Monday, November 25, 2019

அசுரன்

மராத்திய மாநில அரசியல் செய்திகளையும் 
திருப்பங்களையும் கவனித்துக் கொண்டிருந்த 
கல்லூரி பேராசிரியர் மன உளைச்சலுக்கு ஆளாகி
 விடுமுறைக்கு விண்ணப்பித்து இருப்பதாக
 பத்திரிகை செய்தி வாசித்தேன்.
இன்று பிற்பகல் அசுரன் திரைப்படம் 
ப்ரைம்விடீயோவில் பார்த்தேன். 
தனுசின் நடிப்பு அபாரம். ஆனால் திரைப்படத்தின்
 சண்டைக் காட்சிகள்.... எம் ஜி ஆர் படத்தின்
 சண்டைக்காட்சிகளைப் போல ரசனைக்குரியதல்ல. 
அதன் நிஜம் முகத்தில் அறைகிறது. 
மீண்டும் ஒரு முறை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தாலும் 
பார்ப்பதைத் தவிர்ப்பேன்
.
காரணம் இதனால் ஏற்படும் மன அழுத்தம்.
 இம்மாதிரியான அனுபவங்கள் எனக்கு இல்லை
 என்பதாலேயே அசுரனை புனைவு என்று நினைத்து
 நிஜத்திலிருந்து தப்பிக்க முடியவில்லை
வெட்கமாகவும் வேதனையாகவும் இருக்கிறது.
 அதைவிட இப்படத்தின் இறுதியில் சொல்லிய அந்த வரிகள்...
 " நிலம் வைத்திருந்தால் பிடுங்கிக் கொள்வார்கள், 
பணம் வைத்திருந்தால் பிடுங்கிக் கொள்வார்கள்.
 படிப்பு... அதுமட்டும் தான் .."
ஆம் வெற்றிமாறன்.. 
அப்படித்தான் நினைத்தோம்.. நினைக்கிறொம்.
 ஆனால் அதுவும் நிஜமல்ல என்ற யதார்த்தம் 
மிகக் கொடூரமாக .. முகத்தில் அறைகிறது. ..

1 comment: