Wednesday, August 26, 2020

கட்டமைப்பின்மையில் செயல்படும் கட்டமைப்புகள்

 

கட்டமைக்கப்பட்டதும் படாததும்.
Structure and unstructure 
 
< முழுமையான கட்டமைப்புக்குள் இருந்துகொண்டு 
பெண் “விட்டு விடுதலையாகும்” கனவுகளை மட்டும்
காணுகிறாள்.!> 

கட்டமைக்கப்படாத ஆண்களையே (Anarchist)
அதிகமாக பெண்களுக்குப் பிடிக்கிறது.
ஆனால் அந்த அனார்ஜிஸ்ட் ஆணும் கூட
பெண் மட்டும் கட்டமைக்கப்பட்டவளாக
இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறான்!
அரசின்மை என்பதன் அடி நாதமே 
அதிகாரமின்மை.அதிகாரத்தை எதிர்த்தல்.
அதிகாரம் எந்த வகையில் எந்த ரூபத்தில்
 வந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளாத 
மனநிலைதான்.
அரசு அதிகாரமின்மை தேசம் இதெல்லாம்
 இல்லாத போதும் மனிதன் நிம்மதியாக மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்கிறான் என்பதை ஒத்துக்கொள்கிறோம்.
ஆனால் மீண்டும் அந்த உலகம் சாத்தியமா?!
அதை முன்வைப்பது கூட ஒரு புனைவுலகமாக 
(யுதோப்பியன் ) இருக்கிறது.
 
ஒரு படைப்பாளனுக்கும் அவன் படைப்புகளுக்கும் கட்டமைப்புகள் எப்போதும் எதிராகவே இருக்கின்றன.
கட்டமைப்புகளில் வாழ்ந்து கொண்டே கட்டமைக்கப்பட்ட அனைத்துடனும் அவன் போராடிக்கொண்டிருக்கிறான்.
ஆனால் ஒரு கணினி வல்லுனர்க்கோ அல்லது
ஒரு பெரும் கூட்டத்தை வழி நடத்தும் நபருக்கோ
 கட்டமைப்பு தேவைப்படுகிறது.
பெண்ணும் பெண் படைப்புகளும் எழுத்துலகில் 
மட்டுமல்ல.. நடைமுறை வாழ்க்கையிலும் 
ஒவ்வொரு தளத்திலும் கட்டமைப்புகளுக்கு 
எதிராகப்போராட வேண்டியவளாக இருக்கிறாள்.
முழுமையான கட்டமைப்புக்குள் இருந்துகொண்டு 
பெண் “விட்டு விடுதலையாகும்” கனவுகளை மட்டும்
காணுகிறாள்.!
எல்லா கட்டமைப்புகளையும் தூக்கி எறிந்த
சித்தர்மரபில் கூட ஆண்களின் பங்களிப்பு 
இருந்த அளவுக்கு பெண்கள் இருந்தார்களா?
ஏன் இல்லை?
 

No comments:

Post a Comment