Saturday, August 29, 2020

இந்தி தான் இந்தியப் பிரதமருக்கான தகுதியா ?

 

 

இந்தி தான் இந்தியப் பிரதமருக்கான தகுதியாக

இருக்கிறதா..??!!

அண்மையில் முக நூலில் ஒரு பதிவு வாசித்தேன்.

அப்பதிவு பெருந்தலைவர் காமராஜருக்கு இந்தியும்

ஆங்கிலமும் தெரியாது என்பதை முன்வைக்கிறது.

நேருவின் மறைவுக்குப் பின், லால்பகதூர் சாஸ்திரியின்

மறைவுக்குப் பின் இந்திய அரசியலில் காமராசரின்

செல்வாக்கு உச்சத்தில் இருந்த து என்றாலும் அவர்

“NO HINDI, NO ENGLISH, How can I be PM?”

என்று காமராஜர் சொன்னதாக ஒரு சொற்றொடர்

இப்போதும் ஊடகங்களில் இருக்கிறது.

அப்படியானால் காமராஜர் எந்த மொழியில் நேருவுடனும்

பிற இந்திய அரசியல் தலைவர்களுடனும் உரையாடி

இருப்பார்? என்ற இன்னொரு கேள்வி எழுகிறது.

இங்கே ஊடகங்கள் சொல்வது போல காமராஜர் அவர்களுக்கு

ஆங்கிலமே தெரியாது என்பதல்ல …! பேச்சு வழக்கின்

ஆங்கில உரையாடலை அவர் அறிந்தவர். காமராஜருடன்

பயணித்து அவரைப் பற்றி எழுதி இருக்கும் சாவி அவர்கள்

காமராஜர் தன் பயணங்களின் போது அரசு கோப்புகளை

வாசித்தும் கையொப்பமிட்டும் குறிப்பு எழுதியும் இருக்கிறார்

என்பதையும் அவர் பயணத்தில் வாசிக்கும் புத்தகங்களில்

ஒன்றிரண்டு ஆங்கிலப்புத்தகங்களும் இருக்கும் என்பதையும்

பதிவு செய்திருக்கிறார். 

 

பெருந்தலைவர் காமராஜருடன்  6 ஆண்டுகள்

பத்திரிகை நிருபராக பயணம் செய்த ஜவஹர்

ஆறுமுகம் அவர்கள் (Jawahar Arumugam Arumugam)

நான் காமராஜருடன் 6 ஆண்டுகள் சுற்றுப்பயணம்

செய்த நிருபர். காமராஜ் ஆங்கிலத்தில்

கோப்புகளைத் திருத்துவார். ஹிந்தி புரியும். 

 என்று என் முக நூல் பதிவில் பின்னூட்டமிட்டிருக்கிறார்.

இன்னொரு நிகழ்வையும் பலர்

எழுதி இருக்கிறார்கள். அதாவது நேரு சென்னை விமான

நிலையத்தில் வந்து இறங்குகிறார். அவரை வரவேற்க

செல்கிறார் காமராஜர். காமராஜர் நேருவை விட உசரம்.

உயரத்திற்கு ஏற்ற உடல் பருமனும் கொண்ட தோற்றம்.

(இந்தப் புகைப்படத்தைப் பாருங்கள்… ) தன்னை நோக்கி

வரும் காமராஜரைப் பார்த்து “ you are a TALL MAN”

என்று வியப்புடன் சொல்கிறார். அதற்கு காமராஜரோ

“Not as tall as yourself” என்று சொன்னவுடன்..

இருவரும் சிரித்துக்கொள்கிறார்கள்.

இந்தளவுக்கு காமராஜருக்கு ஆங்கிலம் தெரிந்திருக்கிறது

என்பதையும் அவர் பதில் சொன்ன விதமும்..

அந்த மனிதனைப் புரிந்து கொள்ள உதவுகிறது.

குடியரசு தலைவராக இருந்த பிரானாப் முகர்ஜி

காங்கிரசின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவர்.

தான் இந்தியப் பிரதமராவதற்கு தகுதி இல்லை என்பதற்கு

அவர் சொன்ன காரணம்.. “though I was elected to the LOK SABHA,

I did not know hindi. And without knowing Hindi, nobody should

Venture to be the PM of India”

இந்த ஒட்டு மொத்த பிம்பத்தையும் சேர்த்து தான்

இந்திய அரசியலையும் இந்தியையும் வாசிக்க

வேண்டி இருக்கிறது. இப்போது தான் தேசியக் கட்சியிலிருந்து

சில வித்தியாசமான குரல்கள் ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன.

காங்கிரசு கட்சியின் சசிதரூர் “இந்தி யார்மீது திணிக்கப்படக்

கூடாது “ என்று உரக்க குரல் கொடுக்கிறார்.

“Hindi cannot be imposed even if the Prime Minister is from

Tamil Nadu or West Bengal”

தங்கள் கட்சியின் மூத்த தலைமுறை முன்வைத்த

“இந்தியப்பிரதமருக்கு இந்தி தெரிந்திருக்க வேண்டும்”

என்ற கருத்தை எதிர்த்து ஒலிக்கிறது.

இக்குரல் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்..

***

#NO_Hindi_No_PM

#இந்தியப்பிரதமருக்கு_இந்தி_கட்டாயமா

 

 

 

 

No comments:

Post a Comment