Friday, December 20, 2019

இதுதான்யா இந்தியா..



இதுதான்யா ..இந்தியா..

Quit india முதல் சாரே ஜாஹாங்சே அச்சா
ஹிந்துஸ்தான் அமரா வரை…
Image result for saare jahan se achcha

(1)
1942, ஜூலை 14, வர்தாவின் கூடுகின்ற நேஷனல் காங்கிரசு
இந்தியாவுக்கு முழுசுதந்திரம் வேண்டும் என்ற கோரிக்கையை
முன்வைத்து போராட முடிவு எடுக்கிறது. அக்கருத்தை
“நச்”சென சொல்ல வேண்டும். காந்தி தன் சகாக்களுடன் இது
குறித்து பேசுகிறார். அப்போது காந்திக்கு அருகிலிருந்த
ராஜாஜி அவர்கள் “RETREAT “ “WITHDRAW” என்று சொல்ல லாமே
என்று தன் கருத்தை முன்வைக்கிறார். ம்கூம்.. என்னவோ ராஜாஜியின்
சொல்லில் தான் விரும்பிய அந்த போராட்ட மந்திரச்சொல்லாக இல்லை
என்பதைக் காந்தி உணர்கிறார். அத்தருணத்தில் மும்பையில்
GO BACK SIMON – சைமனே.. திரும்பிப்போ என்ற முழக்கத்தை
முன்வைத்த (Yusuf Meherally.)யுஷப் மெஹரலி என்ற இளைஞன்
சொன்னது தான் “QUIT INDIA”.
QUIT INDIA MOVEMENT இந்திய வரலாறானது.. அந்த யுஷப் க்கு
இந்திய வரலாறு என்று நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளது.
(2)
இன் குலாப் ஜிந்தாபாத்..
இந்தப் புரட்சியின் முழக்கத்தை இந்திய மண்ணுக்கு கொடுத்தவர்
(Maulana Hasrat Mohani in 1921) மெளலானா ஹஷ்ரத் மொஹானி. புரட்சியாளர்
பகவத்சிங்க் மற்றும் அவர் தோழர்கள் இதையே தங்கள் புரட்சியின்
தாரக மந்திரமாக முழங்கினார்கள். அந்த மெளலானாவுக்கு நன்றி.
(3)
சாரே ஜாஹாங்சே அச்சா
ஹிந்துஸ்தான் அமரா அமரா..
புகழ்மிக்க இந்தப் பாடலை லதாமங்கேஷ்கர் பாடும் போது
 உருகாத மனமும் உருகும்.. இந்தப் பாடலை இயற்றிவர் 
முகமது இக்பால். பிரிவினைக்கு முந்திய பாஞ்சாப் கவிஞர்.
இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் 
இவர் பாகிஸ்தான் பாஞ்சாப் பகுதியில் வாழ்ந்தார்.
 The thinker of Pakistan என்று இவர் அழைக்கப்படுகிறார் என்றாலும்..
சாரே ஜாஹாங்க் சே அச்சா.. இந்துஸ்தான் அமரா அமரா..
அப்படியெ எதுவும் மாறாமல்
 இந்திய மண்ணில் இசையுடன் வாழ்கிறது.. 
முகமது இக்பாலுக்கு நன்றி.
ஆம். துமாரா அல்லது மேரா என்று சொல்லவில்லை!
அமாரா .. நம்முடையது என்று தான் சொல்கிறது.
(துமாரா - உன்னுடையது, மேரா - என்னுடையது.)
(4)
பாகிஸ்தானிலிருந்து 1971ல் பிரிந்த வங்காளதேசம்
 தங்கள்தேசத்தின் தேசிய கீதமாக தெரிவு செய்த து 
இந்தியர் எழுதிய பாடலைத்தான். 
1905ல் SONAR BANGLA என்று இரவீந்தர நாத் தாகூர் எழுதிய பாடல் தான் வங்கதேசத்தின் தேசியகீதம்
நன்றி வங்கதேசமே.. !
ஆஹா.. இதை எல்லால் சொல்லும்போதே
இனம்புரியாத மகிழ்ச்சியும் பெருமையும்
ஏற்படுகிறதே…
இதுதான் யா இந்தியா..
இதுல என்னய் யா பிரச்சனை உங்களுக்கு?!!
இதுதான்யா.. இந்தியா..

2 comments:

  1. புரியாதவர்களுக்கு எதுவும் செய்ய முடியாது...

    ReplyDelete
  2. அருமையான தகவல்
    உண்மையும் கூட

    ReplyDelete