இனி, கார்ப்பரேட்டுகளின் உலகம் தான்.
முதலாளிகளை எதிர்க்கிறோம். ஆனால் அவர்கள் இல்லை
முதலாளிகளை எதிர்க்கிறோம். ஆனால் அவர்கள் இல்லை
என்றால் இந்தியாவில் வேலைவாய்ப்புகளை
யார் கொடுப்பார்கள்..!
வெட்கத்தை விட்டு ஒத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது.
. நம் ஒவ்வொருவர் குடும்பத்திலும் நம் பிள்ளைகள்,
மருமகன் கள், பேரன், பேத்தி, அண்ணன் தம்பி
இப்படி யாராவது இந்த முதலாளிகளின் அலுவலகத்தில்
வேலை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
நான் கூட அரசு ஊழியரல்ல. ஒரு பன்னாட்டு வங்கியில் தானே
வேலைப் பார்த்து வயித்துப் பிழைப்பு நடத்தினேன்.
. இனி, எந்த ஒரு சித்தாந்தமும் கார்ப்பரேட்டுகளைப்
புறம் தள்ளிவிட்டு பொருளாதரம் குறித்து பேசவே முடியாது.
இதுதான் நிதர்சனம். உலகமயமாதலை எதிர்த்து பேசியது
கூட போதும். அந்தப் பாதையில் வெகுதூரம் பயணித்துவிட்டோம்.
இனி, திரும்பிச் செல்வதோ அல்லது அதை விலக்குவதோ
உலகப் பொருளதார நிலைப்பாட்டில்
எந்த ஒரு நாடும் சமூகமும் செயல்படுத்தக் கூடியதல்ல.
இனி, நாம் பேச வேண்டியதும் செய்ய வேண்டியதும்
முதலாளிகளின் சமூகக் கடமை, சமூகப் பொறுப்புகள் குறித்துதான் .
அதாவது கார்ப்பரேட்டுகளின் வரவில் (turn over not profit)
குறிப்பிட்ட ஒரு சதவீதம் சமூகத்திற்கு செலவு செய்யப்பட வேண்டும்.
இது கட்டாயமாக்கப்பட வேண்டும்.
எனக்குத் தெரியும், உங்களில் பலர் இது அரசின் கடமையல்லவா,
இதை ஒரு முதலாளியின் கடமையாக்குவது தவறல்லவா
என்று கேட்க கூடும்.
நாம் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுப்பவர்கள் Tதான்
நாம் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுப்பவர்கள் Tதான்
நம்மை ஆட்சி செய்கிறார்கள் என்ற மாய பிம்பத்தை
எத்தனை காலம் தூக்கி சுமப்பது?
அவர்கள் இவர்களின் ஏஜண்டுகள் தான் என்பதை வெட்கமின்றி ஏற்றுக்கொள்வோம்
.'
நல்ல ஏஜண்டுகள் தேவை.
கமிஷனுடன் வேலை செய்வார்கள், செய்யட்டும்.
வேலை ஒழுங்கா நடந்தா சரிதான்..
(விடிவதற்கு இன்னும் சில மணித்துளிகள் தான்.
அதிகாலை 5.10க்கு)
யதார்த்தம் கசக்கத்தான் செய்யும்.ஆனாலும் என்ன செய்வது அதுதானே உண்மையாக இருக்கிறது.உறுத்தும்படியாய் ஆதங்கத்தை பதிவு செய்த விதம் அருமை வாழ்த்துக்கள்
ReplyDeleteஉள்ளத்து எதிர்பார்ப்பை அப்படியே பகிர்ந்து உள்ளீர்கள்.
ReplyDeleteநாட்டு நடப்பு இப்படியே நகருகிறது.