Sunday, January 13, 2019

THE ACCIDENTAL PRIME MINISTER


Image result for accidental prime minister review

சமகால அரசியலை முன்வைத்து
வெளிவந்த திரைப்படங்களில்
இப்படம் மிகவும் முக்கியமானது.
"Sach likhna itihaas ke liye zaroori hota hai”
"உண்மையை எழத வேண்டியது 
வரலாற்றின் கட்டாயம்"
என்று சொல்லும் பிரதமரின் மீடியா
 அட்வைசராக 2004 முதல் 2008
வரை கூடவே இருந்த சஞ்சய பாரு வின் 
அனுபவத்தில்எழுதப்பட்ட புத்தகம்.
திரைப்படமாகி இருக்கிறது.
மன்மோகன் சிங் இந்தியாவின் பிரதமரானது
யாரும் எதிர்ப்பார்க்காத ஒரு திருப்பம்,
ஒரு விபத்து.. 
ஒரு தனிமனிதனின் அரசியல்
போராட்டம், மகாபாரத யுத்தம்..
ஆட்சி அதிகாரத்தின் அசல் முகம்..
ஒவ்வொரு செய்திக்குப் பின்னாலும்
மறைந்திருக்கும் உள்குத்து அரசியல்..
மன்மோகன் சிங்க் என்றஅதிர்ந்து பேசாத
ஒரு தலைவர் , ஊடகங்களால் மிகவும்
அதிகமாக கேலி கிண்டலுக்கு உள்ளான
பிரதமர்… தன் மென்மையான குரலில்
உறுதியாக சொல்கிறார்…
ஊடகங்கள் காட்டிய பிரதமராக 
நான் மக்கள் மனதில் இடம் பிடிக்கமாட்டேன்.
என்று! 
அணு ஆயுத ஒப்பந்தம் அத்துடன் 2ஜி,
நீராடிய டேப்.. ஊழல்.. இப்படியாக 
பிரதமரைச் சுற்றி ஒரு சதிவலை..
குற்றங்கள், ஊழல், தோல்வி, இயலாமை
இத்தியாதிக்கெல்லாம் பொறுப்பேற்க
வேண்டியவராக மன்மோகன் சிங்..
காங்கிரசு கட்சிக்கு ஒரு பலிகடாவாக
பிரதமர் நாற்காலியில்…

மன்மோகன்சிங்க் பாத்திரத்தில் நடித்திருக்கும்
அனுபம் கெர், மற்றும் சோனியா காந்தி பாத்திரத்தில்
நடித்திருக்கும் (German-born actress Suzanne Bernert.) 
சுசைனி பெர்னர்ட் இருவரின்
உடல்மொழி இத்திரைப்பட த்தின் காட்சிகளுக்கு
 வலு சேர்த்திருக்கிறது.
சமகால அரசியல் என்பதாலும் 
சம்பவங்கள் பார்ப்பவர்களுக்கு
மிகவும் நெருக்கமானவை, 
நினைவிலிருப்பவை என்பதாலும்
தியேட்டரில் கூட்டம் அலைமோதுகிறது.
காங்கிரசு கட்சிக்கும் காங்கிரசு அரசியலுக்கும்
இத்திரைப்படம் எதிர்மறையான அலைகளை
 எழுப்பும் என்பதும் அதை இன்றைய பிஜேபி அரசு
 மறைமுகமாக ஆதரிக்கும் என்பதும்
 இத்திரைப்பட த்தைப் பார்த்துவிட்டு
 வெளியில் வரும் போது
இதன் இன்னொரு அரசியலாக
விரிகிறது.
ஒரு புத்தகம் … அதன் சம்பவங்கள்.. அதில் வரும்
நபர்கள்.. அனைத்தும் உண்மை.
ஆனால் உண்மைகளுக்கும் இன்னொரு முகம் உண்டு.
உண்மைகளுக்கும் அரசியலுண்டு..
அந்த இரண்டும் இந்த திரைப்பட த்திற்கும் உண்டு…
இதை எழுதும் போது…
இப்படியான ஒரு திரைப்பட த்தை/ புத்தகத்தை
 தமிழக அரசியலை வைத்து எடுக்க முடியுமா?
எழுத முடியுமா..

ஆக்சிடெண்ட்.. ஆகிவிடும்.

2 comments:

  1. சுருக்கமானதாயினும் அருமையான விமர்சனம்.இறுதியாக எழுப்பிய கேள்வி அதிகம் யோசிக்க வைத்தது

    ReplyDelete
  2. மணிரத்னம் கருணாநிதி எம்ஜியார் கதையை வைத்து இருவர் படம் எடுத்தாரே! படம் ஒருதலைப்பட்சமாக, கருணாநிதியைக் குறை சொல்லாமல் இருந்தபோதே, கருணாநிதி மணிரத்னம், அண்ணன் ஜீவி இருவர் கதையையே படமாக எடுத்திருக்கலாம் என்று நக்கலாகக் கமெண்ட் அடித்ததாக சொல்லப்படுவதுண்டு.

    புதுக்கோட்டை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி சொல்வதுபோல இங்கே தமிழர்களுக்கு வரலாற்றுப் பிரக்ஞை இல்லை என்பது உண்மைதான்!

    ReplyDelete