Saturday, August 8, 2020

கொரொனாவில் மறைந்திருக்கும் அரசியல்

கொரொனாவுக்குள் மறைந்திருக்கும் 
உயிர்க்கொல்லிகள்
EIA 2020.. & தேசியக்கல்விக்கொள்கை SGD4 
 
இந்த இரண்டும் நம் மண்ணையும் 
மனிதர்களையும் நேரடியாக தாக்கும் 
அதிகாரமிக்கவை.
நாடாளுமன்றத்தில் பேசி விவாதித்து முடிவு
செய்ய வேண்டியவற்றை எல்லாம் ஊரடங்கு
காலத்தில் அவசரம் அவசரமாக
  சட்டமாக்கிவிட துடிக்கிறது அரசு..
சமஸ்கிருதம் வந்துவிட்ட தாக்கும் என்று
ஒற்றை வாலைப் பிடித்துக்கொண்டு 
தொங்கும் சமாச்சாரமல்ல
 இந்த தேசியக்கல்விக்கொள்கை.
கல்வி நம் அடிப்படை உரிமை 
என்பதிலிருந்து மாற்றப்பட்டு 
கல்விக்கு வழங்கப்படும் அரசுமானியங்களை
புதைத்துவிட்டு எல்லாமோ வணிகம்.. என்ற
சந்தைக்கலாச்சாரத்திற்கு மாற்றுகிறது..
இதில் நம் கலாச்சாரத்தை மறந்துவிடவில்லை
என்ற பாசாங்கு காட்டுவதற்கு ஆயக்கலைகள் 
64 கற்பிக்கப்படும் என்று வசனம் பேசுகிறது.
நாளந்தாவை அழித்தவர்கள் 
நாளந்தா பல்கலை கழகத்தை 
முன்னுதாரணமாக பேசுகிறார்கள்!
 
EIA 2020..
இயற்கை வளத்தின் மீது இந்த மண்ணில்
வாழும் ஜீவராசிகளுக்கான உரிமையைப் பறிக்கிறது.
(அதுவும் கொரொனா காலத்தில்..!)
குடிமக்களின் கருத்து கணிப்பு தேவையில்லை..
உங்கள் நிலத்தில் உங்கள் நதியில்
என்ன செய்யலாம் என்பதைத் தீர்மானிக்கும்
அதிகாரம் உங்களுக்கு இல்லை!
இதில் ரொம்பவும் சாதுரியமாக
தொழில் பட்டியலை மாற்றி இருப்பதன் மூலம்
 எந்த வல்லுனரும் ஆய்வு நட த்தி 
ஒப்புதல் தரவேண்டிய அவசியமிருப்பதை 
அபகரித்திருக்கிறது.
மேலும் 25 நச்சுத் தொழில்களுக்கான 
30 விதிகளைத் தளர்த்தி இருக்கிறது. 
( 30 conditions that will dilute the
Notification for over 25 toxic industries)
 
பஞ்சாபில் ஒரு கேன்சர் டிரெயின் 
ஓடிக்கொண்டிருக்கிறது
அதைப் பற்றி நமக்குத் தெரியாது.
கேரளாவில் நிலச்சரிவு.. உயிருடன் 
மண்ணில் புதைந்துப்போன மனிதர்கள் 
என்ற கொடூர நிகழ்வை
தொடர்மழையால் கேரளாவில் நிலச்சரிவு.. 
உயிர்ப்பலி என்ற ஒற்றைச்செய்தியில் கடந்து போய்க்கொண்டிருக்கிறோம்.
ஏன் தொடர்கின்றன இந்த நிலச்சரிவுகள்?
நம் மேற்குத்தொடர்ச்சி மலையின் பாறைகள் 
ஆட்டம் காணும் அளவுக்கு என்ன நடக்கிறது 
இந்த மண்ணில்?
இமயமலையை விட பழமையான 
நம் மேற்குத்தொடர்ச்சி மலையின்
 இருப்பு பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?
Ecological problem என்பது குளிரூட்டப்பட்ட
அறையில் உட்கார்ந்து புள்ளிவிவரங்களுடன்
பேசிவிட்டு கலைந்து போகும் விடயமல்ல.
இது நம் வாழ்க்கை.
நமக்கு என்ன வேண்டும் ..?
என்ன வேண்டாம்!
எது வளர்ச்சி? எது முன்னேற்றம்?
இதை எல்லாம் இனி நாம் திவீரமாக
மீள்வாசிப்பு செய்தாக வேண்டும்..

No comments:

Post a Comment