Wednesday, November 6, 2019

திருவள்ளுவரும் உங்கள் சாதி சான்றிதழும்



ட்டேய் சரவணா..
நாலு நாளு வெளியே போயிட்டு வருவதற்குள்
இம்புட்டு நாடகம் நடந்திருக்கே..
சும்மா சொல்லப்பிடாதுப்பா..
திருவள்ளுவருக்கு காவி உடை
ருத்திரடாச்ச மாலை
நெற்றியில் விபூதி குங்கும ம்
ரொம்ப தமாஷா இருக்கு இதெல்லாம்.
Image may contain: Valluvar Koddam, sitting and beard
1)வள்ளுவத்தில், "திருவடி" என்ற சொல் வருகிறது
எனவே அது வைணவம் (அ) பெளத்தம்!
2) வள்ளுவத்தில், "எண்குணத்தான்"
 என்ற சொல் வருகிறது = அது சமணம் (அ) சைவம்!
* வள்ளுவத்தில், "இந்திரனே சாலும் கரி" என்று வருகிறது
ஆகையினால் அது இந்து மதம்!
இதெல்லாம் புதுசில்ல.
நிறைய கேட்டு கேட்டு பழகிட்டோம்.
இப்போ போட்டிருக்கிற வள்ளுவர் கெட்டப்
விபூதியோட இருக்கு.
அவருக்கு ஏன் நாம ம் போடலைனு தெரியல.
நாம ம் போட்டு அவரை அப்படியே இன்னொரு
அவதாரத்திற்கு கொண்டுவர முடியாமல்
எது தடுக்கிறது..?
அவரோட பிறப்பா..
அவர் பிறப்பில் நீங்க ஏற்கனவே ஸ்தாபித்திருக்கும்
புனைவுகளின் உச்சமா..?
அவருக்கு நீங்க கொடுத்திருக்கும் சாதிச்சான்றிதழ்
அவருக்கு நாம ம் போட்டு அவதாரமாக்காமல்
தடுக்கிறதா..!
இங்க தான் ரொம்ப ரொம்ப டவுட் வருது..மச்சான்..
நீங்க போட்டு விடுகிற இந்த காஸ்ட்யூம் வேடங்கள்
 பற்றி எல்லாம் எங்களை மாதிரி ஆட்களுக்கு எதுவும்
பிரச்சனையே இல்லய்யா.
என்ன மாதிரி வேணும்னா வேஷம் போட்டுவிடு.
யாரு வேண்டாம்ங்கிறா.
வேணும்னா கையில ஒரு திருவோட கொடுத்து
நீ தெருத்தெருவா அலைய விட்டா கூட
அது உன்னோட விருப்பமய்யா.
அந்த மனுஷனுக்கு இதெல்லாம் பெரிய பிரச்சனையில்லை
அவரோட பேத்தி எனக்கும் தான்.

என்ன… இந்த தாடி மீசை காவி வெள்ளை
எதுவுமே அவருக்கான அடையாளமில்லை ..
அடையாளங்களைத் துறந்தவனை
உங்களால் எதுவும் செய்திட முடியாது.
வள்ளுவரை திருக்குறளை .. உன்னோட புண்ணியத்தில 
இப்ப்போ நிறைய பேர் தேடி வாசிக்க வைத்துவிட்டதற்காக
உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்லுனுமய்யா.

No comments:

Post a Comment