Thursday, December 5, 2019

டிசம்பர் 06.. புத்தன் சிரிக்கிறான்..

Image result for very rare photo of ambedkar"டிசம்பர் 06
தாதர் சைத்யபூமியை நோக்கி..
கடல் அலைகள் ஆர்ப்பரித்து ஆர்ப்பரித்து
அடங்கிவிட்ட தோ..!
இந்த விடியல் நேற்றைய விடியல் போலில்லை.
புத்தக அலமாரியிலிருந்து சரிந்து விழுந்துவிட்ட
புத்தகங்களை அடுக்கி வைப்பதில்
சோர்ந்து போய்விட்டன என் கைகள்.
அறிவாயுத த்தை
அஹிம்சையும் சாதிக்கோடாரியும் பிளந்து ரத்தம்
குடித்ததும் தின்று தீர்த்த தும் ..
இன்னும் கடற்கரையில் கரைக்க முடியாத
அஸ்தியாய் ..
சாலையோரத்து குடிசைகளின் குப்பைமேடுகளுக்கு
நடுவில் எப்போதும் பறக்கிறது நீல நிறத்தில்
அசோகச்சக்கரம்.
கோட்டு சூட்டு அணிந்த உன் புகைப்படங்கள்
குடிசைகளுக்கு ஒளி ஊட்டவில்லை, உண்மைதான்.
உயிரூட்டிக் கொண்டிருக்கிறது என்பதை
இந்த நாளின் ஒவ்வொரு துளியும் தன் கதையாக
எழுதிக்கொண்டிருக்கிறது.
என் பெரு நகரத்தின் பெருமூச்சில் கரைந்துப் போகிறது புத்தகத்தின் எழுத்துகள்.
குடிசைகளில் நீ இருப்பது
புத்தக ஜீவிக்கு அவமானமாக இருக்கிறதோ..?
புத்தன் சிரிக்கிறான்.
ஆஹா .. புத்தனின் சிரிப்பு..
அணுகுண்டு சோதனைக்கு நீங்கள் வைத்த
ரகசிய மொழியல்லவா..
அணுகுண்டுகளின் அக்னிச்சிறகுகள்
கனவுகள் காணுகின்றன.
ஊமையின் கனவுகள் இன்னும் எழுதப்படவில்லை.
உன் மொழியை யாரால் எழுத முடியும்?
டிசம்பர் 06..
அயோத்தியை நினைவூட்டும் அரசு பயங்கரவாதம்.
திட்டமிட்டே இந்நாளைத் தேர்வு செய்தவர்களின்
பதட்டம் ஏனோ தணியவில்லை.
நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்புகள்
அரசு பயங்கரவாதமாய் அச்சுறுத்துகின்றன..
தீண்டாமைச் சுவர்களில் எழுதப்பட்டிருக்கிறது
இந்த தேசத்தின் சரித்திரம்.
இது பாதிக்கப்பட்டவனின் பதட்டம் மட்டுமல்ல..
சைத்ய பூமியை நோக்கி.. ஜனக்கடல் திரும்பும்
நாளில்.. நானும் சாட்சியாக..
(2)
A Constitution for the Demons
on 19 March 1955, Dr Anup Singh, a Rajya Sabha member
 from Punjab, brought up Ambedkar’s remark, when the
 Fourth Amendment Bill was being discussed. Dr Singh asked, 
“Last time when you spoke, you said that you would burn the Constitution.”
Do you want a reply to that? I would give it to you right here.
 My friend says that the last time when I spoke, 
I said that I wanted to burn the Constitution. Well, in a hurry I did not explain
 the reason. Now that my friend has given me the opportunity, 
I think I shall give the reason. The reason is this: We built a temple 
for god to come in and reside, but before the god could be installed, 
if the devil had taken possession of it, what else could we do except 
destroy the temple? We did not intend that it should be occupied
 by the Asuras. We intended it to be occupied by the Devas. 
That’s the reason why I said I would rather like to burn it.

(BR Ambedkar in the Rajya Sabha on 19 March 1955.)

1 comment: