Monday, December 9, 2019

இந்திய குடியுரிமை சட்ட திருத்தம்

Image may contain: 1 person, standing, beard and text
இந்தியக் குடியுரிமை சட்ட திருத்தம் மசோதா
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
இந்தியாவின் முகத்தை உலக அரங்கில் இது
மாற்றுமா..? என்னமாதிரியான ஒரு வர்ணத்தைப்
பூசப்போகிறது? பச்சை நிறத்தை ஆரஞ்சு நிறம்
மறைத்துவிடுமா..? போகப்போகத்தான் தெரியும்..

பழைய சட்டத்தின் படி,
இந்தியாவில் பிறந்தவர்களும், இந்தியாவிற்கு
முறையாக அனுமதியோடு வந்து
11 வருடங்கள் வாழ்ந்தவர்களும் மட்டுமே
இந்திய குடியுரிமை பெற முடியும்.
முறையின்றி இந்தியாவில் குடியேறிய யாரும்
இந்தியாவில் குடியுரிமை பெற முடியாது.
இந்த சட்டத்திருத்த மசோதா மூலம் ஆப்கானிஸ்தான், 
பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில்
 இருந்து மத பிரச்சனை காரணமாக, 
இந்தியாவிற்கு முறையின்றி வரும் மக்கள் 
இந்தியாவில் குடியுரிமை பெற முடியும். 
அரசு அவர்களை கைது செய்யாது.
இவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.
 அதாவது அந்த மூன்று நாடுகளில் இருந்து வரும் 
கிறிஸ்துவர், இந்து, சீக்கியர், ஜைனர், கிறிஸ்தவர், 
பார்சி மற்றும் புத்த மதத்தினர் இந்தியாவில் 
குடியுரிமை பெற முடியும்.
பிஜேபி இந்த அண்டை நாடுகளிலிருந்து 
இந்தியாவுக்கு வரும் இசுலாமியர்களை
 தடை செய்திருப்பதுஇருக்கட்டும்.
பிஜேபி அப்படித்தான் இருக்கும்.
ஆனா..
இவர்களின் பட்டியலில் இலங்கை விடுபட்டிருப்பது ஏன்?
இலங்கையிலிருந்து இந்தியா வரும் 
இந்து , கிறித்துவர் மற்றும் புத்த மத த்தினருக்கும்
 இந்திய அரசு குடியுரிமை வழங்குமா..?

இதில் இருக்கும் விடுபட்ட நாடுகளையும்
விடுபட்ட இனத்தவரும் மத த்தினரும்..
கவனிக்கப்பட வேண்டியதாகிறது..
சரவணா…
வெங்காய கவலையில் இதைக் கவனிக்காம
விட்டுடாதேய்யா..

No comments:

Post a Comment