரமாண்டம்
என்று. நானும் சொல்கிறேன்…
இது
நம் பயணம்.. எப்படியும் போகும்
இட
த்திற்குப் பத்திரமாகப் போய்விட வேண்டும்
என்று. அவர்களை அந்தக் கூட்ட
நெரிசலில்
என்னுடன்
சேர்த்து அணைத்துக் கொள்கிறேன்.
அவர்கள்
மெதுவாக என் அணைப்பிலிருந்து
தங்களை
விலக்கிக் கொள்கிறார்கள்.
ஜெ. மோ பயணிக்கும் முதல்
வகுப்பு…
ஜெ.மோ.. கதவுகளைத் திறக்க முயற்சி
செய்கிறார். அவருக்கும் தெரியும்..
அந்தக்
கதவுகளைத் திறக்கும் சாவி
அவர்
வசமில்லை என்பது.
அவர்
குருவின் மன நிலைக்குப் போய்
நடிக்க
முயற்சிக்கலாம்.. அத்தருணத்தில்
அது
தேவையாகவும் இருக்கிறது…
கதவுகள்
மூடியே இருக்கின்றன.
இரயில்
ஓடிக்கொண்டிருக்கிறது.
நான்
தவிப்புடன்…
எம்
பிள்ளைகள் இறங்கிவிட்டார்கள்..
அல்லது
முதல் வகுப்பிலிருந்து தள்ளிவிடப்
பட்டார்கள்..! இரயில் ஓடுகிறது…
மரம்
செடி கொடி தண்டவாளங்கள்
எங்களுடன்
ஓடுகின்றன.
அவர்களும்
ஓடுகிறார்கள்,
நாளை… அவர்கள் நடைப்பயணமாகவே
வர
வேண்டிய இட த்திற்கு வந்துச் சேரலாம்.
அல்லது
யாருக்குத் தெரியும்..
இரயிலை
விட வேகமாகப் பயணிக்கும்
விமானத்தில்
ஏறி வந்துவிடலாம்.
வரட்டும்..
கலாச்சார
இந்துவுடன் கை குலுக்குகிறேன்..
ஓம்
நம சிவாய.
#கலாச்சார_இந்து
#கலாச்சார_இந்து