FIREBRAND – feminist movie
இப்படித்தான் இத்திரைப்படம்
குறித்த
விமர்சன ங்கள்
வெளிவந்தன.
பெண்ணிய திரைப்படம்
என்ற அடையாளமே
இத்திரைப்பட த்தைப்
பார்க்க வேண்டும்
என்ற ஆவலைத் தூண்டியது.
இன்னொரு காரணம்
இத்திரைப்பட த்தில்
நடித்திருக்கும் நடிகை usha Jadav.
பிரியங்கா சோப்ரா
தயாரித்திருக்கும் இத்திரைப்படம்
பாலியல் வன் கொடுமைக்கு
ஆளான பெண்களுக்கு
சமர்ப்பணம் என்று
சொல்கிறது.
திரைக்கதையும் இது தான்.
பள்ளிக்கூடம்
போகும் வயதில் மாணவியை
ஒருவன் பாலியல்
வல்லாங்கு செய்கிறான்.
அது அவளுடைய குற்றமல்ல.
ஆனாலும் சமூகத்தின்
அவமானப் பார்வையைத்
தாங்க முடியாமல்
பெற்றோர்கள் அவளை
அனாதையாக விட்டுவிட்டு போய்விடுகிறார்கள்.
நீதிமன்றமோ அப்பெண்ணைக் கூண்டில் ஏற்றி
பலமுறை வல்லாங்கு
செய்கிறது. அவர்களின்
கேள்விகள் அவளைத்
துகிலுரிக்கின்றன.
தொண்டு நிறுவனத்தின்
ஆதரவில் படித்து
வக்கீலாகும் அவள்
மணமுறிவு வாங்கிக் கொடுப்பதில்
வெற்றி பெற்ற டைவர்ஸ்
வக்கீலாக பெயர் எடுக்கிறாள்.
அவளைப் பற்றி அனைத்தும்
அறிந்த அவள் தோழன்
அவளைத் திருமணம்
செய்து கொள்ள விரும்புகிறான்.
அவர்களின் திருமண
வாழ்வில் கணவன் மனைவி
உடலுறவு அவளுக்கு
பாலியல் வன்முறையாகவே
தொடர்கிறது. கணவனின்
உடல் அக்கணத்தில்
அவளை வல்லாங்கு
செய்த அந்த ஆணின் உடலாக
மாறி .. அவர்கள்
உறவை கேள்விக்குறியாக்கும்
நிலைக்குத் தள்ளுகிறது.
காதல் கணவனும் தன்னுடைய
இந்தப் பிரச்சனையால்
ஏன் பாதிக்கப்பட வேண்டும்?
திருமண உறவை முறித்துக்கொண்டு
நண்பர்களாகவே
இருக்கலாம் என்று
அவள் நினைக்கிறாள்.
ஆனால் அவன் அவளுடைய
கடந்த காலத்தை
அவள் மறக்க வேண்டும்
என்பதற்காக அவளுடன்
போராடுகிறான்.
மருத்துவர் உதவியை நாடுகிறார்கள்.
மருத்துவர் அவளுக்கு
நட ந்த தை எல்லாம் தினமும்
எழுதி கண்ணாடி
முன்னால் நின்று வாசிக்கச் சொல்கிறார்.
தினமும் எழுத எழுத
வாசிக்க வாசிக்க…
எழுத எழத வாசிக்க
வாசிக்க…
அது அவளிடமிருந்து
விலகி ஒரு கதையாகிவிடுகிறது.
அந்த இரவில் அவளைச்
சந்திக்க வரும்
இன்னொரு ஆடவனுடன்
அவள் தன்னை மறந்து
உடலுறவு கொள்கிறாள்.
அக்காட்சி வரும்
போது..
மனம் படபடக்கிறது.
எல்லா சினிமாக்களிலும்
காட்டுவது போல
கணவன் இப்போது
வரப்போகிறான்
கதவைத் திறக்கப்போகிறான்
என்று
நினைக்கிறோம். ஆனால் அப்படி எதுவும்
நடக்கவில்லை.
ஊருக்குப் போன
கணவனை உடனே வரச்
சொல்லுகிறாள்.
அவளிடம் ஒரு மாற்றம்
இருப்பதை அவனும்
உணர்கிறான். அவளும் நடந்த அனைத்தையும்
சொல்கிறாள்.
மாதவ்… நீ எப்போதும்
சொல்வாயே..
காதல் வேறு, உடலுறவு
வேறு என்று.
நேற்று அதை உணர்ந்தேன்…
ஓர் ஆணுடலும் பெண்ணுடலும்
மட்டும்
நேற்றைய உறவில்
இருந்த தை உணர்ந்தேன்.
அவ்வளவு தான்.
அதில் காதல் எதுவுமில்லை”
என்று சொல்லும்
போது…
அவன் அவளைக் கட்டி
அணைத்துக் கொள்கிறான்.
ஆண் பெண் உடலுறவில்
காதல் இல்லை என்றால்
அது வெறும்
இரு உடல்களின்
பசி, ஹார்மோன் களின்
வேலை.. “
காதலுடன் நடக்கும்
உடலுறவு தான்
ஆண் பெண் உடலுறவுக்கான
அர்த்தம்..
இப்படியாக நான்
புரிந்து கொண்டேன்.
பாலியல் வன் கொடுமை
என்பது
அதை அனுபவித்த
பெண்ணின் வாழ்க்கையை
அவள் உறவுகளிலும்
நினைவுகளிலும்
கடைசிவரைத் துரத்திக்
கொண்டே தான்
இருக்கிறது.
சுன ந்தாவின் கணவன்
கதைப்பாத்திரம்
ஒரு கனவுப்பாத்திரமாகவே
..இருக்கிறது.
சுன ந்தாக்களுக்கு
இம்மாதிரி கணவர்கள்
வாய்ப்பார்களா?
No comments:
Post a Comment