90,000 பாகிஸ்தான் வீர ர்களை சிம்லா ஒப்பந்தப் படி
நாம் விடுதலை செய்துவிட்டோம்.
ஆனால் 54 இந்திய வீர்ர்கள் பாகிஸ்தான் சிறையில்..
அவர்களின் நிலை என்ன என்று யாருக்கும் தெரியாது.
அவர்களுக்கு நம்மால் முடிந்த்து MISSING 54 என்ற
அடையாளம் மட்டும் தான்.
அபி ந ந்தனின் விடுதலைக்குப் பின்
மிஸ்ஸிங்க் 54 குரல்கள் மீண்டும் ஒலிக்கின்றன.
மரணித்துவிட்ட தாக அறிவிக்கப்பட்ட மகன்
பாகிஸ்தான் சிறையிலிருந்து “நான் இருக்கிறேன்”
என்று துண்டுச்சீட்டு அனுப்புகிறான்.
1989ல் பெனாசீர் பூட்டோ ஒத்துக்கொள்கிறார்
ஆம்.. இந்திய வீர்ர்கள் எங்கள் சிறைகளில் இருக்கிறார்கள்
என்று,
இந்த 54 பேரில் தரைப்படை வீர்ர்கள் 27 .
விமானப்படை வீர்ர்கள் 24 .
கப்பற்படை வீர்ர்கள் 2
எல்லைப் பாதுகாப்பு படை வீர்ர் 1.
48 வீர்ர்கள் 1971 போரில் காணாமல் போனவர்கள்
3 வீர்ர்கள் 1965 போரில் காணாமல் போனவர்கள்.
சற்றொப்ப 47 ஆண்டுகள் ஓடிவிட்டன.!!!
இனி,
அவர்கள் இந்திய வரலாற்றில் நிரந்தரமாகவே
காணாமல் போனவர்களாகவே இருப்பார்கள்.
ஒவ்வொரு முறையும் அபிநந்தன்களை வெற்றிகரமாக
அழைத்துவரும் போது அந்த முகம் தெரியாத
54 இந்தியவீர ர்களின் வீரமும் தியாகமும்
அவர்கள் குடும்பத்தாரின் கண்ணீருடன் சேர்ந்து
இந்திய மண்ணின் ஏக்கப் பெருமூச்சாய்
நினைவில் நிற்கும்..
No comments:
Post a Comment